apply banana for healthy hair care

தலைமுடி வலிமைப் பெற வாழைப்பழ ஹேர் மாஸ்க் பயன்படுத்துங்க!

<p style="text-align: justify;"><span style="text-align: justify;">தலைமுடியில் உள்ள பொடுகு பிரச்சனை முதல் முடி உதிர்வதைக் குறைக்க வேண்டும் என்றால், வாழைப்பழம் மற்றும் பப்பாளி கொண்டு தயார் செய்யப்படும் ஹேர் மாஸ்க் பயன்படுத்தலாம்.</span>
Editorial
Updated:- 2024-04-01, 21:03 IST

தலைமுடியை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க வேண்டும் என்றால் விலையுயர்ந்த பொருள்களை வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். இதன் மூலம் நிரந்தர தீர்வு கிடைக்கும் என்றால் நிச்சயம் சாத்தியமாகாது. உங்களது சருமத்தையும், தலைமுடியையும் பாதுகாப்பதற்கு வீட்டில் பயன்படுத்தக்கூடிய சில சமையல் பொருள்கள் நிச்சயம் உங்களுக்கு உதவியாக இருக்கும். இதோ அவற்றில் ஒன்றான வாழைப்பழ ஹேர் மாஸ்க் எப்படி பயன்படுத்துவது? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.  

banana ()

மேலும் படிக்க: முடி வரண்டு கொத்து கொத்தாய் கொட்டுவதை தடுக்க வீட்டு சீரம் 

வாழைப்பழ ஹேர் மாஸ்க் பயன்படுத்தும் முறை:

வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி ஆக்ஸிடன்டகள் என பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், தலைமுடி ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவியாக உள்ளது. வாழைப்பழம், கற்றாழை, தேன், தேங்காய் ஆகியவற்றைச் சேர்த்து செய்யப்படும் ஹேர் மாஸ்க் உங்களது தலைமுடியை வலிமையுடன் வைத்திருக்க முடியும்.

வாழைப்பழ தேங்காய் எண்ணெய் ஹேர் மாஸ்க்

தேவையான பொருட்கள்:

  • வாழைப்பழம் - 2
  • தேங்காய் எண்ணெய் - சிறிதளவு 

செய்முறை:  

வாழைப்பழத்தைக் கொண்டு செய்யப்படும் ஹேர் மாஸ்கிற்கு முதலில் நீங்கள் வாழைப்பழத்தை நன்றாக பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கலந்து கொள்ளவும். பின்னர் இந்த பேஸ்ட்டை தலைமுடியின் உச்சந்தலையிலிருந்து நுனி வரை நன்றாக தேய்த்துக் கொள்ளவும்.  ஒரு மணி நேரத்திற்குப் பின்னதாக அலசினால் போதும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தலைமுடியின் வளர்ச்சிக்கு உதவியாக உள்ளது.

வாழைப்பழ கற்றாழை ஹேர் மாஸ்க் :

தேவையான பொருட்கள்:

  • வாழைப்பழம் - 2
  •  தேன் - 2 ஸ்பூன்
  • தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன்
  •  கற்றாழை -1 ஸ்பூன்

செய்முறை:

முதலில் வாழைப்பழத்தைத் தோலுரித்து மென்மையான பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ளவும். பின்னர் இதனுடன் தேன், தேங்காய் எண்ணெய் மற்றும் தேவைப்பட்டால் கற்றாழை ஜெல்லைச் சேர்த்து கலக்கினால் போதும். தலைமுடிக்கு வலுப்பெறும் ஹேர் மாஸ்க்  ரெடி.  இதை வாரத்திற்கு ஒருமுறையாவது தலைமுடிக்குப் பயன்படுத்தும் போது தலைமுடி வலுப்பெறுகிறது.

வாழைப்பழ பப்பாளி ஹேர் மாஸ்க்:

 hair mask care

இதை செய்வதற்கு முதலில் வாழைப்பழம் மற்றும் பப்பாளியை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த ஹேர் மாஸ்க் உச்சந்தலையிலிருந்து நுனி வரை நன்கு அப்ளை செய்துக் கொண்டு ஒரு மணி நேரத்திற்குப் பிறகு வெது வெதுப்பான நீரைக் கொண்டு அலசவும். இதில் ஊட்டச்சத்துக்கள் அனைத்தும்  தலைமுடியைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது.

மேலும் படிக்க: வெயிலிலிருந்து முகத்தைப் பராமரிக்க ஐஸ் க்யூப் யூஸ் பண்ணிக்கோங்க! 

இதுபோன்ற வழிமுறைகளைப் பின்பற்றி உங்களுடைய தலைமுடியை ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.

Image source- Google

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com