உலக புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு பிட்டுக்கு மண் சுமந்த அலங்காரத்தில் விநாயகர் அனைத்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெகு விமர்சையாக நடைபெறும் 10 நாள் திருவிழாவை காண மக்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலையில் இருந்தே மக்கள் விநாயகரை காண வரிசையில் நின்று சவாமி தரிசனம் செய்தார்கள்.
கடந்த 18ஆம் தேதி பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில் கொடியேற்ற தொடங்கி, திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. உற்சவர் கற்பக விநாயகர் ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் மக்களை காண திருவீதி வருவர். விநாயகர் வரும் விதவிதமான வாகனத்தை காண மக்கள் கூட்டம் அலைமோதும். ரிஷபம், குதிரை, மூஷிகம் மற்றும் குதிரை போன்ற வாகனங்களில் விநாயகர் பவனி வருவார்.
இந்த் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கொண்டாடப்படுவது விநாயகர் சதுர்த்தியாகும். இந்த திருவிழாவின் இறுதி நாளான இன்று தீர்த்தவாரி உற்சவமும், மோதகம் படையலும் இன்று நன்பகல் நடைபெறும். விநாயகர் சதுர்த்திக்கு பிள்ளையார்பட்டியில் விநாயகர் பக்தர்களுக்கு புதுவிதமாக மக்களுக்கு காட்சி அளித்தார். இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்திக்கு விநாயகரை போற்றி அவரின் அசிர்வததை பெறுவோம்.
மேலும் படிக்க: விநாயகர் சதுர்த்தி தினத்தில் பின்பற்ற வேண்டிய வழிபாட்டு முறைகள்
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation