
கூந்தலை பராமரிப்பதற்காக பல விதமான பொருட்களை கடைகளில் இருந்து வாங்குகிறோம். ஆனால், இயற்கையான முறையில் கூட நமது கூந்தலை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். அதற்கு பயன்படும் ஒரு ஹேர் சீரம் தயாரிப்பது இப்போது மிகவும் சுலபம் ஆகும்.
மேலும் படிக்க: Pimple home remedy: முகப்பருக்களால் அவதிப்படுபவரா நீங்கள்? இந்த 5 வீட்டு வைத்திய முறையை பின்பற்றவும்
கிராம்பு, கருஞ்சீரகம், வெந்தயம், ரோஸ்மேரி மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றின் சத்துகளை ஒருங்கிணைத்து, வீட்டில் எளிமையாக, செலவு குறைவான ஒரு ஹேர் சீரம் தயாரிப்பது எப்படி என்று இந்தப் பதிவில் பார்க்கலாம். இதை செய்வது மிக எளிது மட்டுமல்ல, உங்கள் கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளையும் இது நிறைவாக தருகிறது.
இரசாயனம் நிறைந்த சீரம்கள் கூந்தலை தற்காலிகமாக பளபளப்பாக்குகின்றன. ஆனால், இந்த வீட்டில் தயாரிக்கும் சீரம், கூந்தலின் வேர்களிலிருந்து செயல்படுகிறது. இது உச்சந்தலைக்கு ஊட்டமளித்து, முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்தி, புதிய முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இது இலகுவாகவும், பிசுபிசுப்பு தன்மையின்றியும் இருப்பதால், இரவில் பயன்படுத்தினாலும் தலையணையில் கறைபடாது.

ஒரு பாத்திரத்தில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றவும். அதில் 1 டேபிள்ஸ்பூன் கிராம்பு, 1 டேபிள்ஸ்பூன் கருஞ்சீரகம், 1 டேபிள்ஸ்பூன் வெந்தயம், 1 டேபிள்ஸ்பூன் ரோஸ்மேரி மற்றும் 10 கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்க்கவும். இந்த கலவையை 7-10 நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும். பின்னர், அதை முழுவதுமாக ஆற விடவும். இந்தக் கலவை ஆறியதும், வடிகட்டி ஒரு சுத்தமான ஸ்பிரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளலாம். இவ்வாறு செய்தால் நமக்கு தேவையான ஹேர் சீரம் தயாராகி விடும்.
மேலும் படிக்க: Hair growth tips: அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு உதவும் 5 விதமான சத்துகள்; மிஸ் பண்ணாதீங்க மக்களே
இந்த சீரமின் முழு பலனையும் பெற, தொடர்ந்து பயன்படுத்துவது மிகவும் அவசியம். சீரத்தை உச்சந்தலையில் சரியாக ஸ்பிரே செய்யவும். கூந்தலின் வேர்களுக்கு மட்டும் போதுமான அளவில் பயன்படுத்துங்கள். இதையடுத்து, 2-3 நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யவும். இது சீரம் உறிஞ்சப்படுவதையும், இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தும். இரவு முழுவதும் அதை அப்படியே விட்டுவிடவும். அடுத்த நாள் காலை, மிதமான ஷாம்பூ கொண்டு குளிக்கலாம். இதை வாரத்திற்கு
3-4 முறை பயன்படுத்தலாம். தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், 6-8 வாரங்களில் முடி உதிர்வு குறைவதையும், புதிய முடிகள் வளர்வதையும் நீங்கள் காணலாம்.

எந்த விதமான செயல்முறையும் உடனடி அதிசயத்தை நிகழ்த்தாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். 2-3 வாரங்களில் உச்சந்தலையில் பொடுகு குறையும், கூந்தல் பளபளப்பாக இருக்கும். 4-6 வாரங்களில் முடி உதிர்வு கணிசமாக குறையும். 6-8 வாரங்களில், நெற்றிப் பகுதி மற்றும் வகிடு பகுதியில் புதிய முடிகள் வளர தொடங்கும். 3 மாதங்களுக்கு மேல், கூந்தல் அடர்த்தியாகவும், வேர்கள் வலுவாகவும் இருக்கும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com