
குளிர்காலம் தொடங்கிவிட்டால் இதமான காலநிலையோடு சேர்த்து, சரும வறட்சியும் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. காற்றில் உள்ள ஈரப்பதம் குறைவதால், நமது சருமம் அதன் இயற்கையான மென்மையை இழந்து, வறண்டு, பொலிவிழந்து காணப்படும். இந்த நேரத்தில் அதிகப்படியான இரசாயனம் கலந்த க்ரீம்களை பயன்படுத்துவதை விட, நம் சமையலறையில் இருக்கும் இயற்கையான பொருட்களை கொண்டு சருமத்தை பராமரிக்கலாம்.
இயற்கை பொருட்கள் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை அளிப்பதோடு மட்டுமல்லாமல், குளிர்காலத்தில் ஏற்படும் தோல் வெடிப்பு மற்றும் சுருக்கங்களையும் தடுக்கின்றன. உங்கள் சருமம் எண்ணெய் பசை கொண்டதாக இருந்தாலும், வறண்டதாக இருந்தாலும் அல்லது சென்சிடிவ் சருமமாக இருந்தாலும், அதற்கேற்ற பிரத்யேகமான 5 ஃபேஸ் பேக்குகளை வீட்டிலேயே எளிதாக தயாரிப்பது எப்படி என்பதை காண்போம்.
சருமம் பளபளப்பாக இருக்கவும், இழந்த பொலிவை மீட்டெடுக்கவும் இந்த ஃபேஸ் பேக் மிகவும் உதவும். தேன் மற்றும் பன்னீர் ஆகிய இரண்டும் சருமத்தை சரிசெய்யும் மற்றும் ஊட்டமளிக்கும் பண்புகளை கொண்டுள்ளன. குளிர்காலத்தில் முகத்தில் ஏற்படும் மந்தமான நிலையை இது மாற்றும்.
மேலும் படிக்க: Benefits of Sandalwood: உங்கள் சருமத்தில் சந்தனம் பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
குளிர்காலத்தில் சருமம் வறண்டு போனாலும், சிலருக்கு எண்ணெய் பசை பிரச்சனை இருக்கும். அத்தகையவர்களுக்குக் கடலை மாவு ஒரு சிறந்த தீர்வாகும். இது முகப்பரு வராமல் தடுப்பதோடு, சருமத்திற்கு தேவையான பிரகாசத்தையும் தருகிறது.

சருமம் சில இடங்கள் வறண்டும், சில இடங்கள் எண்ணெய் பசையுடனும் இருந்தால், இந்த ஃபேஸ் பேக் உங்களுக்கு ஏற்றது. இது கருமையை போக்குவதோடு, வறட்சி மற்றும் எண்ணெய் பசையை சமன் செய்யும்.
மேலும் படிக்க: Multani Mitti Face Packs: குளிர்காலத்தில் முகப்பருவை கட்டுப்படுத்த உதவும் டாப் 5 முல்தானி மட்டி ஃபேஸ் பேக்
குளிர்காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது உணர்திறன் வாய்ந்த சருமம் (Sensitive Skin) கொண்டவர்கள் தான். சருமம் சிவந்து போதல் அல்லது அரிப்பு ஏற்படுவதை தடுக்க ஓட்ஸ் உதவுகிறது. இது சருமத்தை மென்மையாகவும், ஊட்டத்துடனும் வைக்கும்.

சரும நிறத்தை மேம்படுத்தவும், பொலிவாக்கவும் கேரட் மிகச்சிறந்த பொருள். இதில் உள்ள பீட்டா கரோட்டின் சருமத்தில் உள்ள சீரற்ற நிறத்தை மாற்றும். தேன் சருமத்தை மாய்ஸ்சரைஸ் செய்யும். இது எண்ணெய் பசை சருமம் கொண்டவர்களுக்கும் ஏற்றது.
குளிர்கால சரும பராமரிப்பு என்பது கடினமான ஒன்றல்ல. உங்கள் சமையலறையில் இருக்கும் இந்த பொருட்களை கொண்டு, வாரத்திற்கு சில நாட்கள் ஒதுக்கி பராமரித்தால் போதுமானதாக இருக்கும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com