herzindagi
image

Aloe Vera for Hair: குளிர்காலத்தில் முடி உதிர்வை கட்டுப்படுத்த உதவும் கற்றாழை; இந்த 4 ஹேர் மாஸ்கை பயன்படுத்தவும்

Winter Hair Care Tips: குளிர்காலத்தில் முடி உதிர்வை கட்டுப்படுத்த உதவும் கற்றாழை ஹேர் மாஸ்க் எப்படி தயாரித்து பயன்படுத்தலாம் என்று இதில் காண்போம். இது கூந்தலை மிருதுவாக்க உதவும்.
Editorial
Updated:- 2025-12-17, 19:24 IST

Benefits of Aloe Vera: குளிர்காலம் வந்துவிட்டால் கூந்தல் தொடர்பான பிரச்சனைகளும் அதிகரிக்க தொடங்கி விடும். காற்றில் ஈரப்பதம் குறைவதாலும், குளிர்ந்த காற்றினாலும் தலைமுடி வறண்டு போவது, பொடுகு தொல்லை மற்றும் அதீத முடி உதிர்வு ஏற்படுவது இயல்பு. இந்தக் காலத்தில் உங்கள் கூந்தலை பராமரிக்க விலை உயர்ந்த இரசாயன பொருட்களை நாடுவதை விட, இயற்கையின் வரப்பிரசாதமான கற்றாழையை பயன்படுத்தலாம்.

குளிர்காலத்தில் முடி உதிர்வை கட்டுப்படுத்த உதவும் கற்றாழை ஹேர் மாஸ்க்:

 

கற்றாழை, தலைமுடிக்கு தேவையான நீர்ச்சத்தை அளித்து, வேர்களை வலுப்படுத்துகிறது. குளிர்காலத்தில் ஏற்படும் முடி உதிர்வை கட்டுப்படுத்தி, முடியை பளபளப்பாக மாற்ற உதவும் 4 அற்புதமான கற்றாழை ஹேர் மாஸ்க் தயாரிப்பு முறைகளை இதில் விரிவாக காண்போம்.

 

கற்றாழை மற்றும் தயிர் ஹேர் மாஸ்க்:

 

உங்கள் தலைமுடி இழந்த பொலிவை மீட்டெடுக்கவும், பொடுகு தொல்லையை விரட்டவும் இந்த மாஸ்க் சிறந்தது. தயிரில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன.

 

தேவையான பொருட்கள்:

 

  • தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
  • கற்றாழை ஜெல் - 2 டேபிள் ஸ்பூன்
  • தேன் - 2 டேபிள் ஸ்பூன்

 

செய்முறை:

 

  • இந்த மூன்று பொருட்களையும் ஒரு கிண்ணத்தில் ஒன்றாக கலக்கவும்.
  • இந்தக் கலவையை முடியின் வேர் முதல் நுனி வரை நன்றாக தடவவும்.
  • சுமார் 10 நிமிடங்கள் வரை விரல்களால் உச்சந்தலையை மசாஜ் செய்யவும்.
  • பின்னர் 1 மணி நேரம் அப்படியே ஊறவிடவும்.
  • இறுதியாக குளிர்ந்த நீரில் தலைக்கு குளிக்கவும்.
  • இந்த மாஸ்க் போட்ட பிறகு ஷாம்பூ பயன்படுத்துவதையோ அல்லது ஹேர் டிரையர் (Hair dryer) பயன்படுத்துவதையோ தவிர்க்க வேண்டும். மாதத்திற்கு இரண்டு முறை இதை செய்யலாம்.

மேலும் படிக்க: Winter Hair Care Tips: குளிர்காலத்தில் அதிகரிக்கும் முடி உதிர்வை கட்டுப்படுத்த இந்த குறிப்புகளை அவசியம் பின்பற்றவும்

 

கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெய்:

 

மெலிந்த முடியை அடர்த்தியாகவும், நீளமாகவும் வளரச் செய்ய இந்த மாஸ்க் உதவும். வறண்ட மற்றும் சேதமடைந்த முடிக்கு இது ஒரு சிறந்த கண்டிஷனர் போல செயல்பட்டு மென்மையை தரும்.

Hair Care Tips

 

தேவையான பொருட்கள்:

 

  • கற்றாழை ஜெல் - 2 டேபிள் ஸ்பூன்
  • சுத்தமான தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

 

செய்முறை:

 

  • கற்றாழை ஜெல் மற்றும் தேங்காய் எண்ணெயை கலந்து, மிதமான நெருப்பில் சுமார் 30 நிமிடங்கள் காய்ச்சவும்.
  • பின்னர் இந்தக் கலவையை நன்றாக ஆறவைக்க வேண்டும்.
  • இந்த எண்ணெய் ஆறியதும், உச்சந்தலையில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும்.
  • பிறகு ஒரு பழைய துணியால் தலையை கட்டிக்கொண்டு, 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
  • இதையடுத்து, மிதமான ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் பயன்படுத்திக் குளிக்கவும்.
  • சிறந்த பலன்களை பெற வாரத்திற்கு இரண்டு முறை இதை பயன்படுத்தலாம்.

 

கற்றாழை மற்றும் தேங்காய் பால்:

 

இது முடியின் வேர்களுக்கு ஆழமான ஊட்டச்சத்தை அளிக்கிறது. மேலும், இது முடி வளர்ச்சியை தூண்டுவதோடு, இளநரை வராமல் தடுக்கவும் உதவுகிறது.

 

தேவையான பொருட்கள்:

 

  • கற்றாழை ஜெல் - 3 டேபிள் ஸ்பூன்
  • தேங்காய் பால் - 3 டேபிள் ஸ்பூன்
  • தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்

 

செய்முறை:

 

  • அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து மென்மையான பதம் வரும் வரை கலக்கவும்.
  • இதை உச்சந்தலை மற்றும் முடி முழுவதும் தடவவும்.
  • சுமார் 45 முதல் 60 நிமிடங்கள் வரை காத்திருக்கவும்.
  • பின்னர் குளிர்ந்த நீரால் குளித்து விடலாம். இது முடி வறட்சியாக மாறுவதை தடுக்கும்.
  • வாரத்திற்கு இரண்டு முறை இதை பின்பற்றினால் நல்ல மாற்றம் தெரியும்.

மேலும் படிக்க: Winter Hair Care Routine: குளிர்காலத்தில் முடி உதிர்வை குறைக்க இந்த 5 டிப்ஸை அவசியம் பின்பற்றவும்

 

கற்றாழை, ஆலிவ் ஆயில் மற்றும் முட்டை ஹேர் மாஸ்க்:

 

முட்டையில் புரதம் மற்றும் கொழுப்பு சத்துகள் நிறைந்துள்ளன. இது இயற்கையான கண்டிஷனராக செயல்படும். ஆலிவ் ஆயிலில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் ஈ முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்தும்.

Winter Hair Care

 

தேவையான பொருட்கள்:

 

  • கற்றாழை ஜெல் - 3 டேபிள் ஸ்பூன்
  • ஆலிவ் ஆயில் - 2 டேபிள் ஸ்பூன்
  • முட்டையின் மஞ்சள் கரு - 1

 

செய்முறை:

 

  • அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து ஒரு பசை போல தயார் செய்யவும்.
  • இந்த கலவையை உச்சந்தலையில் தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய்யவும்.
  • பிறகு ஒரு ஷவர் கேப் அணிந்து 30 நிமிடங்கள் ஊறவிடவும்.
  • இறுதியாக, குளிர்ந்த நீர் மற்றும் மென்மையான ஷாம்பூ கொண்டு குளிக்க வேண்டும்.
  • மாதத்திற்கு ஒருமுறை இதை செய்வது போதுமானது.

 

இந்த குளிர்காலத்தில் உங்கள் கூந்தலை பாதுகாக்க கற்றாழை ஒரு சிறந்த பொருளாகும். இவற்றில், உங்களுக்கு எளிதானதை தேர்ந்தெடுத்து தொடர்ந்து பின்பற்றி வந்தால், முடி உதிர்வு குறைந்து ஆரோக்கியமான கூந்தலை பெறலாம்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com