herzindagi
image

Honey Face Pack: குளிர்காலத்தில் சரும பொலிவை தக்கவைக்க உதவும் தேன் ஃபேஸ் பேக்; எப்படி தயார் செய்ய வேண்டுமென தெரியுமா?

Winter Skin Care: குளிர்காலத்தின் போது நம்முடைய சரும பொலிவை தக்க வைக்க உதவும் தேன் ஃபேஸ் பேக் தயாரிக்கும் முறை குறித்து இதில் பார்க்கலாம். இவை சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.
Editorial
Updated:- 2025-12-15, 08:13 IST

குளிர்காலம் தொடங்கியதில் இருந்து சருமம் வறண்டு போவது, பொலிவிழப்பது போன்ற பிரச்சனைகள் சாதாரணமாகிவிடுகின்றன. குளிர்ந்த காற்று சருமத்தில் உள்ள இயற்கையான ஈரப்பதத்தை உறிந்து விடுவது இதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. இந்த நேரத்தில் விலை உயர்ந்த இரசாயனம் கலந்த க்ரீம்களை பயன்படுத்துவதை விட, நம் சமையலறையில் இருக்கும் இயற்கையான பொருட்களை பயன்படுத்துவது சிறந்த தீர்வாகும். ஏனெனில், இவற்றில் இருந்து ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு.

குளிர்காலத்தில் சரும பொலிவை தக்கவைக்க உதவும் தேன் ஃபேஸ் பேக்:

 

அந்த வகையில், சரும பராமரிப்பில் தேன் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இது காற்றில் உள்ள ஈரப்பதத்தை ஈர்த்து சருமத்திற்குள் தக்கவைக்க உதவுகிறது. குளிர்காலத்தில் உங்கள் சருமத்தை ஜொலிக்க வைக்கவும், மென்மையாக வைத்திருக்கவும் உதவும் 5 வகையான தேன் ஃபேஸ் பேக்குகளை எப்படித் தயாரிப்பது என்பதை இதில் விரிவாக காண்போம்.

 

தேன் மற்றும் வாழைப்பழம் ஃபேஸ் பேக்:

 

வாழைப்பழம் சரும துளைகளை இறுக்கமாக்கவும், சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவுகிறது. தேனும், வாழைப்பழமும் சேரும் போது சருமம் மென்மையாவதோடு, முகத்திற்கு ஒரு உடனடி பொலிவு கிடைக்கிறது.

 

தேவையான பொருட்கள்:

 

  • பன்னீர் - சில துளிகள்
  • நன்கு மசித்த வாழைப்பழம் - 1 டேபிள் ஸ்பூன்
  • சுத்தமான தேன் - 1 டேபிள் ஸ்பூன்

 

செய்முறை:

 

  • ஒரு கிண்ணத்தில் 2 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் மசித்த வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளவும்.
  • இவை இரண்டையும் நன்றாக கலக்கவும். பின்னர், அதில் சில துளிகள் பன்னீர் சேர்க்கவும்.
  • இந்தக் கலவை ஒரு கெட்டியான பசை பதத்திற்கு வரும் வரை கலக்கவும்.
  • பின்னர், இதை முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் ஊறவிடவும்.
  • இறுதியாக, வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும்.

மேலும் படிக்க: Winter Skin Care: குளிர்காலத்தில் உங்கள் முகத்தை வறண்டு போகாமல் பாதுகாக்க உதவும் டாப் 5 ஹோம்மேட் ஃபேஸ்பேக்

 

தேன் மற்றும் கடலை மாவு ஃபேஸ் பேக்:

 

கடலை மாவு, சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும், சரும செல்களுக்கு ஆழமான ஊட்டச்சத்தை அளிக்கவும் உதவுகிறது. இது சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி பொலிவாக்கும்.

Winter Skin Care

 

தேவையான பொருட்கள்:

 

  • பன்னீர் - சில துளிகள்
  • கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
  • தேன் - 1 டேபிள் ஸ்பூன்

 

செய்முறை:

 

  • ஒரு கிண்ணத்தில் 2 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்துக் கொள்ளவும்.
  • இவற்றுடன் சில துளிகள் பன்னீர் சேர்த்து, கட்டிகள் இல்லாமல் நன்றாக கலக்கவும்.
  • இந்தக் கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவவும்.
  • சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இது சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கும்.

 

தேன் மற்றும் பப்பாளி ஃபேஸ் பேக்:

 

பப்பாளியில் இயற்கையாகவே எக்ஸ்ஃபோலியேட்டிங் (Exfoliating) பண்புகள் உள்ளன. இது இறந்த செல்களை நீக்கி சருமத்தை மென்மையாக்கும். தேனுடன் சேரும் போது இது சருமத்திற்கு நல்ல ஈரப்பதத்தை அளிக்கிறது.

 

தேவையான பொருட்கள்:

 

  • பன்னீர் - சில துளிகள்
  • நன்கு மசித்த பப்பாளி - 1 கப்
  • தேன் - 1 டேபிள் ஸ்பூன்

 

செய்முறை:

 

  • நன்கு மசித்த பப்பாளி ஒரு கப் எடுத்து, அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்க்கவும்.
  • இரண்டையும் நன்றாக கலந்த பிறகு, சில துளிகள் பன்னீர் சேர்க்கவும்.
  • முகம் முழுவதும் இந்த கலவையை தடவி 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும்.
  • பின்னர், வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இது முகத்திற்கு உடனடி பொலிவை தரும்.

மேலும் படிக்க: Oily Skin Face Pack: குளிர்காலத்தில் அதிக எண்ணெய் பசை கொண்ட சருமத்திற்கு இந்த 5 ஹோம்மேட் ஃபேஸ் பேக்கை பயன்படுத்தவும்

 

தேன் மற்றும் முட்டை ஃபேஸ் பேக்:

 

முட்டை சருமத்திற்கு அதிகப்படியான ஈரப்பதத்தை அளிக்கும் ஒரு பொருள். முட்டையின் மஞ்சள் கரு, சரும துளைகளை இறுக்கமாக்க உதவும். வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.

Winter Skin Care

 

தேவையான பொருட்கள்:

 

  • பன்னீர் - சில துளிகள்
  • முட்டையின் மஞ்சள் கரு - 1
  • தேன் - 1 டேபிள் ஸ்பூன்

 

செய்முறை:

 

  • ஒரு கிண்ணத்தில் முட்டையின் மஞ்சள் கரு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்க்கவும்.
  • இரண்டையும் நன்றாக அடித்து கலக்கவும். வாசனைக்காக சில துளிகள் பன்னீர் சேர்க்கவும்.
  • இந்த கலவையை முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை உலர விடவும்.
  • நன்கு காய்ந்த பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இது சருமத்தை மிகவும் மென்மையாகவும் அழகாகவும் மாற்றும்.

 

தேன் மற்றும் ஓட்ஸ் ஃபேஸ் பேக்:

 

ஓட்ஸ் ஒரு சிறந்த ஸ்க்ரப் (Scrub) ஆக செயல்படுகிறது. இது சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை நீக்கி, உள்ளிருந்து ஒரு பளபளப்பை கொண்டு வருகிறது.

 

தேவையான பொருட்கள்:

 

பன்னீர் - சில துளிகள்

ஓட்ஸ் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்

தேன் - 1 டேபிள் ஸ்பூன்

 

செய்முறை:

 

  • ஒரு கிண்ணத்தில் 2 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பவுடரை சேர்க்கவும்.
  • இதனுடன் பன்னீர் சேர்த்து கெட்டியான பசை போல கலக்கவும்.
  • இதை முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும்.
  • 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

 

இந்த குளிர்காலத்தில், கடைகளில் கிடைக்கும் இரசாயன பொருட்களை தவிர்த்து, இது போன்ற இயற்கையான தேன் ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தலாம். வாரத்திற்கு இரண்டு முறை இதை செய்து வந்தால், உங்கள் சருமம் வறட்சியின்றி பளபளப்பாக காணப்படும்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com