
Hair Care Tips: குளிர்காலம் மற்றும் மழைக்காலம் என்பது மனதிற்கு இதமான ஒரு காலகட்டமாக இருந்தாலும், நமது கூந்தலை பொறுத்தவரை இது சற்று சவாலான நேரமாகும். அதிகப்படியான ஈரப்பதம் மற்றும் குளிர்ந்த காற்று ஆகியவை நமது தலைமுடியின் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கின்றன. குறிப்பாக, இந்த காலக்கட்டத்தில் முடி உதிர்வு, வறட்சி மற்றும் பொடுகு தொல்லை போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கின்றன.
இதனை சமாளிக்க சிறந்த வழி, சரியான பராமரிப்பு முறைகளை பின்பற்றுவது ஆகும். இரசாயனங்கள் கலந்த பொருட்களை பயன்படுத்துவதை விட, இயற்கையான நெல்லிக்காய் எண்ணெயை பயன்படுத்துவது கூந்தலுக்கு புத்துயிர் அளிக்கும். நெல்லிக்காய் எண்ணெய் எப்படி குளிர்கால கூந்தல் பிரச்சனைகளை தீர்க்கிறது? அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? என்பது குறித்து இதில் விரிவாக காண்போம்.
நெல்லிக்காய் எண்ணெய் ஒரு இயற்கையான கண்டிஷனர் போல செயல்படுகிறது. இது கூந்தலை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது.
மேலும் படிக்க: Winter Hair Care Tips: குளிர்காலத்தில் அதிகரிக்கும் முடி உதிர்வை கட்டுப்படுத்த இந்த குறிப்புகளை அவசியம் பின்பற்றவும்
நெல்லிக்காய் எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்துவதால் கூந்தலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். அவற்றில் முக்கியமான சில பயன்களை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
இன்றைய காலத்தில் பலருக்கும் இருக்கும் பெரிய பிரச்சனை இளநரை. நெல்லிக்காய் எண்ணெய், முடியின் வேர்க்கால்களில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை (Oxidative stress) குறைக்கிறது. இது நரை முடி விரைவில் வராமல் தடுத்து, முடியின் கருமை நிறத்தை தக்கவைக்க உதவுகிறது.

நெல்லிக்காயில் உள்ள கொழுப்பு அமிலங்கள் (Fatty acids) முடியை மென்மையாக்குகின்றன. குளிர்காலத்தில் ஷாம்பூ பயன்படுத்திய பிறகு முடி வறண்டு போகாமல் இருக்க, குளிப்பதற்கு முன் இந்த எண்ணெயை பயன்படுத்தலாம்.
மெலிந்த முடியை அடர்த்தியாக மாற்ற நெல்லிக்காய் எண்ணெய் சிறந்தது. இது முடி உதிர்வை குறைத்து, புதிய முடி வளர்ச்சியை தூண்டுகிறது. இதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், முடியின் அடர்த்தி அதிகரிப்பதை நன்கு உணரலாம்.
குளிர்காலத்தில் உச்சந்தலை வறண்டு போவதால் அல்லது அதிகப்படியான எண்ணெய் சுரப்பால் பொடுகு தொல்லை ஏற்படும். நெல்லிக்காய் எண்ணெய், உச்சந்தலையை சுத்தம் செய்து, அதிகப்படியான எண்ணெய்யை உறிந்து கொள்கிறது. இது பொடுகை கட்டுப்படுத்த மிகச் சிறந்த வழியாகும்.
இது இழந்த புரதச்சத்தை முடிக்கு மீண்டும் வழங்குகிறது. இதனால் முடி உதிர்வது குறைந்து, வேரிலிருந்து நுனி வரை கூந்தல் வலுவாக இருக்கும்.
மேலும் படிக்க: Winter Skin Care: குளிர்காலத்தில் உங்கள் முகத்தை வறண்டு போகாமல் பாதுகாக்க உதவும் டாப் 5 ஹோம்மேட் ஃபேஸ்பேக்
நெல்லிக்காய் எண்ணெயை சரியான முறையில் பயன்படுத்தினால் மட்டுமே முழுமையான பலன் கிடைக்கும். அதற்கான எளிய வழிமுறைகளை காணலாம்.

இந்த செயல்முறையை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால், குளிர்காலத்தில் ஏற்படும் கூந்தல் தொடர்பான பிரச்சனைகளை கட்டுப்படுத்த முடியும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com