
குளிர்காலம் என்றால் சருமம் வறண்டு போவது இயல்பு. அதே சமயம், வறட்சியை போக்க நாம் பயன்படுத்தும் அதிகப்படியான இரசாயன பொருட்கள் மற்றும் காற்றில் உள்ள மாசுக்கள் சரும துளைகளை அடைத்து முகப்பருவை ஏற்படுத்தலாம். முல்தானி மட்டி பொதுவாக கோடைக்காலத்தில் எண்ணெய் பசை சருமத்தினர் பயன்படுத்தும் ஒரு பொருளாக பார்க்கப்படுகிறது. ஆனால், அதனுடன் சரியான பொருட்களை சேர்த்தால், குளிர்காலத்திலும் அது சருமத்திற்கு அற்புதமான பலன்களை தரும்.
முகப்பரு, வறட்சி, கரும்புள்ளிகள் மற்றும் பொலிவிழந்த சருமம் என அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண, வீட்டிலேயே செய்யக்கூடிய 5 முல்தானி மட்டி ஃபேஸ் பேக்குகளை இப்பதிவில் பார்க்கலாம்.
குளிர்காலத்தில் சருமம் மிகவும் வறண்டு, நீர்ச்சத்து இல்லாமல் காணப்படும். இந்த ஃபேஸ் பேக் உங்கள் சருமத்தை மிருதுவாக மாற்றும்.
பாதாம் மற்றும் பால் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கின்றன. முல்தானி மட்டி, இறந்த செல்களை நீக்குகிறது. இவை சேரும் போது வறண்ட மற்றும் சேதமடைந்த சருமம் பட்டு போல் மென்மையாக மாறும்.
மேலும் படிக்க: Honey Face Pack: குளிர்காலத்தில் சரும பொலிவை தக்கவைக்க உதவும் தேன் ஃபேஸ் பேக்; எப்படி தயார் செய்ய வேண்டுமென தெரியுமா?
முகத்தில் கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் சிலருக்கு இருக்கும். இவற்றை குறைக்க தக்காளியின் எக்ஸ்ஃபோலியேட்டிங் (Exfoliating) பண்புகள் நல்ல பலன்களை கொடுக்கும்.

தக்காளி சாறு ஒரு சிறந்த ப்ளீச்சிங் ஏஜென்ட் ஆகும். இது கரும்புள்ளிகளை நீக்கி, சருமத்திற்கு உடனடி பொலிவை தரும். சந்தனம் மற்றும் மஞ்சள், முகப்பரு தழும்புகளை மறைய செய்யும்.
குளிர்காலத்திலும் சிலருக்கு முகம் எண்ணெய் பசையுடன் காணப்படும். இதுதான் முகப்பருக்களுக்கு முக்கிய காரணம் ஆகும்.
முல்தானி மட்டி சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தும். பன்னீர், சருமத்தின் பி.ஹெச் (pH) அளவை சமன் செய்து, முகப்பரு வருவதை தடுக்கும்.
மேலும் படிக்க: Turmeric for Skin Glow: குளிர்காலத்தில் சரும பொலிவை பராமரிக்க உதவும் 5 ஹோம்மேட் மஞ்சள் ஃபேஸ் பேக்
சருமம் அதிகப்படியான வறட்சியுடன் சிலருக்கு காணப்படும். அத்தகைய சருமம் கொண்டவர்கள் இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தலாம்.

தேன் ஒரு இயற்கையான மாய்ஸ்சரைசர். இது முல்தானி மட்டியால் ஏற்படும் வறட்சியை தடுத்து, சரும துளைகளில் உள்ள அழுக்கை மட்டும் நீக்குகிறது.
சிலருக்கு, முகத்தில் கருந்திட்டுக்கள் காணப்படும். அவற்றை போக்க புதினா மற்றும் தயிர் சேர்ந்த இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தலாம்.
தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் மற்றும் புதினாவின் குணங்கள் கருமையை நீக்கி, சருமத்தை ஒரே சீரான நிறத்திற்கு கொண்டு வரும்.
குளிர்காலத்தில் முல்தானி மட்டியை பயன்படுத்தும் போது, அந்த ஃபேஸ் பேக் காய்ந்த உடனேயே கழுவிவிடுவது நல்லது. நீண்ட நேரம் உலர விட்டால் சருமம் அதிக வறட்சி அடையலாம். மேலும், இதை பயன்படுத்துவதற்கு முன் பேட்ச் டெஸ்ட் செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com