
Winter Hair Care: குளிர்காலத்தின் போது கூந்தல் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும் என்று பலருக்கும் தெரியும். பனிக்காலத்தில் வீசும் குளிர்ந்த காற்று மற்றும் காற்றில் இருக்கும் குறைவான ஈரப்பதம் ஆகியவை கூந்தலை அதிகமாக பாதிக்கின்றன. இதனால், முடி கடும் வறட்சிக்குள்ளாகி, எளிதாக உதிரக் கூடிய நிலை உருவாகும்.
முடி உதிர்வு, பொடுகு தொல்லை என பல பிரச்சனைகள் இந்த காலத்தில் அதிகரிக்கும். இருப்பினும், சரியான பராமரிப்பு முறைகளை பின்பற்றினால், எத்தகைய கடும் குளிரிலும் உங்கள் கூந்தலை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க முடியும். இந்தக் கட்டுரையில், குளிர்காலத்தில் அவசியம் பின்பற்ற வேண்டிய 5 முக்கிய கூந்தல் பராமரிப்பு வழிமுறைகளை விரிவாக காண்போம்.
குளிர்கால கூந்தல் பராமரிப்பில் மிக முக்கியமானது நீர்ச்சத்து தான். குளிர்கால காலநிலை உங்கள் தலைமுடியின் ஈரப்பதத்தை குறைத்து, வறட்சியை உண்டாக்குகிறது. இதனால் முடி எளிதில் சேதமடையும் அபாயம் உள்ளது. உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். இது உட்புறத்தில் இருந்து முடியை வலுப்படுத்தும். வெளிப்புற பராமரிப்பிற்கு, கிளிசரின் (Glycerin) அல்லது கற்றாழை கலந்த ஷாம்பூ மற்றும் ஹேர் மாஸ்க்குகளை பயன்படுத்துவது நல்லது. இவை முடியின் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவும்.
மேலும் படிக்க: Hibiscus Oil for Hair: குளிர்காலத்தில் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க செம்பருத்தி எண்ணெயை பயன்படுத்துவது எப்படி?
கோடைக்காலத்தில் வியர்வை அதிகம் வரும் என்பதால் தினமும் தலைக்கு குளிப்போம். ஆனால், குளிர்காலத்தில் தலைக்கு குளிக்கும் முறையை மாற்றியமைக்க வேண்டும். அடிக்கடி தலைக்கு குளிப்பதால், உச்சந்தலையில் சுரக்கும் இயற்கையான எண்ணெய் (Sebum) நீங்கி விடும். இந்த எண்ணெய் தான் முடியை பாதுகாப்பாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது. சல்பேட் இல்லாத ஷாம்பூக்களை தலைக்கு பயன்படுத்தலாம். சல்பேட் ஷாம்பூக்கள் அதிக நுரையை தரும். ஆனால், அவை முடியில் உள்ள ஈரப்பதத்தை மொத்தமாக உறிந்து விடும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தலைக்கு ஷாம்பூ போட்டு குளிப்பது போதுமானதாக இருக்கும்.

குளிரில் நடுங்கும் போது, ஆவி பறக்க சுடுதண்ணீரில் தலைக்கு குளிக்க இதமாக தோன்றலாம். ஆனால், அது உங்கள் கூந்தலுக்கு செய்யும் மிகப்பெரிய பாதிப்பு ஆகும். அதிக சூடுள்ள நீர், உச்சந்தலையை வறட்சியாக்கி, கூந்தல் வேர்களை பலவீனப்படுத்தும். இதனால் முடி உதிர்வது அதிகரிக்கும். தலைக்கு குளிக்க எப்போதும் வெதுவெதுப்பான தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இது முடியின் ஈரப்பதத்தை பாதுகாப்பதோடு, அதிகப்படியான வறட்சி ஏற்படுவதை தவிர்க்கும்.
குளிர்காலத்தில் ஷாம்பூ போட்ட பிறகு கண்டிஷனர் பயன்படுத்துவதை ஒருபோதும் தவிர்க்கக் கூடாது. ஷாம்பூ அழுக்கை நீக்கும் என்றால், கண்டிஷனர் முடிக்கு தேவையான ஈர்ப்பதத்தை அளித்து, ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்குகிறது. கண்டிஷனரை முடியின் நடுப்பகுதி முதல் நுனி வரை தடவ வேண்டும். இது முடி வறட்சியாவதை தடுப்பதோடு, முடியை மென்மையாகவும், சிக்கல் இல்லாமலும் மாற்றும்.
மேலும் படிக்க: Winter Hair Oils: குளிர்காலத்தில் உங்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க உதவும் 6 எண்ணெய்கள்
முடி நீளமாக வளர வேண்டும் என்று பலரும் நினைப்பார்கள். ஆனால், நுனியில் பிளவுபட்ட முடி இருந்தால் வளர்ச்சி தடைபடும். குளிர்காலத்தில் முடி வறட்சியால் நுனிப்பகுதி அதிகம் பிளவுபடும். ஒவ்வொரு 6 முதல் 8 வாரங்களுக்கு ஒருமுறை முடியின் நுனிப்பகுதியை சிறிது ட்ரிம் செய்வது அவசியம். இது முடியின் ஒட்டுமொத்த தோற்றத்தை அழகாக காட்டுவதோடு, முடி ஆரோக்கியமாக வளரவும் உதவும்.

ஆரோக்கியமான உணவுமுறையின் அவசியம்:
வெளிப்புற பராமரிப்பு மட்டும் கூந்தல் வளர்ச்சிக்கு போதாது. நாம் எடுத்துக் கொள்ளும் உணவு மற்றும் அதன் வாயிலாக நமக்கு கிடைக்கும் சத்துகள் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. அதன்படி சில அத்தியாவசிய சத்துகளை பெற வேண்டும்.
இந்த 5 எளிய வழிமுறைகளை பின்பற்றினால், குளிர்காலத்தில் ஏற்படும் முடி உதிர்வை குறைத்து, ஆரோக்கியமான மற்றும் அடர்த்தியான கூந்தலை பெறலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com