கண்ணாடி போன்ற பளபளப்பான சருமத்தை பெற ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து அழகு சாதன பொருட்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. எனினும், இயற்கையான பொருட்களை கொண்டு சருமத்தை பராமரிக்க நினைப்பவர்கள் தற்போது அதிகரித்து வருகின்றனர். ஏனெனில், செயற்கையான பொருட்கள் சில சமயங்களில் ஒவ்வாமை அல்லது பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். ஆனால், வீட்டில் எளிதாக கிடைக்கும் ஒரு பொருளை பயன்படுத்தி நமது சருமத்தை பளபளப்பாக மாற்ற முடியும்.
மேலும் படிக்க: கெரட்டினை அதிகரிக்க உதவும் உணவுகள்; அடர்த்தியான மற்றும் பளபளப்பான கூந்தலுக்கு இதுதான் ரகசியம்!
அரிசி தண்ணீரில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்திற்கு பொலிவை தருவதுடன், முகத்தில் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. அதே நேரத்தில், ஐஸின் குளிர்ந்த தன்மை, வெயிலினால் உண்டாகும் சரும பாதிப்புகள் மற்றும் அழற்சியில் இருந்து உங்கள் முகத்தை பாதுகாக்கிறது.
இதற்காக, அரிசியை நன்கு கழுவி, வடிகட்டிய நீரில் கொதிக்க வைக்கவும். பின்னர், அந்த தண்ணீரை ஒரு பாத்திரத்தில் 30 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு, அந்த நீரை ஒரு நாள் முழுவதும் அறை வெப்பநிலையில் வைக்க வேண்டும். இனி, ஒரு சுத்தமான ஐஸ் ட்ரேயில் இந்த அரிசி தண்ணீரை ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைத்து உறைய வைக்கவும். நீங்கள் பயன்படுத்த விரும்பும் போது, அதை எடுத்து உபயோகிக்கலாம்.
காலை எழுந்ததும், முதலில் உங்கள் முகத்தை நன்கு கழுவி விட்டு துடைக்கவும். ஒரு அரிசி தண்ணீர் ஐஸ் கட்டியை எடுத்து, உங்கள் முகத்தில் வட்ட வடிவில் மென்மையாக தேய்க்கவும். இப்படி செய்யும் போது உங்களுக்கு நல்ல மசாஜ் உணர்வும் கிடைக்கும். இதை தினமும் காலை மற்றும் இரவு என இருவேளையும் பயன்படுத்தலாம். இது அரிசி தண்ணீரின் அனைத்து பயன்களையும் தருவதோடு, உங்கள் முக அமைப்பை மேம்படுத்தி அமைதியான உணர்வையும் தரும்.
மேலும் படிக்க: Hair fall home remedy: ஒரு முட்டை இருந்தால் போதும்... முடி உதிர்வு பிரச்சனையை போக்கலாம்; இந்த 4 ஹேர்மாஸ்கை ட்ரை பண்ணுங்க
உங்கள் சருமத்திற்கு கூடுதல் ஈரப்பதம் மற்றும் ஊட்டச்சத்து தேவை என்றால், இந்த அரிசி தண்ணீருடன் சிறிது கற்றாழை ஜெல் மற்றும் 2 தேக்கரண்டி ரோஸ் வாட்டர் சேர்க்கலாம். இந்த கலவையை நன்கு கலந்து, பின்னர் அதை ஐஸ் ட்ரேயில் உறைய வைக்கவும். இவ்வாறு செய்வதால், அரிசி நீரின் பளபளப்பு, கற்றாழை ஜெல்லின் ஈரப்பதம் மற்றும் ரோஸ் வாட்டரின் இதமான உணர்வு என அனைத்தும் ஒரே நேரத்தில் கிடைக்கும். நல்ல பலன்களை பெற இதைத் தொடர்ந்து செய்வது அவசியம்.
அரிசி தண்ணீரும், ஐஸ் கட்டியும் சேர்ந்த கலவை, ஈரப்பதத்தை நிரப்பி சருமத்தின் பாதுகாப்பு திறனை மேம்படுத்துவதன் மூலம் வறண்ட சருமத்திற்கு நல்ல உணர்வை கொடுக்கிறது. இது வறண்ட சருமத்திற்கு ஒரு சிறந்த வீட்டு வைத்தியம் ஆகும். இது அதிகப்படியான எண்ணெய்யை கட்டுப்படுத்துவதன் மூலம் சரும துளைகளை இறுக்கி, பி.ஹெச் அளவை சமன் செய்கிறது. சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பை உறிஞ்சுவதால், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவுகிறது.
பருக்கள், சூரிய ஒளி பாதிப்பு, மேக்கப், ஆரோக்கியமற்ற உணவு மற்றும் பிற சுற்றுச்சூழல் காரணிகளால் ஏற்படும் கருமையான புள்ளிகள் போன்றவற்றை, அரிசி தண்ணீர் மங்கச் செய்ய உதவுகிறது. இது சருமத்தின் கருமையையும் நீக்குகிறது. எனவே, இதனை தொடர்ந்து செய்வதன் மூலம் நல்ல பலன்களை பெற முடியும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com