
அடர்த்தியான, ஆரோக்கியமான கூந்தலை பெற, எண்ணெய் தேய்ப்பது என்பது காலங்காலமாக பின்பற்றப்படும் ஒரு பழக்கம் ஆகும். ஆனால், எவ்வளவு எண்ணெய் தடவ வேண்டும், எத்தனை முறை தடவ வேண்டும் என்ற குழப்பம் பலருக்கும் இருக்கலாம்.
சிறந்த கூந்தல் வளர்ச்சி மற்றும் உச்சந்தலை (Scalp) ஊட்டச்சத்துக்காக, வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை எண்ணெய் தடவுவது போதுமானது. தினமும் தலைக்கு எண்ணெய் தேய்க்க வேண்டியதில்லை. தினமும் அவ்வாறு செய்தால், அது துளைகளை அடைத்து, அழுக்கை படிந்து போகச் செய்யும். இது முடி வளர்ச்சியை பாதிக்கக் கூடும்.

எண்ணெய் தேய்க்கும் போது, 5 முதல் 10 நிமிடங்கள் விரல்களால் உச்சந்தலையை மெதுவாக மசாஜ் செய்யவும். இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடி வளர்ச்சியை தூண்டுகிறது. எண்ணெய் நன்றாக ஊடுருவ, குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊற வைக்கலாம். மேலும், எண்ணெய்யை சிறிது வெதுவெதுப்பாக சூடாக்கி பயன்படுத்துவது நல்லது. சூடான எண்ணெய், உச்சந்தலை மற்றும் முடியின் வேர்க்கால்களுக்குள் எளிதில் உறிந்துகொள்ளப்பட உதவும்.
மேலும் படிக்க: Chia seed: அடர்த்தியான கூந்தல் வேண்டுமா? இந்த 5 சியா விதை ஹேர்பேக்குகளை பயன்படுத்தவும்
சிறந்த முடி வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய் (Castor) அல்லது ரோஸ்மேரி எண்ணெய் போன்ற இயற்கை எண்ணெய்களை தேர்வு செய்யவும். எனினும், அதிகப்படியான எண்ணெய் தடவுவதை தவிர்க்கவும். அதிக எண்ணெய் இருந்தால், அதை சுத்தப்படுத்த கூடுதல் ஷாம்பூவை பயன்படுத்த வேண்டியிருக்கும். இதுவே முடிக்கு மேலும் சேதத்தை ஏற்படுத்தலாம். மேலும், குளிக்கும் போது தலையில் நாம் தேய்த்த எண்ணெய் இல்லாதபடி சுத்தமாக அகற்ற வேண்டும்.

முடி வளர்ச்சி என்பது ஒரு வாரத்தில் தெரியக் கூடியது இல்லை. சரியான கூந்தல் பராமரிப்பு முறையை பின்பற்றினால், அதன் பலன்களை சில வாரங்களுக்கு பின்னர் காணலாம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com