அகத்தின் அழகு முகத்தில் தெரிந்துவிடும் என்பதால் நம்மில் பெரும்பாலானோர் எப்போதும் குறைபாடற்ற சருமத்திற்கான தேடல் இருக்கும். பரபரப்பான சூழல் காரணமாக நாம் சரும பராமரிப்பு திட்டத்தை பின்பற்ற தவறி விடுகிறோம். சருமத்தின் தோற்றம் ஒரு நபரின் ஆரோக்கியத்தை வெளி உலகிற்கு பிரதிபலிக்கிறது.
சரும ஆரோக்கியத்திற்கு அதை எப்போதும் ஈரப்பதமாக வைத்திருப்பது மிக அவசியம். ரசாயன பொருட்கள் சருமத்தின் வெளிப்புற அடுக்குக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் இயற்கையான சரும பராமரிப்பு பொருட்களை பயன்படுத்த வேண்டும். இதனால் சருமம் ஆரோக்கியமாகவும் இருக்கும் அதே நேரம் சேதமும் ஏற்படாது.
ஆரோக்கியமான உணவு
ஆரோக்கியமான மற்றும் சமச்சீரான உணவை உட்கொள்வது உங்களின் தோற்றத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பலனை தரும். எதை சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக் கூடாது என நீங்கள் நன்கு அறிந்து வைத்திருந்தால் சமருத்தில் அதிசயங்களை காணலாம். குறிப்பாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை சரும ஆரோக்கியத்திற்காக தவிர்த்துவிடுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகள் சரும் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
தேன் பயன்பாடு
இயற்கை இனிப்பான் என அழைக்கப்படும் தேன் ஒரு சிறந்த மாய்ஸ்சரைசர் ஆகும். இது சருமத்திற்கு தேவையான ஊட்டத்தை அளிக்கிறது. தேனில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் தொற்றுநோய்களை தடுக்க உதவுவதோடு முகத்தில் உள்ள பரு மற்றும் கறைகளையும் குறைத்திடும். தேன் உங்கள் சருமத்தை களங்கமற்றதாக வைத்திருக்கும். வடு மறைந்திடவும் தேனில் ப்ளீச்சிங் பண்பு இருக்கிறது.
மேலும் படிங்கசருமம், முடி உதிர்வு பிரச்சினைக்கு தீர்வளிக்கும் கற்றாழை
தக்காளி பயன்பாடு
தக்காளி சாறில் ஆன்டிஆக்ஸிடன்கள் அதிகம் உள்ளன. இது சருமத்தின் எண்ணெய் அளவை சமப்படுத்தும். எண்ணெய் பசை கொண்ட சருமம் உடையவர்களுக்கு தக்காளி ஒரு சிறந்த தோல் பராமரிப்பு மருந்தாகும். தக்காளி உங்கள் சருமத்திற்கு இனிமையான உணர்வை வழங்குகிறது.
மனிதன் வயதானதற்கான அறிகுறிகளை குறைக்கவும், கோடுகள் மற்றும் சுருக்கங்களை நீக்கவும் உதவுகிறது. இது ஒரு எளிய தோல் பராமரிப்பு குறிப்பாகும். தக்காளி சாறை சருமத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு அப்படியே விடவும். அதன் பிறகு வெதுவெதுப்பான நீரில் சருமத்தை கழுவவும்.
தேங்காய் எண்ணெய் பயன்பாடு
தேங்காய் எண்ணெய் இயல்பாகவே உங்கள் சருமத்திற்கு தேவையான கொழுப்பு அமிலங்களை வழங்குகிறது. சுட்டெரிக்கும் சூரியனின் புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாத்திடுகிறது. தேங்காய் எண்ணெய் சருமத்தின் பாதுகாப்பு அமைப்பை மேம்படுத்துகிறது.
மேலும் படிங்கGuava Leaves for Hair : முடி உதிர்வு பிரச்சினையை தீர்த்திடும் கொய்யா இலைகள்
நல்ல தூக்கம்
நல்ல தூக்கம் உங்கள் சருமத்தை புதுப்பித்து பளபளப்பாக்குகிறது. ஆய்வு ஒன்றில் தினமும் குறைந்தபட்சம் எட்டு மணிநேரம் தூங்கினால் சேதமடைந்த செல்கள் புதுப்பிக்கப்பட்டு, சருமத்தின் நிறம் மேம்படும் என கண்டறியப்பட்டுள்ளது. தூக்கமின்மை வயதான உணர்வுகளை அளிக்கும். எனவே தினமும் போதுமான தூங்க முயற்சி செய்யுங்கள். தூக்கம் உங்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். அதன் மூலம் உங்கள் சருமம் பிரகாசமடையும்
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation