வைட்டமின் சி நிறைந்த கொய்யா பழம் நம்முடைய உணவு பழக்கத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டிய பழங்களில் ஒன்றாகும். இது பலருக்கும் தெரியும். ஆனால் கொய்யா பழத்தின் இலைகள் தலைமுடிக்கு மிகுந்த நன்மை பயக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? பழத்தைப் போலவே கொய்யாவின் இலைகளில் வைட்டமின்களும், ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன. இயற்கையான நன்மை கொண்ட கொய்யா இலைகளை தலைமுடிக்கு மேற்பூச்சாகப் பயன்படுத்தலாம்
தலைமுடிக்கு கொய்யா இலைகளை பயன்படுத்தும் போது அது அற்புதமான நன்மைகளைத் தருகிறது. அவை உச்சந்தலையில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு சுற்றுச்சுழல் பாதிப்பிலிருந்து தலைமுடியை பாதுகாக்கிறது.
கொய்யா இலைகள் உச்சந்தலையில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகின்றன. ஏனென்றால் கொய்யா இலைகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. கொலாஜன் உற்பத்தி அதிகரிப்பால் தலைமுடி வளர்ச்சியடைவது மட்டுமின்றி அடர்த்தியான தோற்றத்திற்கும் வழிவகுக்கிறது. மேலும் தலைமுடி தண்டுகள் மென்மையாகக் கூடும்.
கொய்யா இலைகளில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. இது உங்கள் உச்சந்தலையை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. கொய்யா இலைகளில் உள்ள வைட்டமின் சி வேர்களை வலிமையாக்குகிறது மற்றும் முடி உதிர்வதைக் குறைக்கிறது. இந்த இலைகள் தலைமுடி மிருதுவாகவும், பட்டுப் போலவும் இருக்கும்படி எண்ணெய்ப் பசையைத் தடுக்கும்.
கொய்யா இலைகளை கூந்தலுக்கு தடவுவதற்கு, முதலில் அதன் சத்துக்களை பிரித்தெடுத்து அதன் மூலம் கொய்யா இலை கரைசலை தயாரித்து பயன்படுத்திட வேண்டும். ஒரு கைப்பிடி கொய்யா இலைகளை 500 மில்லி தண்ணீரில் 20 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும். இந்த திரவத்தை வடிகட்டி தலைமுடியில் பயன்படுத்துவதற்கு முன்பாக குளிர விடுங்கள்.
இந்த திரவத்தை உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் சீரம் போல பயன்படுத்தலாம். முடி உதிர்வை தவிர்க்க அல்லது முடி வளர்ச்சியை ஊக்குவிக்க விரும்பினால் குளிப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக அல்லது இரவு நேரத்தில் இந்த திரவத்தை உச்சந்தலையில் மசாஜ் செய்யவும்.
கொய்யா இலை திரவத்தை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தலைமுடியில் தடவினால் சிறந்த பலன் கிடைக்கும். தினமும் கூட நீங்கள் உபயோகிக்கலாம். இதை காலியான சன்ஸ்கீரின் ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்து வைத்து பயன்படுத்தலாம்.
சிறந்த முடிவுகள் கிடைக்க 15 முதல் 20 நிமிடங்களுக்கு கொய்யா இலை திரவம் தலையில் இருக்க வேண்டும்.
கொய்யா இலைகளின் திரவம் உங்கள் தலைமுடியை கருமையாக்கிடும். நரை முடி மட்டுமின்றி புதிதாக வளரும் முடியை கருமையாகவும், பளபளப்பாகவும் செய்திடும்.
மேலும் உச்சந்தலையில் அரிப்பு மற்றும் முடி உதிர்தல் ஏற்படும் போதும் இதைப் பயன்படுத்தலாம்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com