அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். மனம் எந்தளவிற்கு மகிழ்ச்சியுடன் இருக்கிறதோ? அந்தளவிற்கு முகமும் பளிச்சென்று தெரியும். இருந்தாலும் சருமத்தைப் பராமரிக்கவும், எப்போதும் பொலிவுடன் வைத்திருக்க வேண்டும் என்றால் வீட்டிலேயே எளிமையான முறையில் சில பேஸ் பேக்குகளைப் பயன்படுத்தலாம். இன்றைக்கு ஓட்ஸ் பேஸ் பேக் எப்படி சருமத்தின் நிறத்தை மேம்படுத்துகிறது? எப்படியெல்லாம் ஓட்ஸ் பேக்கைப் பயன்படுத்தலாம்? என்பது குறித்த விரிவான தகவ்ல்கள் இங்கே.
ஓட்ஸ் பேஸ் பேக் பயன்படுத்தும் முறைகள்:
சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, இயற்கையான முறையில் சருமத்தை சுத்தம் செய்ய ஓட்ஸ்ஸைப் பயன்படுத்தலாம். முதலில் ஓட்ஸ்ஸை ஒரு மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த ஓட்ஸ் பவுடருடன் சிறிதளவு தயிர் மற்றும் மஞ்சள் சேர்த்து பேஸ் பேக் தயார் செய்துக் கொள்ள வேண்டும். இதை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் அப்ளை செய்து 15 முதல் 20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும். இதையடுத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால் போதும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி பொலிவைத் தருகிறது.
மேலும் படிக்க: இறந்த தோல்களை நீக்கி முகத்திற்கு புத்துயிர் தரும் ஃபேஸ் ஸ்க்ரப்பை பயன்படுத்தும் முறைகள்
வறட்சியான சருமத்தைக் கொண்டவர்கள் ஓட்ஸ்சுடன் தேன் கலந்து பயன்படுத்தலாம். 2 டீஸ்பூன் ஓட்ஸ், 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிதளவு பால் சேர்ந்துக் கலந்துக் கொள்ளவும். இந்த பேஸ் பேக்கை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் அப்ளை செய்து 15 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தைக் கழுவினால் போதும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சரும பிரச்சனைகளைத் தவிர்க்கிறது. சருமத்தை எப்போதும் நீர்ச்சத்துடன் வைத்திருக்க உதவுகிறது.
எண்ணெய் சருமம் கொண்டவர்கள் கட்டாயம் ஓட்ஸ்சுடன் எலுமிச்சைக் கலந்துப் பயன்படுத்தவும். ஓட்ஸ் பவுடருடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து பேஸ் பேக் தயார் செய்துக் கொள்ள வேண்டும். இதை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் அப்ளை செய்துக் கொள்ளவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தைக் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதில் உள்ள வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்தில் ஏற்படக்கூடிய முகப்பருக்கள் மற்றும் சரும பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது.
மேலும் படிக்க: சருமத்திற்கு ரேஸர் செய்வதால் ஏற்படும் காயங்களை குணப்படுத்த உதவும் ஸ்ப்ரே
அனைத்து வகையான சருமம் கொண்டவர்கள் ஓட்ஸ்சுடன் பால் கலந்த பேஸ் பேக் உபயோகிக்கலாம். ஓட்ஸ் பவுடருடன் சிறிதளவு பால் கலந்து முகத்தில் அப்ளை செய்யவும். பால் சருமத்தில் ஏற்படக்கூடிய கரும்புள்ளிகள், முகப்பருக்கள் போன்றவற்றை சரி செய்ய உதவுகிறது.
Image Source - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com