பல சரும பிரச்சனைகளுக்கு பலவிதமான வீட்டு வைத்தியங்களை ஏராளமானோர் முயற்சி செய்கிறார்கள். சிலர் அதிக விலை கொண்ட அழகுசாதன பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஆனால், வீட்டிலுள்ள இயற்கை பொருட்களை கொண்டு சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க: பொலிவான சருமத்திற்கு உதவும் 5 பாரம்பரிய பொருட்கள்; உங்கள் சரும பராமரிப்பில் சேர்த்துக் கொள்ளுங்கள்
அத்தகைய பொருட்களில் மிகவும் பயனுள்ளது தயிர். தயிரை தொடர்ந்து பயன்படுத்துவதால், சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும், கரும்புள்ளி இல்லாமலும் இயற்கையாகவே வைத்துக் கொள்ளலாம். இது பல ஆண்டுகளாக சருமத்திற்கு பொலிவூட்டும் ஒரு இயற்கை பொருளாக பயன்படுத்தப்படுகிறது. உடல்நலம், சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு பொருளாக ஆயுர்வேதத்தில் தயிர் கருதப்படுகிறது.
தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது. இரசாயனம் நிறைந்த அழகுசாதன பொருட்களை போலல்லாமல், தயிர் சருமத்தை ஆழமாக சுத்தம் செய்கிறது. அதிகப்படியான எண்ணெய், இறந்த சரும செல்கள் மற்றும் அடைபட்ட துளைகளை நீக்குகிறது. இதை தொடர்ந்து முகத்தில் பயன்படுத்துவதால், சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும், இயற்கையாகவே பளபளப்பாகவும் இருக்கும்.
புரதம், கால்சியம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த தயிர், சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துகளை திறம்பட அளிக்கிறது. இதில் உள்ள பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், சரும செல்களை வலுப்படுத்தி சுருக்கங்கள் மற்றும் நிறமிகள் போன்ற வயோதிகத்தின் ஆரம்ப அறிகுறிகளை குறைக்கின்றன. மேலும், வறண்ட சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை தயிர் வழங்குகிறது.
மேலும் படிக்க: பளபளப்பான சருமத்திற்கு பெரிதும் உதவும் பால்; இந்த டிப்ஸை நோட் பண்ணுங்க மக்களே
சரும எரிச்சல், அரிப்பு அல்லது அதிக வறட்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தயிர் ஃபேஸ் பேக் உதவும். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்திற்கு இதமளித்து, அசௌகரியத்தை குறைத்து, குளுமையான உணர்வை அளிக்கிறது.
முதலில், முகத்தை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். பிறகு, தயிரை எடுத்து முகத்தில் சீராக பூச வேண்டும். குறிப்பாக, வட்ட வடிவத்தில் மெதுவாக மசாஜ் செய்வதன் மூலம் இரத்த ஓட்டம் மேம்படும். 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து சுத்தமான தண்ணீரால் முகத்தை கழுவ வேண்டும். இது சருமத்தை ஆழமாக சுத்தம் செய்ய உதவுகிறது.
மேலும், கூடுதல் நன்மைகளை பெற, தயிருடன் மஞ்சள், கடலை மாவு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு ஃபேஸ் பேக் தயாரிக்கலாம். இதை முகத்தில் பூசி 30 நிமிடங்கள் கழித்து கழுவலாம். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி சத்து, சருமத்தை இயற்கையாகவே பிரகாசமாக்க உதவுகிறது. இது அதிக விலை கொண்ட அழகு சாதன பொருட்களுக்கு எளிய மற்றும் இரசாயனம் இல்லாத மாற்றாகும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com