சரும பளபளப்பிற்கு உருளைக்கிழங்கு எப்படி உதவுகிறது? இதோ முழு விபரம் இங்கே!

உருளைக்கிழங்கில் இரும்பு, கால்சியம், தாமிரம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் தோல் அழற்சி, தோல் உரிதல் போன்ற சரும பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்கிறது

potato face pack for skin glowing

உருளைக்கிழங்கு வீடுகளில் மட்டுமல்ல, பல்வேறு சுப நிகழ்ச்சிகளில் பிரதான உணவாக இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. சமையலுக்கு மட்டுமல்ல உருளைக்கிழங்கில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், பொலிவாகவும் வைத்திருக்க உதவும். எப்படி என்ற சந்தேகம் ஏற்படுகிறதா? இதோ சருமத்தைப் பொலிவாக உருளைக்கிழங்கு எப்படி உதவுகிறது? எப்படியெல்லாம் இதை உபயோகிக்கலாம்? என்பது குறித்த முழு விபரம் இங்கே.

potato ()

சரும பளபளப்பிற்கு உருளைக்கிழங்கு எப்படி உதவுகிறது?

  • உருளைக்கிழங்கில் உள்ள வைட்டமின் சி சருமத்தில் கொலஜன் உற்பத்தியை அதிகரித்து தோலிற்கு பளபளப்புத் தன்மையை வழங்குகிறது. கருமை நிறத்தைக் குறைத்து முகத்தை வெள்ளையாக்குகிறது.
  • வைட்டமின் பி3, பைரிடாக்சின், போலேட் போன்ற ஊட்டச்சத்துக்களைக் கொண்ட உருளைக்கிழங்கை சருமத்திற்குப் பயன்படுத்தும் போது, தோலில் உள்ள சுருக்கங்களைக் குறைத்து விரைவில் வயதான தோற்றம் ஏற்படுவதைத் தடுக்கிறது.
  • உருளைக்கிழங்கில் உள்ள பொட்டாசியம் சருமத்திற்கு இயற்கையான மாய்ஸ்சரைசராக உதவுகிறது. இது சருமத்தை நீரேற்றத்துடன் வைத்திருக்கவும், மென்மையாகவும் வைத்திருக்க உதவுகிறது. மேலும் கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது.
  • இதோடு உருளைக்கிழங்கில் இரும்பு, கால்சியம், தாமிரம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் தோல் அழற்சி, தோல் உரிதல் போன்ற சரும பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்கிறது. சேதமடைந்த செல்களைக் குணப்படுத்தவும் உதவியாக உள்ளது. மேலும் உருளைக்கிழங்கில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் புற ஊதா கதிர்கள் மற்றும் மாசிலிருந்து பாதுகாக்கிறது.

உருளைக்கிழங்கை சருமத்திற்கு பயன்படுத்தும் முறை:

தயிர் மற்றும் உருளைக்கிழங்கு பேஸ் பேக்:

முதலில் உருளைக்கிழங்கை சிறு சிறு துண்டுகளாக மிக்ஸியில் அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதனுடன் சிறிதளவு தயிர் சேர்த்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் அப்ளை செய்யவும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவினால் போதும். சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருப்பதோடு பளபளப்பாக உதவுகிறது.

தேன், பாதாம் எண்ணெய் மற்றும் உருளைக்கிழங்கு சாறு :

உருளைக்கிழங்கு சாறு எடுத்துக் கொண்ட பின்னதாக அதனுடன் சிறிதளவு தேன், பாதாம் எண்ணெய் மற்றும் உருளைக்கிழங்கு சாறு போன்றவற்றைக் கலந்து பேஸ் பேக் செய்துக் கொள்ளவும். பின்னர் இதை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்களுக்கு அப்படியே வைத்துக் கொள்ளவும். இதையத்து வெதுவெதுப்பான நீரைக் கொண்டு முகத்தைக் கழுவினால் போதும் சருமம் வறண்டு விடுவதைத் தடுப்பதோடு பளபளப்புடனும் வைத்திருக்கும்.

potato face pack tips

மேலும் படிக்க:இளமையான தோற்றம் பெற வேண்டுமா? வீட்டிலேயே டோனர்களை ரெடி பண்ணுங்க!

எலுமிச்சை மற்றும் உருளைக்கிழங்கு பேஸ் பேக்:

உருளைக்கிழங்கு சாறுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்துக் கொள்ளவும். இதை முகப்பரு மற்றும் கருவளையங்கள் உள்ள இடத்தில் அப்ளை செய்யவும். 10 நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால் போதும் சரும பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும். இது மட்டுமல்ல. இது போன்று பல்வேறு முறைகளில் உருளைக்கிழங்கு சாறை பல வழிகளில் பயன்படுத்தலாம்.

Image source - Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP