இளமையான தோற்றம் பெற வேண்டுமா? வீட்டிலேயே டோனர்களை ரெடி பண்ணுங்க!

உங்களது சருமத்தை எப்போதும் அழகாகவும், இளமையாகவும், மென்மையாகவும் வைத்திருக்க உதவும் டோனர்கள் உங்களுக்கு சிறந்த தேர்வாக அமையும்

home made toners for dry skin problem

பெண்களின் முக அழகிற்கு மிகவும் விலையுயர்ந்த அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தும் அதே வேளையில் அடிப்படை சரும பராமரிப்பிற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குறிப்பாக முக பொலிவிற்கு கிளெசனிங், டோனிங், மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவார்கள். அனைத்து நாட்களிலும் அழகு நிலையங்களுக்குச் சென்று சருமத்தை அழகாக்க முடியுமா? என்பது கேள்விக்குறி தான். இந்த சூழலில் உங்களது சருமத்தை எப்போதும் அழகாகவும், இளமையாகவும், மென்மையாகவும் வைத்திருக்க உதவும் டோனர்கள் உங்களுக்கு சிறந்த தேர்வாக அமையும். இதற்காக கடைகளுக்குச் சென்வு வாங்க வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய இந்த டோனர்களைப் பயன்படுத்தலாம். அவற்றில் சில உங்களுக்காக.

apple toner

வீட்டில் தயார் செய்யும் டோனர்கள்:

ஆப்பிள் சைடர் வினிகர்:

எண்ணெய், வறண்ட போன்ற அனைத்து சரும வகைகளுக்கும் இயற்கையான டோனர்களில் ஒன்றாக உள்ளது ஆப்பிள் சைடர் வினிகர். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் உள்ளார்ந்த அமில தன்மை சருமத்தின் PH அளவை சீராகவும், சமநிலையுடன் வைத்திருக்கவும் உதவுகிறது.

வெள்ளரி தண்ணீர் டோனர்:

வறண்ட சருமத்தை எப்போதும் பொலிவாக வைத்திருக்க வேண்டும் என்றால், வீட்டில் தயாரிக்கப்படும் வெள்ளிரி தண்ணீர் டோனரைப் பயன்படுத்தவும். வெள்ளரியில் உள்ள குளிர்ச்சித்தன்மை மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகள் சருமம் வறண்டு போவதைத் தடுக்கிறது.

பயன்படுத்தும் முறை:

வெள்ளரி தண்ணீர் டோனர் செய்வதற்கு முதலில், இரண்டு வெள்ளரிக்காயை அரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த சாறை ஒரு கொள்கலனுக்கு மாற்றி குளிர்சாதனப் பெட்டியில் சேகரித்து வைக்கவும். பின்னர் தேவைப்படும் போதெல்லாம் காட்டனைப் பயன்படுத்தி துடைத்தெடுத்துக் கொள்ளவும்.

பப்பாளி டோனர்:

வறண்ட சருமத்திற்கு பப்பாளி டோனரைப் பயன்படுத்தவும். இதில் உள்ள அதிகளவு மாய்ஸ்சரைசிங் பண்புகள் சருமத்தை பிரகாசமாக்க வைத்திருக்க உதவுகிறது. இவற்றைத் தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது முகத்தில் சுருக்கங்களைப் போக்கவும், முகப்பருவைத் தடுக்கவும் உதவியாக உள்ளது.

பயன்படுத்தும் முறை:

பப்பாளியின் விதைகளை அகற்றி பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் ஒரு ப்ளெண்டரில் அல்லது மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். இப்போது பப்பாளி டோனர் ரெடி. நீங்கள் வழக்கமாக பேஸ் வாஷ் செய்த பிறகு காட்டனைக் கொண்டு முகத்தில் துடைத்தெடுக்கவும். பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவிக் கொள்ளவும்.

diy face toner

மேலும் படிக்க:குளிர்காலத்தில் தலை முடி பராமரிப்பிற்கான சிம்பிள் டிப்ஸ்கள்!

அரிசி தண்ணீர் டோனர்:

வறண்ட சருமத்திற்கு வீட்டில் தயாரிக்கப்பட்ட அரிசி தண்ணீர் டோனரைப் பயன்படுத்தவும். முகத்தை பளபளப்பாக ஜப்பானியர்கள் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தி வரும் அழகு சாதனப் பொருட்களில் முக்கியமானது அரிசி தண்ணீர். அரிசி கழுவிய தண்ணீரைக் கொண்டு முகத்தை கழுவும் போது இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தை ஈரப்பதமாக்கவும், விரைவில் வயதான தோற்றம் ஏற்படுவதையும் தடுக்க உதவுகிறது.

Image source - Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP