Home Remedies for Acne: முகப்பருக்களை குணப்படுத்த வீட்டு வைத்தியம் இதோ..!

முகப்பருக்களை குணப்படுத்த வீட்டு வைத்தியம் என்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம். 

pimple treatment
pimple treatment

பெரும்பாலான பெண்களுக்கு தங்கள் முகத்தை பளபளப்பாக வைத்திருக்க வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனால் இதற்கு இடையூறாக இருப்பது முகப்பருக்கள் தான். பெண்கள் மட்டும் இல்லாமல் ஆண்களுக்கும் இந்த முகப்பரு பிரச்சனைகள் உண்டு. இந்த முகப்பருக்கள் நம் முகத்தின் அழகை சீர்குலைக்கிறது. குறிப்பாக பருவ வயதில் இருக்கும் பெண்களுக்கு அதிகமாக முகப்பருக்கள் ஏற்படும். இந்த முகப்பரு முகத்தில் மட்டும் இல்லாமல் கழுத்து முதுகு கழுத்தின் பின்புறங்களில் கூட ஏற்படலாம்.

இந்த முகப்பருக்கள் ஏற்படும் முக்கிய காரணம் நம் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேறாமல் தங்கி விடுவது தான். அதேபோல தூசி, கிருமிகள் படிவதாலும் முகப்பருக்கள் உண்டாகிறது. ஆரோக்கியமான உணவு முறை மன அழுத்தம் போன்றவை இந்த முகப்பருக்களை ஏற்படுத்தும் காரணமாக அமைகிறது. வீட்டில் இருந்தபடி இயற்கை முறையில் இந்த முகப்பருக்கள் வராமல் தடுப்பது எப்படி என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

நாமக்கட்டி:

JcoeRWwL. AC UF, QL ()

பொதுவாக குழந்தைகள் வயிற்று வலி என்று அழுதால் வயிற்றின் மேல் புறத்திற்கு இந்த நாமக்கட்டியை பூசுவார்கள். இது நம் உடலுக்கு அதிக குளிர்ச்சி மிகுந்தது. சிறுவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் இந்த நாமக்கட்டையை பயன்படுத்தலாம். இந்த நாமக்கட்டியை கல்லில் கரைத்து பேஸ்ட் போல செய்து பயன்படுத்த வேண்டும். இதில் தண்ணீருக்கு பதிலாக பன்னீர் தெளித்து குலைத்து முகத்தில் இருக்கும் முகப்பருக்கள் மேல் தடவி வர வேண்டும். இந்த நாமக்கட்டியை பன்னீர் கலந்து குழைத்து முகப்பருக்களில் தேய்த்து சிறிது நேரம் காய விடுங்கள். இதற்குப் பிறகு நன்கு குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் போதும் இது முகத்தை குளிர்ச்சியாக வைப்பதன் மூலம் முகப்பருக்கள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

பட்டை:

முகப்பருக்களுக்கு ஒரு சிறந்த மருந்து இந்த பட்டை. நம் முகத்தில் பருக்கள் ஏற்பட்ட இடத்தில் இந்த பட்டை பொடியை தடவி வந்தால் போதும். தேவையான அளவு பட்டை பொடி எடுத்து சிறிது தேன் கலந்து பேஸ்ட் போல செய்து முகத்தில் தடவி வரலாம். இதை முகப்பருக்கள் இருக்கும் இடத்தில் மட்டும் தடவ வேண்டும். உங்கள் முகத்தில் எங்கு எல்லாம் முகப்பருக்கள் இருக்கிறதோ அங்கு மட்டும் இந்த பேஸ்ட்டை தடவி குறைந்தது 15 நிமிடங்கள் காய வைக்க வேண்டும். இதற்கு பிறகு நன்கு குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவி பிறகு ஐஸ்கட்டியால் முகம் முழுவதும் ஒத்தடம் கொடுங்கள். இது நாளடைவில் முகப்பருக்களை குணப்படுத்த பெரிதும் உதவுகிறது.

மேலும் படிக்க: இயற்கை முறையில் பளபளப்பான தலைமுடி பெறுவதற்கு இதை ட்ரை பண்ணுங்க!

பூண்டு:

நம் வீடுகளில் சமைக்கும் பல உணவுப் பொருட்களில் இந்த பூண்டு முக்கிய பங்கு வகிக்கிறது. இது காரத்தன்மை கொண்டிருக்கும் ஒரு உணவு பொருள் என்றாலும் இதில் ஆன்டிஆக்சிடென்ட்கள் அதிக அளவு நிறைந்துள்ளது. இதனால் முகப்பருக்களில் ஊடுருவி உள்ளிருக்கும் கிருமிகளை அழிக்க பூண்டு பெரிதும் உதவுகிறது. நம் முகத்தில் முகப்பருக்கள் அதிகமாக இருக்கும் போது எரிச்சல் மற்றும் வலி ஏற்படலாம். அப்போது இந்த பூண்டு தடவினால் கூடுதலாக எரிச்சலை உண்டாக்கும். ஆனால் கண்டிப்பாக முகப்பருக்களை குணப்படுத்த உதவும். அதேபோல இந்த பூண்டை தோல் உரித்து நசுக்கி முகப்பரு இருக்கும் இடத்தில் லேசாக தேய்க்க வேண்டும். இதற்குப் பிறகு 10 நிமிடங்கள் கழித்து முகத்தை ஜில் தண்ணீரில் கழுவி கொள்ளுங்கள்.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP