உங்கள் தலைமுடியை இயற்கையான முறையில் பராமரிக்க விரும்பினால், துளசி மற்றும் வேப்பிலையின் இந்த அருமையான கலவையை பயன்படுத்தலாம். ஆயுர்வேதத்தில் முக்கியமானதாக கருதப்படும் இந்த இரண்டு மூலிகைகளும், பல நூற்றாண்டுகளாக நமது சருமம் மற்றும் கூந்தலுக்கு ஏற்றதாக போற்றப்படுகின்றன. இவற்றில் நோய் தீர்க்கும் மற்றும் தூய்மைப்படுத்தும் குணங்கள் நிறைந்துள்ளன.
மேலும் படிக்க: Korean skin care: கண்ணாடி போன்ற பொலிவான சருமத்தை பெற கொரியன் ஸ்கின் கேர்; இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க
பொடுகு, அரிப்பு மற்றும் உச்சந்தலையில் கிருமி தொற்றுகளை குறைக்க வேப்பிலை உதவுகிறது. அதே சமயம், முடியின் வேர்களுக்கு ஊட்டமளித்து ஆரோக்கியமான முடி வளர்ச்சியை துளசி தூண்டுகிறது. நீங்கள் வீட்டிலேயே துளசி மற்றும் வேப்பிலை கொண்டு எப்படி ஹேர்பேக் தயாரித்து பயன்படுத்தலாம் என்று இதில் காண்போம்.
இந்த ஹேர்பேக் தயாரிப்பதற்கு ஒரு கைப்பிடி வேப்பிலை, ஒரு கைப்பிடி துளசி இலைகள், 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் அல்லது வேறு ஏதேனும் ஒரு எண்ணெய், 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில், துளசி மற்றும் வேப்பிலைகளை கழுவி, அதில் உள்ள தூசிகளை நீக்கவும். பின் அவற்றை உலர வைக்கவும். இந்த ஹேர்பேக் தயாரிக்க இரண்டு இலைகளையும் சிறிது தண்ணீர் சேர்த்து மிருதுவாக அரைக்கவும். இப்போது, தேங்காய் எண்ணெய்யை லேசாக சூடாக்கி, சில துளிகளை இந்த கலவையோடு சேர்க்கவும். இந்த கலவையை மீண்டும் ஒருமுறை அரைக்க வேண்டும். பிறகு மீதமுள்ள கற்றாழை ஜெல்லை சேர்க்கலாம்.
மேலும் படிக்க: உங்கள் கூந்தலை அடர்த்தியாக மாற்ற உதவும் சியா விதைகள்; இந்த நேரத்தில் எடுத்துக் கொண்டால் கூடுதல் நன்மைகள்
தலைமுடியை நடுவில் வகிடு எடுத்து சீவிக்கொள்ளவும். இப்போது, முடியின் வேர்க்கால்களை தூண்டும் வகையில் உச்சந்தலையில் மசாஜ் செய்யவும். பின்னர், இந்த ஹேர்பேக்கை உச்சந்தலை மற்றும் முடி இழைகள் முழுவதும் நேரடியாகவும், சமமாகவும் தடவவும். ஒரு ஷவர் கேப் கொண்டு தலையை மூடி, ஒரு மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும். இனி, மிதமான ஷாம்பு கொண்டு வெதுவெதுப்பான நீரில் குளித்து விடலாம். இதற்கு பின்பு நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் கண்டிஷனர் அல்லது சீரம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த ஹேர்பேக் முடி வளர்ச்சிக்கு உதவுவதுடன் மட்டுமல்லாமல், வேறு பல நன்மைகளையும் வழங்குகிறது. பொடுகு மற்றும் வறட்சியை குறைக்கிறது. முடியின் வேர்களை வலுப்படுத்தி இயற்கையான பளபளப்பையும் வளர்ச்சியையும் ஊக்குவிக்கும். உங்கள் உச்சந்தலையை புத்துணர்ச்சியுடன் சுத்தமாக வைத்திருக்கும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com