Watermelon Benefits For Skin : சரும ஆரோக்கியத்திற்கு உதவும் தர்பூசணி!

தர்பூசணியில் வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் உடல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் பேருதவியாக உள்ளது.

watermelon skin care health

நம்மில் பலரும் சருமத்தை எப்போதும் அழகாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்போம். இதற்காக பல மெனக்கெடுவோம். தங்களது அழகைப் பராமரித்துக் கொள்வதற்குப் பலருக்கு நேரம் கிடைக்கும். பலருக்கு சுத்தமாக நேரம் கிடைக்காது. இனி அந்த கவலை உங்களுக்குத் தேவையில்லை. தினமும் தர்பூசணி பழத்தை உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொண்டால் போதும். உங்களது சருமத்தை எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். இதோ எப்படி? என இங்கே அறிந்துக் கொள்வோம்.

watermelon skin glowing

சரும ஆரோக்கியத்தில் தர்பூசணி:

  • தர்பூசணியில் உள்ள வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் உடல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் பேருதவியாக உள்ளது.
  • தர்பூசணியில் 92 சதவீதம் அளவிற்கு நீர்ச்சத்துக்கள் உள்ளது. எனவே தினமும் இதை நீங்கள் உட்கொள்ளும் போது, உடலை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவியாக உள்ளது. மேலும் அனைத்துப் பருவக்காலங்களிலும் சருமம் வறண்டு விடுவதையும் தடுக்கிறது.
  • குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் சருமத்தில் சுருக்கங்கள், கோடுகள் ஏற்படும். இவற்றிலிருந்து நீங்கள் தப்பிப்பதற்கு தர்பூசணி உங்களுக்கு சிறந்ததாக அமையும். ஆம் இதில் உள்ள லைகோபீன் மற்றும் வைட்டமின் சி போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தைப் பாதுகாக்கிறது.
  • குளிர்காலம் அல்லது வெயில்காலமாக இருந்தாலும் சரும பிரச்சனை ஏற்படுகிறது. தீங்கு விளைவிக்கும் புற ஊதாக்கதிர்களிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் தர்பூசணியை பயன்படுத்த வேண்டும். இதில் உள்ள வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. மேலும் சருமத்தின் அமைப்பு மற்றும் நெகிழ்ச்சித்தன்மையைப் பராமரிக்க உதவுகிறது.
  • தர்பூசணியில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் லுடோலின் போன்ற அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது சருமத்தில் ஏற்படும் வீக்கம், எரிச்சல், முக சிவப்பாகுதல் போன்றவற்றைத் தடுக்க பேருதவியாக உள்ளது.
  • இதில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உடலில் இருக்கும் தேவையில்லாத நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. மேலும் முகப்பரு எதிர்த்துப் போராடவும், தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவியாக உள்ளது.
  • தர்பூசணியை அதிகளவு நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் போது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இது சரும செல்களுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை எடுத்துச் செல்கிறது.
  • இதுப்போன்ற பல்வேறு பண்புகளை தர்பூசணி கொண்டுள்ளதால், இதை நீங்கள் பழமாகவே அல்லது ஜஸ் போன்று நீங்கள் செய்துசாப்பிடலாம். உடல் ஆரோக்கியத்தோடு சரும ஆரோக்கியத்திற்கும் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
healthy juice

இது மட்டுமின்றி உங்களின் ஒட்டுமொத்த உணவுமுறை, வாழ்க்கை முறை மற்றும் தோல் பராமரிப்பு வழக்கம் போன்ற பிற காரணிகளும் ஆரோக்கியமான சருமத்தை அடைவதற்கும் பராமரிப்பதற்கும் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP