
குளிர்காலத்தின் போது தலை முடி சற்று வறண்டு காட்சி அளிக்கும். குளிர்ந்த காற்று, காற்றில் உள்ள ஈரப்பதம் குறைவது போன்றவை தலைமுடியின் வேர்களை பலவீனப்படுத்தி, முடி உதிர்வை அதிகரிக்க செய்கின்றன. பல விதமான ஷாம்பூக்கள் மற்றும் கண்டிஷனர்களை பயன்படுத்தினாலும் இதற்கு தீர்வு கிடைப்பதில்லை என்று பலர் கூறுகின்றனர். அந்த வகையில், நல்லெண்ணெய் உங்களுக்கு உதவக்கூடும்.
சமையலறையில் இருக்கும் இந்த ஒரு பொருள், கூந்தல் பராமரிப்பில் அற்புதம் செய்யக்கூடியது. நல்லெண்ணெயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், ஒமேகா கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் குளிர்கால முடி உதிர்வுக்கு சிறந்த தீர்வாக அமைகின்றன. இந்தக் கட்டுரையில், நல்லெண்ணெயை பயன்படுத்தி எப்படி முடி உதிர்வை தடுப்பது மற்றும் கூந்தலை எப்படி பராமரிப்பது என்பதை காண்போம்.
முதலில், நல்லெண்ணெயை கூந்தலில் பயன்படுத்துவதன் மூலம் எந்த வகையான நன்மைகள் கிடைக்கின்றன என்று இதில் பார்க்கலாம்.
மிதமான சூட்டில் நல்லெண்ணெயை தலையில் தேய்த்து மசாஜ் செய்யும் போது, அது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் கூந்தல் வேர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கிறது. இது முடி அடர்த்தி குறைவதை தடுப்பதோடு, முடி உதிர்வதையும் குறைத்து, வேரிலிருந்து முடியை வலுவாக்குகிறது.
மேலும் படிக்க: Amla Oil for Hair: குளிர்காலத்தில் நெல்லிக்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் கூந்தலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
இன்றைய காலத்தில் இளநரை பலருக்கும் பெரிய பிரச்சனையாக உள்ளது. நல்லெண்ணெயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், உச்சந்தலையில் ஏற்படும் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ் (Oxidative stress) பாதிப்பை குறைக்கின்றன. இது தலைமுடி விரைவில் நரைப்பதை தடுத்து, முடியின் கருமை நிறத்தை பாதுகாக்க உதவுகிறது.

நல்லெண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள் (Fatty acids) முடியின் ஆழம் வரை சென்று ஊடுருவக்கூடியவை. குளிர்காலத்தில் ஏற்படும் வறட்சி, முடியின் நுனியில் ஏற்படும் பிளவுகள் மற்றும் மாசுக்களால் ஏற்படும் பாதிப்புகளை இது சரிசெய்கிறது. இது இயற்கையான கண்டிஷனராக செயல்பட்டு முடியை பளபளப்பாக மாற்றுகிறது.
நல்லெண்ணெய், தலைமுடிக்கு ஒரு பாதுகாப்பு கவசம் போன்று செயல்படுகிறது. இதைத் தொடர்ந்து பயன்படுத்தும் போது, புறஊதாக்கதிர்கள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுக்களிலிருந்து முடியை பாதுகாக்கிறது.
குளிர்காலத்தில் பொடுகு தொல்லை அதிகரிப்பது வழக்கம். நல்லெண்ணெயில் இயற்கையாகவே பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது உச்சந்தலையை சுத்தமாக வைத்திருப்பதோடு, அரிப்பு மற்றும் பொடுகு தொல்லையை குறைக்கிறது.

இது பலருக்கு நன்மை அளிக்கும் செயல்முறையாகும். எனினும், சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் அல்லது குளிர்ச்சி ஒவ்வாமை கொண்டவர்கள், நல்லெண்ணெயை நீண்ட நேரம் தலையில் ஊறவைப்பதை தவிர்க்கவும். சிறிது நேரம் மட்டும் தேய்த்துவிட்டு வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நல்லது. உங்களுக்கு நீண்ட காலமாக அதீத முடி உதிர்வு இருக்கிறது என்றால், மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com