
குளிர்காலம் என்றால் சரும வறட்சிக்கு மட்டுமின்றி, கூந்தல் ஆரோக்கியத்திற்கும் அது ஒரு சவாலான காலமாகும். குளிர்ந்த காற்று, குறைந்த ஈரப்பதம் மற்றும் சூடான தண்ணீர் குளியல் ஆகியவை கூந்தலின் இயற்கை எண்ணெய்யை போக்கி, அதை வறண்டு, உதிரக்கூடியதாக மாற்றும். இந்தக் காலத்தில் கூந்தல் உதிர்வு அதிகரிப்பதுடன், அதன் வளர்ச்சி விகிதமும் குறையத் தொடங்கும். உங்கள் கூந்தலுக்கு தேவையான, ஆழமான ஊட்டச்சத்தையும், பாதுகாப்பையும் அளிப்பதன் மூலம் மட்டுமே இந்த குளிர்கால சவால்களை சமாளிக்க முடியும்.
பாரம்பரியமாக, நம்முடைய கூந்தல் பராமரிப்பில் எண்ணெய் மசாஜ் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. சரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட எண்ணெய், குளிர்காலத்தில் உங்கள் உச்சந்தலையின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, முடியின் வேர்க்கால்களை பலப்படுத்தி, கூந்தல் வளர்ச்சியை வேகமாக தூண்டும். இதில், உங்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கவும், குளிர்கால சேதத்தை தடுக்கவும் உதவும் 6 அத்தியாவசிய எண்ணெய்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
தேங்காய் எண்ணெய் ஒரு அதிசய எண்ணெய் என்று அழைக்கப்படுகிறது. இது குளிர் காலத்தில் அவசியம் பயன்படுத்தப்பட வேண்டிய பட்டியலில் முதன்மையான இடத்தை வகிக்கிறது. தேங்காய் எண்ணெய் கூந்தலின் உள் பகுதிக்கு ஊடுருவி, புரத இழப்பை தடுக்கிறது. இதனால், குளிர்காலத்தில் கூந்தல் உதிராமல் பாதுகாக்க உதவுகிறது.

இதை லேசாக சூடாக்கி உச்சந்தலையில் மசாஜ் செய்வதால், இரத்த ஓட்டம் மேம்பட்டு, கூந்தல் உதிர்வது குறையும். வறண்ட, அரிப்புள்ள உச்சந்தலைக்கு இது இதமளித்து, கூந்தலின் முனைகளை ஈரப்பதத்துடன் வைக்கிறது. இது கூந்தல் உதிராமல் இருக்க மிக முக்கியம் ஆகும்.
மேலும் படிக்க: Winter Hair Care Tips: குளிர்காலத்தில் முடி உதிர்வு அதிகரிக்கிறதா? கூந்தலை இயற்கையாக வலுப்படுத்த உதவும் வீட்டு வைத்திய முறைகள்
விளக்கெண்ணெய் அதன் அடர்த்தியான அமைப்பு காரணமாக, பலவீனமான கூந்தல் இழைகளை பலப்படுத்துகிறது. இது உச்சந்தலை மற்றும் நெற்றிப் பகுதிகளில் மீண்டும் கூந்தல் வளர்ச்சியைத் தூண்டுகிறது. விளக்கெண்ணெய் ரிசினோலிக் அமிலம் (Ricinoleic acid) நிறைந்தது. இது உச்சந்தலையின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இது உதிர்ந்த இடத்தில் மீண்டும் கூந்தல் வளர உதவுகிறது.

இதை எளிதாக பயன்படுத்துவதற்கு, சம அளவு தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து பயன்படுத்தலாம். இவ்வாறு செய்யும் போது அதிக பிசுபிசுப்பு ஏற்படுவதை தடுத்து, சீராக உபயோகிக்க முடியும்.
பாதாம் எண்ணெய் இலகுவானது என்றாலும், ஊட்டச்சத்துகள் நிறைந்தது. இது வைட்டமின் ஈ, மெக்னீசியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளை கொண்டுள்ளது. இதை தொடர்ந்து பயன்படுத்துவதால், கூந்தல் முனைகள் மென்மையாகி, குளிர்காலத்தில் ஏற்படும் வறட்சி குறையும். இது மிக விரைவாக உறிந்து கொள்ளப்படுவதால், பிசுபிசுப்பு உணர்வை ஏற்படுத்தாது.
தினசரி அல்லது இரவு நேரக் கூந்தல் பராமரிப்புக்கு இது ஏற்றதாக இருக்கும். இதனை சாதாரணமாக கூந்தலில் தடவலாம். இதில் உள்ள வைட்டமின் ஈ சத்து கூந்தலை ஆழமாக பாதுகாக்கிறது.
நெல்லிக்காயில் இருந்து பெறப்படும் எண்ணெய், கூந்தல் வேர்களை பலப்படுத்தவும், பருவகால கூந்தல் உதிர்வை தடுக்கவும் பரவலாக உபயோகிக்கப்படுகிறது. நெல்லிக்காயை போலவே, இந்த எண்ணெய்யிலும் வைட்டமின் சி மற்றும் அன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு பங்களிக்கிறது. இது இளநரையை தடுக்கிறது மற்றும் குளிர்ந்த காலநிலையால் இழந்த கூந்தலின் இயற்கையான பளபளப்பை மீட்டெடுக்கிறது.
நெல்லிக்காய் எண்ணெய்யை உங்கள் கூந்தலில் ஒரு ஹேர்பேக் போன்று பயன்படுத்தலாம். இதனை தலையில் தடவிய பின்னர், சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு குளித்து விடலாம்.
மேலும் படிக்க: Coconut Oil for Skin: குளிர்காலத்தில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் உங்கள் சருமத்திற்கு கிடைக்கும் ஆரோக்கிய பயன்கள் என்னென்ன?
சமீபகாலமாக, வெங்காய எண்ணெய் கூந்தல் பராமரிப்பில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது கெரட்டின் (Keratin) உற்பத்தியை தூண்டி, கூந்தல் அமைப்பை வேரில் இருந்து பலப்படுத்துகிறது. இது கூந்தல் குறைவாக உள்ள பகுதிகளில் மீண்டும் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. உச்சந்தலை அழற்சி அல்லது மன அழுத்தம் காரணமாக ஏற்படும் கூந்தல் உதிர்வை இது குறைக்கிறது.
வெங்காயத்தின் இயற்கையான வாசனையை தவிர்க்க, மூலிகைகள் அல்லது வேறு சில எண்ணெய்கள் கலந்த இதனை பயன்படுத்தலாம்.
நல்லெண்ணெய் இயற்கையாகவே வெப்பப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால், குளிர்ந்த காலநிலையில் செய்யப்படும் மசாஜுக்கு இது மிகவும் பொருத்தமானது. இது உச்சந்தலைக்கு ஊட்டமளித்து வறட்சியை குறைக்கிறது. மேலும், வலுவான, பளபளப்பான கூந்தல் வளர்ச்சிக்கு பங்களிக்கிறது. பாரம்பரியமாக நம்முடைய இயற்கை சிகிச்சையில் பயன்படுத்தப்படும் நல்லெண்ணெய், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. இதைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், கூந்தல் பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும், குளிர்காலம் முழுவதும் அதிக நெகிழ்வுத்தன்மையுடனும் இருக்கும்.
இந்த 6 எண்ணெய்களும் குளிர்காலத்தில் உங்கள் கூந்தலுக்கு தேவையான பாதுகாப்பையும், ஊட்டச்சத்தையும் அளிப்பதில் தனித்துவமானவை. குறைந்தது வாரத்திற்கு இரண்டு முறையாவது ஏதேனும் ஒரு எண்ணெய்யை லேசாக சூடாக்கி, உச்சந்தலையில் நன்கு மசாஜ் செய்து, ஒரு மணி நேரம் ஊற வைத்த பின் குளிக்கவும். இது உங்கள் கூந்தல் வேர்களை வலுப்படுத்துவதுடன், குளிர்காலம் முழுவதும் ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சியை உறுதி செய்யும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com