
வெயில் காலத்தில் உடல் சூட்டைத் தணிக்க வேண்டும் என்பதற்காக வெந்தயத்தை அதிகளவில் பயன்படுத்துவோம். இரும்புச் சத்து, நார்ச்சத்து உள்ளிட்ட பல்வேறு விதமான ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் அனைத்துப் பருவ காலத்திற்கும் உடல் நலத்தைக் காக்கும் உற்ற நண்பனாக உள்ளது . இதனால் தான் நமது வீடுகளில் தவிர்க்க முடியாத சமையல் பொருள்களில் ஒன்றாக உள்ளது.
இதுவரை வயிற்று வலி, உடல் சூடு, முடி வளர்வதற்கு போன்ற உடல் ஆரோக்கியத்திற்காக மட்டும் வெந்தயத்தைப் பயன்படுத்தி வந்திருக்கிறோம். அதே சமயம் வெந்தயத்தைப் பயன்படுத்தினால் உங்களது சருமத்தை அழகாக்க முடியும் என்பது பற்றி இதுவரை அறிந்திருக்கிறீர்களா? ஆம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, சருமத்தைப் பொலிவாக்குவதற்கு வெந்தயம் பேஸ் பேக்கை உபயோகிக்கலாம். இதோ இன்றைக்கு வெந்தய பேஸ் பேக் எப்படி தயார் செய்வது? பயன்படுத்தும் முறை குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

மேலும் படிக்க: தங்கம் போன்று சருமம் ஜொலிக்க ஜொலிக்க தினமும் சுடு தண்ணீர் குடிங்க!
வெந்தய பேஸ் பேக் தயார் செய்வதற்கு முதலில் வெந்தயத்தை வறுத்து பொடியாக்கிக் கொள்ளவும். பின்னர் இதனுடன் கற்றாழை ஜெல்லைச் சேர்த்தால் போதும். சருமத்தை அழகாக்க உதவும் வெந்தய பேஸ் பேக் ரெடி. மேலும் வெந்தய பவுடருடன் பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்தும் பேஸ் பேக் போன்று உபயோகிக்கலாம்.
வீட்டிலேயே தயார் செய்யப்படும் வெந்தய பேஸ் பேக்கை நீங்கள் கழுத்து மற்றும் முகத்தில் அப்ளை செய்யவும். பின்னர் 15 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தை ஸ்கரப் செய்ததும், குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால் போதும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி சருமத்தைப் பிரகாசமாக வைத்திருக்க உதவும்.
மேலும் படிக்க: வெயில் காலத்திலும் சருமம் டாலடிக்க தர்பூசணியை இப்படி ட்ரை பண்ணுங்க!
Image source - Google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com