
சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக மதிய வேளைகளில் வீட்டை விட்டு வெளியே பலர் செல்வதில்லை. அந்தளவிற்கு வெயிலின் மீதான பயம் உள்ளது. ஒருவேளை வேலை நிமிர்த்தமாக வெளியில் சென்றாலும் எப்போது வீட்டிற்கு வருவோம் என்ற மனநிலை தான் இருக்கும். மேலும் குளிர்ச்சியாக தண்ணீர் குடிப்பது, தர்பூசணி, வெள்ளரி போன்ற பழங்களையும் சாப்பிடுவோம். இதில் உள்ள நீர்ச்சத்துக்கள் வெயிலின் தாக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
இப்படி வெயிலிருந்து உடலைப் பாதுகாப்பதற்கு மட்டுமே தர்பூசணியைப் பயன்படுத்துகிறோம் என்ற மனநிலையில் முற்றிலும் தவறானது. உடலின் சூட்டைத் தணிப்பதற்கு மட்டுமல்ல, வெயில் காலத்தில் உங்களது சருமத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றாலும் தர்பூசணியை நீங்கள் பயன்படுத்தலாம். இதோ எப்படி? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

மேலும் படிக்க: சமையலுக்கு மட்டுமல்ல, முக பளபளப்பிற்கும் சிவப்பு பருப்பை உபயோகிக்கலாம்! எப்படி தெரியுமா?
நீர்ச்சத்துக்கள் நிறைந்த தர்பூசணியை சரும பராமரிப்பிற்குப் பயன்படுத்தலாம். இதில் உள்ள நீர்ச்சத்துக்கள் இயற்கையாக சருமத்தைப் பாதுகாப்பதோடு வறண்டு விடாமலும் பாதுகாக்கிறது. இந்த பேஸ் பேக் செய்வதற்கு முதலில், தர்பூசணியை மிக்ஸியில் அரைத்துக் கொண்டு சல்லடையில் வடிகட்டவும். பின்னர் இதை ஒரு பவுலில் மாற்றி பிரிட்ஜில் வைத்துக் கொள்ளவும். எப்பொழுது உங்களது முகம் வறண்டு விடுவது போன்று உணர்கிறீர்களோ? அப்பொழுதெல்லாம் இந்த தர்பூசணி ஐஸ் பேக்கை எடுத்து முகத்தில் தடவினால் போதும். முகம் எப்போதும் குளிர்ச்சியாகவே இருக்கும்.
தர்பூசணி சாற்றை சர்க்கரை மற்றும் தேங்காய் எண்ணெய்யுடன் சேர்ந்து பேஸ் பேக் போன்று கலந்துக் கொள்ளவும். பின்னர் இதை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் மசாஜ் செய்யவும். பின்னர் வெதுவெதுப்பான நீரைக் கொண்டு முகத்தைக் கழுவினால் போதும். தர்பூசணியில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், சருமத்தைப் பாதுகாக்கவும், பளபளப்பாக்கவும் உதவியாக உள்ளது.
தர்பூசணி சாறு புற ஊதா கதிர்வீச்சினால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்கவும், சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றமான லைகோபீன் நிறைந்திருப்பதால் பேஸ் மாஸ்க் போன்று பயன்படுத்தலாம். இந்த பேஸ் மாஸ்க் செய்வதற்கு தர்பூசணியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் சிறிது தேன் மற்றும் தயிர் சேர்த்து கலந்துக் கொண்டு உங்களது முகத்தில் தடவி 15-20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும். பின்னர் வெதுவெதுப்பான நீரைக் கொண்டு முகத்தைக் கழுவினால் போதும் சருமம் பொலிவுடன் காணப்படும்.
மேலும் படிக்க: உங்கள் முகம் ஜொலிக்க வேண்டுமா? முல்தானி மிட்டியை இப்படி பயன்படுத்துங்க!

முகத்தைப் பராமரிப்பதற்கு மட்டுமல்ல தர்பூசணியை உதடுகளைப் பராமரிக்கவும் பயன்படுத்தலாம். வெயில் காலத்தில் உதடுகளில் ஏற்படும் வெடிப்பு மற்றும் தோல் உரித்தல் போன்ற பிரச்சனைகளைத் தீர்க்க தர்பூசணி சாறுடன் நாட்டு சர்க்கரை மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து உதடுகளின் மேல் தடவுங்கள். பின்னர் வெதுவெதுப்பான நீரைக் கொண்டு கழுவினால் போதும் உதடுகளில் உள்ள வெடிப்புகள் சரியாகக்கூடும்.
Image source - Google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com