
குளிர்காலத்தில் சுடு தண்ணீர் குடித்தால் சளித்தொல்லை மற்றும் உடல் வலி எதுவும் இருக்காது என்பார்கள். ஆம் வெதுவெதுப்பான நீர் நமது உடலில் உள்ள தசைகளைத் தளர்த்துவதன் மூலம் உடல் வலியைக் குறைப்பது மட்டுமல்ல, உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. சீரான இரத்த ஓட்டம் உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பதோடு இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைகிறது. இவ்வாறு வெது வெதுப்பான நீரைக் குடிப்பதால், உடல் நலத்தை எப்படி பாதுகாக்கிறதோ? அதே போன்று தான் வெதுவெதுப்பாக சுடு தண்ணீரை உட்கொள்ளும் போது நமது சருமத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். இதோ எப்படி என்பது? என்பது குறித்து அறிந்துக் கொள்வோம்.
மேலும் படிக்க: வெயில் காலத்திலும் சருமம் டாலடிக்க தர்பூசணியை இப்படி ட்ரை பண்ணுங்க!
தினமும் காலை மற்றும் இரவில் சுடு தண்ணீர் குடிக்கும் போது சருமத்தின் இரத்த ஒட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. சூடான நீர் சருமத்தை ஹைட்ரேட் செய்து, வறட்சியைத் தடுப்பதோடு சருமத்திற்கு பளபளப்பை ஊக்குவிக்கிறது. மேலும் சருமத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கிள்களைக் குறைத்து சருமத்தை எபபோதும் இளமையாகவும், பொலிவாகவும் வைத்திருக்க உதவுகிறது.
பெண்கள் தொடர்ச்சியாக வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால் உடலின் வெப்பநிலை அதிகரித்து வியர்வை வெளியேறும். இந்த செயல்முறை மேலும் உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுவதோடு முகப்பரு, பருக்கள் மற்றும் தோலில் வெடிப்புகளை ஏற்படுத்தும் பாக்டீரியா தொற்றுகளிலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது.
வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதன் இன்றியமையாத நன்மைகளில் ஒன்று, இது சருமத்தை புத்துணர்ச்சியுடனும் மென்மையாக மாற்றுவது தான். ஆம் தினமும் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதன் மூலம் சருமத்தில் சேதமடைந்த செல்களை சரிசெய்வதோடு கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது.
ஒவ்வொரு நாளும் வெதுவெதுப்பான நீரை உட்கொள்வதன் மூலம் உங்கள் உடலை நீரேற்றமாகவும், உங்கள் சருமத்தை ஈரப்பதமாகவும் வைத்திருக்க முடியும். உடலின் பல்வேறு பகுதிகளுக்கு போதுமான ஊட்டச்சத்துக்களை வழங்க இரத்த ஓட்டம் மற்றும் சரியான இரத்த ஓட்டத்தை மேம்படுத்த இது ஒரு இயற்கையான தீர்வாக அமையும் என்பதால் எவ்வித அச்சமும் இன்றி வெதுவெதுப்பான தண்ணீரைக் குடிக்கலாம்.
நீங்கள் வெதுவெதுப்பான நீரை உட்கொள்வதால் சருமத்தை எப்போதும் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும், இளமையாகவும் வைத்திருக்க முடியும். தீங்கு விளைவிக்கும் நச்சுகள் மற்றும் பாக்டீரியாக்களை சருமத்திலிருந்து நீக்குகிறது. சருமத்தில் நெகிழ்ச்சித் தன்மையை அதிகரித்து முன்கூட்டியே வயதானத் தோற்றத்தைத் தடுக்க உதவுகிறது. மேலும் முகத்தில் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்குவதற்கு உதவுகிறது.
மேலும் படிக்க: கோடையில் ஆயில் ஸ்கின் பிரச்சனையை சரி செய்ய தினமும் இப்படி செய்யுங்க!
இதுபோன்ற சருமத்திற்கு சுடு தண்ணீர் பல வகைகளில் உதவியாக உள்ளது. ஆரோக்கியம் அளிக்கும் என்பதற்காக அளவுக்கு மீறி உட்கொள்ளக்கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
Image source- Google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com