
பெண்கள் அனைவருக்கும் மேக்கப் போடுவது மிகவும் பிடித்தமான ஒன்று. பலரும் முகத்தைக் கூடுதல் அழகாகக் காட்ட வித்தியாசமான மேக்கப்களை தினமும் முயற்சி செய்கிறார்கள். அந்த வரிசையில் ஐ-மேக்கப் என சொல்லப்படும் கண் பகுதிகளில் போடப்படும் மேக்கப் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு விஷயமாகும். ஆனால் உணர்திறன் வாய்ந்த கண்கள் உடையவர்கள் ஐ-மேக்கப் போடும்போது ஒரு சில முக்கியமான விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.
இதுப்போன்ற விஷயங்களை நாம் முறையாகக் கவனிக்க தவிறினால், இவை நம் கண்களுக்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். நீங்களும் இதுப் போன்ற தவறுகளை செய்து வந்தால், இனி மாற்றிக்கொள்ளுங்கள். ஐ-மேக்கப் போடும் போதும், கண்களைப் பராமரிக்கும் சில வழிமுறைகள் பற்றி இந்த பதிவில் படித்தறிந்து பயனடையுங்கள்.
உணர்திறன் வாய்ந்த கண்கள் உடையவர்கள், ஐ-மேக்கப்பில் கலர் லென்ஸ்களைப் பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் இதுப் போன்ற லென்ஸ்களைப் பயன்படுத்தும்போது கண்களிலிருந்து நீர் வடிய தொடங்கும். சிலசமயம் கண்களில் எரிச்சல் உணர்வும் ஏற்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: ஆன்லைனில் லிப்ஸ்டிக் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை!!
உங்களுக்கு உணர்திறன் வாய்ந்த கண்கள் இருந்தால் நீங்கள் தெரியாமல் கூட லோக்கல் பிரஷ்களை பயன்படுத்திவிடாதீர்கள். நல்ல பிராண்ட் மற்றும் சாஃப்ட்டான உணர்வு தரும் மேக்கப் பிரஷ்களை வாங்குவதே சிறந்தது. இதற்கு உண்மையான முடியைக் கொண்டு தயாரிக்கட்ட பிராண்டட் மேக்கப் பிரஷ்களை வாங்கலாம்.
உணர்திறன் வாய்ந்த கண்கள் உடையவர்கள், ஐ-மேக்கப் போடும்போது மென்மையான கை அழுத்தம் கொடுத்தே அதை பிளண்ட் செய்ய வேண்டும். இதற்கு மிகவும் மெல்லியதான சிறிய அளவில் இருக்கும் ப்ளெண்டிங் பிரஷ்களை பயன்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: குளிர்காலத்துக்கு ஏற்ற லிப்ஸ்டிக் எது தெரியுமா?

உங்களுக்கு உணர்திறன் வாய்ந்த கண்கள் இருந்தால் நிபுணர்களின் பரிந்துரை இல்லாமல் எந்தவிதமான மேக்கப் பொருட்களையும் பயன்படுத்தக் கூடாது. அதே சமயம் பேட்ச் டெஸ்ட் செய்துவிட்டு தான் அதை பயன்படுத்த வேண்டும். பேட்ச் டெஸ்ட் என்பது மேக்கப் பொருட்களை உள்ளங்கை அல்லது ஏதாவது ஒரு இடத்தில மட்டும் தடவி டெஸ்ட் செய்து பார்ப்பது. தடவிய உடனே எரிச்சல் போன்ற உணர்வு ஏற்பட்டால் அதை பயன்படுத்தக் கூடாது. எந்த வித பிரச்சனையும் ஏற்படவில்லை என்றால் தாரளமாக அதை பயன்படுத்தலாம். எனவே கண்களுக்குப் பயன்படுத்தும் மேக்கப் பொருட்களைப் பேட்ச் டெஸ்ட் செய்ய மறக்காதீர்கள்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com

