லிப்ஸ்டிக் போடாமல் எந்த மேக்கப் லுக்கும் முழுமையடையாது. முகத்திற்கு உடனடி பிரகாசத்தைத் தரும் ஒரு பொருள் லிப்ஸ்டிக். இதன் மீது இருக்கும் ஆசை மற்றும் ஆர்வத்தால் பெண்கள் பலரும் புதிய ஷேட்களில் லிப்ஸ்டிக்குகளை வாங்க பல மணி நேரம் செலவழிக்கிறார்கள். கடைகளிலும் பல ஷேட்களில் லிப்ஸ்டிக் வகைகளைப் பார்க்க முடிகிறது. ஆனால் அடிக்கடி கடைக்குச் சென்று வாங்க நேரம் இல்லாதவர்களுக்குக் கைக்கொடுப்பது ஆன்லைன் ஷாப்பிங். இருப்பினும், ஆன்லைன் ஷாப்பிங்கில் பொருட்களை வாங்குவது எளிதான காரியம் ஒன்றுமில்லை. கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தால் கூட ஏமாற வாய்ப்புகள் அதிகம்.
ஆன்லைன் ஷாப்பிங்கில் நிறைய பொருட்கள் குவிந்து கிடப்பதால் சரியான பொருளைத் தேர்ந்தெடுப்பது சற்று கடினமாக இருக்கும். சில நேரங்களில் அதிக குழப்பத்தால் சிறந்த பொருள் கைநழுவி போகவும் வாய்ப்புண்டு. உங்களுக்கும் ஆல்லைன் ஷாப்பிங்கில் லிப்ஸ்டிக் வாங்கும் பழக்கம் உண்டா? அப்படி வாங்கும்போது எந்தெந்த விஷயங்களை நீங்கள் கவனிக்க வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்.
ஸ்கின் டோனை கவனியுங்கள்
எப்போதுமே ஆன்லைனில் லிப்ஸ்டிக் வாங்கும்போது உங்கள் ஸ்கின் டோன் என்ன? என்பதை முதலில் தெரிந்து கொண்டு அதற்குப் பொருந்தக்கூடிய ஷேட்களை வாங்க வேண்டும். இதைத் தெரிந்து கொண்டால் போதும் லிப்ஸ்டிக் வாங்குவது ரொம்ப ஈஸி. உங்கள் ஸ்கின் டோன் சிவப்பான பிங்கிஷ் டோனில் இருந்தால் அது கூல் டைப் ஸ்கின் டோன். இவர்களுக்கு பிங்க், பெர்ரி, பர்பிள் மற்றும் மேவ் ஷேட் லிப்ஸ்டிக்குகள் பொருத்தமாகக் இருக்கும். இதுவே மஞ்சள் நிறத்தில் சற்று கோல்டன் டோனில் தெரிந்தால் அது வார்ம் டைப் ஸ்கின் டோன். இவர்கள் ஆரஞ்சு, பிரவுன், பீச் மற்றும் கோரல் லிப்ஸ்டிக் ஷேட்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: குளிர்காலத்துக்கு ஏற்ற லிப்ஸ்டிக் எது தெரியுமா?
வாடிக்கையாளர் கருத்துக்களைப் பாருங்கள்
ஆன்லைன் ஷாப்பிங்கில் பொருட்களை வாங்குவதற்கு முன்பு முதலில் பார்க்க வேண்டிய விஷயம் வாடிக்கையாளர் கருத்துக்கள். இதன் மூலம் நீங்கள் வாங்கும் பொருள் சரியானதா? இல்லையா? என்பது உங்களுக்குத் தெரிந்து விடும். அதே போல் பொருளைக் குறித்த ரிவியூ வீடியோக்கள், விளாக் என சொல்லப்படும் அனுபவ வீடியோக்கள் போன்றவற்றை பார்ப்பதும் நல்லது.
பிராண்டட் பொருளைத் தேர்ந்தெடுங்கள்
மக்கள் ஏன் எப்போதும் பிராண்டட் பொருட்களைப் பற்றிப் பேசுகிறார்கள் தெரியுமா? அதன் தரம் தான் காரணம். குறிப்பாக அழகு சாதனப் பொருட்கள் என்று வரும்போது அந்த விஷயத்தில் பிராண்டட் பொருட்களைத் தேர்ந்தெடுப்பது தான் நல்லது. தரம் குறைந்த பொருட்களால் சரும பாதிப்புகள் ஏற்படும். லிப்ஸ்டிக் விஷயத்திலும் இது பொருந்தும். போலியான தரம் குறைந்த லிப்ஸ்டிக்கால் தொற்று, நிறமாற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே ஆன்லைனில் மலிவான லிப்ஸ்டிக் கிடைத்தால் அதை வாங்காதீர்கள். ஒருவேளை அவை தரம் குறைந்த பொருட்களாக இருக்கக்கூடும்.
இந்த பதிவும் உதவலாம்: உதடுகளுக்கு விளக்கெண்ணெய் தடவுவது இவ்வளவு நல்லதா?
சிறிய வடிவிலான லிப்ஸ்டிக்கை தேர்ந்தெடுங்கள்
நீங்கள் லிப்ஸ்டிக் வாங்க முடிவு எடுத்தபின்பு, பெரிய சைஸ் லிப்ஸ்டிக்கை வாங்காமல் அதற்கு பதில் மினி பேக் என சொல்லப்படும் சிறிய வடிவிலான லிப்ஸ்டிக்கை வாங்கி பயன்படுத்தி பாருங்கள். மினி பேக் லிப்ஸ்டிக்குகளின் விலையும் குறைவாக இருக்கும். ஒருவேளை அது சரியானதாக இல்லை என்றாலும் நீங்கள் அதிக கவலை கொள்ள தேவையில்லை. அடுத்த முறை சரியானதைத் தேர்ந்தெடுத்து வாங்கி கொள்ளலாம்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்..
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation