தமிழர்களின் பாரம்பரிய உடை சேலை என்றாலும், பல பெண்களுக்கு புடவைகள் எப்படி கட்டணும் என்பதே தெரிவதில்லை. வீட்டு விசேசங்கள், திருமண நிகழ்வுகள் வந்தால் அம்மாவிடம் அல்லது அக்காவிடம் தான் கொஞ்சம் புடவைக் கட்டி விடுங்களேன்? என்று கெஞ்சுவோம். இனி அந்த கவலை வேண்டாம். முதல் முறையாக சேலைக் கட்டுகிறீர்கள் என்றால் எப்படி ஈஸியாக செய்ய வேண்டும் என்பது குறித்த சில டிப்ஸ்களை இங்கே உங்களுக்காகப் பகிர்கிறோம்.
முதல் முறையாக புடவைக்கட்டுவதற்கான டிப்ஸ்..
புடவையில் பெண்கள் வழக்கத்திற்கு மாறாக அழகாகத் தெரிவார்கள். புடவைகளை முறையாக கட்டுவது என்பதும் ஒரு கலை என்பதால் ஆரம்பத்திலேயே அதை முறையாக கற்றுக்கொள்ள வேண்டும். முதல் முறையாக சேலைக்கட்டும் பெண்களுக்கு ப்ளீட்ஸ்களை அதாவது முந்தாணையை முறையாக எடுக்க முடியாது. எனவே நீங்கள் விசேச வீட்டுகளுக்குச் செல்கிறீர்கள் என்றால், முந்தாணையை முன்கூட்டியே ப்ரீ ப்ளீட்ங் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
உடல் வாகிற்கு ஏற்ப 5 அல்லது 8 ப்ளீட்ஸ்களை வரை எடுத்துக் கொள்ளவும். இது முதல் முறையாக புடவைக் கட்டுபவர்களுக்கு ஈஸியாக இருக்கும். சுடிதார், குர்தி போன்ற மார்டன் ஆடைகளை அணியும் பெண்கள் முதன் முறையாக சேலைக்கட்டும் போது மேல் உள்ள முதல் முந்தாணை கழுத்தை நெருக்குவது போல் தோன்றும். இது உங்களுக்கு சங்கடாகத் தெரியும். எனவே ப்ளீட்ஸ்கள் கழுத்தை நெருக்காமல் இருக்க 2-3 ஸ்பீலிட்களை முந்தானையின் உள்பக்கமாக வைத்து பின் செய்துக் கொள்ளவும்.
மேலும் படிங்க:மணப்பெண்ணுக்கான மெஹந்தி டிசைன்கள்!
புடவைக் கட்டும் போது மேல் முந்தாணைகளுக்கு எந்தளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ? அந்தளவிற்கு இடுப்பில் சொருகக்கூடிய ப்ளீஸ்ட்களுக்கும் கவனமுடன் இருக்க வேண்டும். இடுப்பு ப்ளீட்ஸ்களை எடுத்த பின்னதாக சரியாக சொருக வேண்டும். மொத்தமாக ஒரே இடத்தில் சொருகக்கூடாது. இல்லையென்றால் பாவடை அணிந்திருப்பது போன்று தெரியக்கூடும். உடல்வாகு, விருப்பத்தைப் பொறுத்து, முந்தாணை ஐந்து, நான்கு என்ற எண்ணிக்கையில் சீராக வைக்கவும். கீழ் முந்தி எடுக்கும் போது இடது பக்கத்தில் இருந்து வைக்க ஆரம்பிக்க வேண்டும். மேலும் உள்பக்கம் கலையாமல் இருக்கும் வகையில், உள்பக்க நுனியில் முடிச்சிட்டுக் கொள்ள வேண்டும். நீங்கள் குண்டாக இருந்தால் முந்தாணையை சிறிது சிறிதாக மடிப்பு எடுத்துக் கொள்ள வேண்டும்.
பெண்கள் புடவைக்கு கட்டாயம் பால்ஸ் வைத்து தைக்க வேண்டும். அப்போது தான் பார்டர் மடங்கும் பிரச்சனை இருக்காது. முதல் முறையாக புடவையைக் கட்டும் போது உங்களுக்குப் பிரச்சனையாக இருக்காது. புடவைகளைக் கணுக்கால் வரை கட்டாமல், கால் விரல்களின் நுனி வரைக் கட்டும் போது உங்களை அழகாகக்காட்டும். இது போன்ற முறைகளில் நீங்கள் புடவையைக் கட்டிப்பாருங்கள். இனிமேல் யாருடைய துணையும் இல்லாமல் சூபபராக கட்ட முடியும். இனி நீங்களும் டிரை பண்ணிப்பாருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation