மருதாணி போடும் காலங்கள் எல்லாம் மலையேறிப் போச்சு. திருமணம் என்றாலே பெண்களுக்கு இரு கைகளிலும் மெஹந்தி டிசைன்கள் தான். வட இந்தியா திருமணங்களில்,திருமணத்திற்கு முந்தைய நாளில் முக்கியமான சடங்கு மெஹந்திப் போடுவது. இது மணப்பெண்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததோடு கலாச்சார முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கிறது. தற்போது இந்த மெஹந்தி போடும் கலாச்சாரத்தை இந்தியாவில் உள்ள பெண்கள் அனைவரும் பின்பற்றத் தொடங்கிவிட்டனர்.இதையடுத்து இணையத்தில் பலவிதமான மெஹந்தி டிசைன்கள் இடம் பெற்றுள்ளது. ஆனாலும் திருமண நாளில் தனித்துவமான மருதாணி டிசைன்களைப் போட வேண்டும் அல்லவா? இதோ மணப்பெண்களுக்காக உள்ள மெஹந்தி டிசைன்கள் என்னென்ன? என்பது குறித்து இங்கே அறிந்து கொள்ளுங்கள்.
மெஹந்தி என்றால் பிடிக்காத பெண்கள் இருக்க மாட்டார்கள். திருமணம், பிறந்த நாள் விழா, பொங்கல் விழா என எந்த பண்டிகையை எடுத்துக் கொண்டாலும் முதல் நாள் அல்லது இரண்டு தினங்களுக்கு முன்னதாக மெஹந்தி போட்டுக்கொள்வதைப் பெண்கள் வழக்கமாக்கிக் கொண்டனர். திருமண நாள் என்றால் சொல்லவே தேவையில்லை. அழகு நிலையங்களுக்கு சென்று புதிய புதிய டிசைன்களில் மருதாணிகளைப் போட்டு கொள்வார்கள். மணப்பெண்களின் முன் கைக்கு வட்ட வடிவ மெஹந்தி வடிவமைப்பை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், வட்ட வடிவ மெஹந்தி டிசைன்களை நீங்கள் தேர்வு செய்துக் கொள்ளலாம். தனித்துவமான டிசைன்களில் மலர்கள் மற்றும் நேர்த்தியான கோடுகள் வரையப்படுவது பெண்களை அழகாக்கக்கூடும்.
மணப்பெண்கள் பேக்ஹேண்ட் மெஹந்தி வடிவமைப்பைத் தேர்வதில் குழப்பம் அடைவார்கள். கவலை வேண்டாம் உங்களது கைகளில் சிறிய சிறிய கோடுகள் மற்றும் மலர்களை வரைந்துக் கொள்ளுங்கள். உங்களது கற்பனைத் திறனுக்கு ஏற்றவாறு நீங்கள் வரையும் போது கைகள் மட்டுமல்ல, பெண்களும் அழகாக தெரிவார்கள். ஒருவேளை மணப்பெண்கள் சிம்பிளாக கோடுகள் மற்றும் சிம்பிளான டிசைன்களைத் தேர்வு செய்ய சொல்வதுண்டு. இதில் பூக்கள், இலைகள் போன்ற டிசைன்களைப் பயன்படுத்தலாம். உங்களுக்குத் தெரிந்து ரங்கோலி டிசைன்களைக் கூட கைகள் முழுவதும் போட்டுக் கொள்ளுங்கள். இது உங்களை அழகாக்கும்.
மணப்பெண்களுக்கு சிம்பிளான டிசைன்கள் மற்றும் தடித்த கோடுகள் கொண்டு மெஹந்தி போட்டுக் கொள்ளவும். சேலைகளில் உள்ள டிசைன்களையும் கைகளில் மெஹந்தியாக போட்டுக் கொள்ளவும். மணப்பெண்களின் கைகள் அளவுக்கு ஏற்றவாறு மெஹந்தி டிசைன்களை தேர்வு செய்துக் கொள்ளவும். மணப்பெண்களுக்கு மெகந்தியில் தனித்துவம் காட்ட வேண்டும் என்று நினைத்தால், உங்களது பகுதியில் உள்ள பராம்பரிய சின்னங்கள் மற்றும் கட்டிடங்களின் தோற்றத்தைப் போன்று டிசைன் போட்டுக் கொள்ளவும். இல்லையென்றால் உங்களது மற்றும் கணவரின் பெயரை இந்த வடிவத்தில் எழுதுவதற்கு முயற்சி செய்யுங்கள்.
இது போன்ற டிசைன்கள் உங்களது கைகளை அழகாக்குவதோடு மற்றவர்களிடமிருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்கு உதவியாக இருக்கும்.
மேலும் படிங்க: இயற்கையான முறையில் முகப் பொலிவு பெற வேண்டுமா? இந்த உங்களுக்கான டிப்ஸ்!
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com