herzindagi
saree draping for women

Slim In saree:பெண்களே..சேலையில் ஒல்லியாக தெரியலேன்னு கவலையா? நீங்கள் செய்ய வேண்டியது இது தான்!

<span style="text-align: justify;">பெண்கள் சேலைகளைக் கட்டுவதில் ஆர்வம் காட்டினாலும், குண்டாக இருக்கும் பெண்கள்&nbsp; சேலைகளைக் கட்டுவதற்குத் தயக்கம் காட்டுவார்கள்.</span>
Editorial
Updated:- 2024-01-23, 19:30 IST

பெண்கள் என்ன தான் மாடர்ன் உடைகளை அணிந்திருந்தாலும் திருவிழாக்கள் முதல் வீட்டு விசேசங்களுக்கு புடவைகள் அணிய வேண்டும் என்ற விரும்பும் அதிகளவில் இருக்கக்கூடும். குறிப்பாக கல்லூரிகள் படிக்கும் பெண்கள் ஒரே கலரில் செட் சேலைகளை எடுப்பார்கள். இதில் சில பெண்கள் சேலைகளைக் கட்டுவதில் ஆர்வம் காட்டினாலும், குண்டாக இருக்கும் பெண்கள் மற்றவர்களைப் போன்று நம்மால் அழகாக இருக்க முடியாது என்ற சேலைகளைக் கட்டுவதற்குத் தயக்கம் காட்டுவார்கள்.

பெண்களுக்கு மற்ற ஆடைகளை விட புடவைகளில் தான் மிகவும் அழகாகத் தெரிவார்கள். இயற்கையான அழகை விட கொஞ்சம் அதிகமாக காட்டும் என்றே கூறலாம். குண்டாக இருக்கும் பெண்களுக்கும் புடவைகள் கட்டுவது அழகாகத் தான் இருக்கும். ஆனால் அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படும் என்பதால் பல நேரங்களில் புடவைகளைத் தவிர்ப்பார்கள். இனி அந்த கவலை வேண்டாம். பின்வரும் வழிமுறைகளில் புடவைகளைக் கட்டிப்பாருங்கள். நிச்சயம் ஒல்லியாகத் தான் தெரிவீர்கள். இதோ உங்களுக்கான சிம்பிள் டிப்ஸ்..

saree draping tips 

புடவைக்கட்டுவதற்கான சிம்பிள் டிப்ஸ்:

  • பெண்கள் கட்டும் புடவையில் ஒல்லியாக தெரிய வேண்டும் என்றால், முதலில் நீங்கள் புடவையின் நிறத்தை முறையாக தேர்வு செய்யவும். குண்டாக இருக்கும் பெண்கள், லைட்டான கலர்களை உடுத்துவதற்குப் பதிலாக டார்க் ஆன கலர்களைத் தேர்வு செய்யவும்.
  • புடவைகளில் பெரிய பிரிண்ட்கள் மற்றும் டிசைன்கள் இருந்தால் அதை அணிய வேண்டாம். ஒருவேளை நீங்கள் உயரம் குறைவாக இருந்தாலும், குண்டாக இருந்தாலும் உங்களின் உடல் தோற்றத்தை மேலும் பெரிதாக காட்டும். எனவே சிறிய பிரிண்ட்கள் இருக்கும் புடவைகளைத் தேர்வு செய்ய மறந்துவிடாதீர்கள்.
  • சேலைகள் கட்டும் முறையில் மட்டுமல்ல, சேலைகளுக்கு மேட்சிங் புடவைகள் அணியும் போதும் கவனமுடன் இருக்க வேண்டும். நீங்கள் கட்டும் புடவையில் ஒல்லியாக தெரிய வேண்டும் என்றால், மிகவும் தளர்வான பிளவுஸ்களை உபயோகிக்ககூடாது. மேலும் கை மிகவும் நீளமாகவோ? சின்னதாகவே இருக்கக்கூடாது.
  • குண்டாக இருப்பவர்கள் ஒற்றை சிலிவ் கொண்டு புடவைகளைக் கட்டுங்கள். இது உங்களை அழகாகவும், ஒல்லியாகவும் காட்டும்.
  • நீங்கள் மெலிதாகத் தோற்றமளிக்கும் மற்றும் சிறிய மற்றும் மெல்லிய தோற்றத்தைத் தரும் புடவையைத் தேடுகிறீர்களானால், சிஃப்பான், ஜார்ஜெட் மற்றும் க்ரீப் போன்ற இலகுரக துணிகளைத் தேர்ந்தெடுப்பது நல்ல தேர்வாக உங்களுக்கு அமையக்கூடும்.

saree ideas

  • புடவைகள் கட்டுவதில் இது போன்ற வழிமுறைகளை  நீங்கள் பின்பற்றினாலும், புடவைகளின் மாடல்களுக்கு ஏற்ப அணிகலன்களை அணிய வேண்டும்.
  • புடவைகளின் கீழ் முந்தி அதாவது கொசுவம் வைக்கும் போது சிறியதாக வைக்கவும். புடவைகளை சொருகும் போது மடிப்பு கலையாமல் சொருகும் போது வயிறு குண்டாக இருக்காது. உங்களையும் ஒல்லியாக காட்டக்கூடும்.

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com