பெண்களாக இருந்தாலும் ஆண்களாக இருந்தாலும் தலைமுடி தான் அவர்களை எப்போதும் கூடுதல் அழகாகக் காட்டும். இன்றைய சுழலில் அதிக கெமிக்கல் நிறைந்த ஷாம்புகள் மற்றும் கன்டிஷனர்கள் பயன்படுத்துவதால் இது தலைமுடிக்கு பல பிரச்சனைகளைத் தருகிறது. பொதுவாக 40 வயதில் தலைமுடி நரை என்பது இயல்பானது. ஆனால் தற்போது 20 வயதிலேயே இளநரை ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் சந்திக்க நேரிடுகிறது. இதைத் தவிர்க்க வேண்டும் என்றால், அதிக கெமிக்கல் நிறைந்த ஹேர் டையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக இயற்கையான முறையில் அவுரி இலைகளைப் பயன்படுத்தலாம். எப்படி என்பது குறித்த முழு விபரம் இங்கே.
நரைமுடிக்கு அவுரி பொடியைப் பயன்படுத்தும் முறை:
- இளம் வயதில் ஏற்படக்கூடிய நரைமுடியை இயற்கையான முறையில் கருமையாக்க முடியும். இதற்கு அவுரி இலைகள் பெரிதும் உபயோகமாக இருக்கும்.
- ஆம் அதிக இளநரை பிரச்சனை உள்ளவர்கள் அவுரி பொடியை தலைமுடி பாதுகாப்பிற்குப் பயன்படுத்தலாம். குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக ஒரு சிறிய பவுலில் 1 ஸ்பூன் அளவிற்கு அவுரி இலை பொடியை எடுத்துக் கொள்ளவும்.
- பின்னர் வெதுவெதுப்பான நீரைக் கொண்டு அவுரி பொடியை நன்கு கலந்துக் கொள்ளவும். அதிக நேரம் தண்ணீரை விட்டு கலந்துக் கொள்ளக்கூடாது.
- இதையடுத்து ஒரு எலுமிச்சம்பழத்தை 4 பகுதிகளாக நறுக்கிக் கொள்ளவும். இதில்
- ஒரு பகுதியை மட்டும் அவுரி பொடியுடன் கலந்துக் கொள்ளவும். ஒரு 30 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்.
மேலும் படிக்க:இந்த அரிசி மாவு ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க, 10 நாளில் முகம் இயற்கையாக பொலிவு பெறும்
- தலையில் அப்ளை செய்து.ஒரு மணி நேரத்திற்குப் பின்னதாக குளிக்க வேண்டும்.
- இந்த முறைகளை வாரத்திற்கு ஒருமுறை மேற்கொள்ளும் போது தலைமுடி கருமையாக மாறக்கூடும்.
மருதாணி மற்றும் அவுரி:
தலைமுடியை கருமையாக மாற்றுவதற்கு அவுரி மற்றும் மருதாணி பொடிகளைப் பயன்படுத்தலாம். ஒரு சிறிய பாத்திரத்தில் அவுரி மற்றும் மருதாணியை சம அளவில் எடுத்துக் கொள்ளவும். இதற்கு ஏற்ப தண்ணீர் ஊற்றி கலந்துக் கொண்டு தலைமுடியில் அப்ளை செய்யவும். அரை மணி நேரத்திற்கு பின்னதாக தலைமுடியை அலச வேண்டும். இந்த நடைமுறைகளைத் தொடர்ச்சியாக பின்பற்றி வந்தாலே போதும். எவ்வித பக்கவிளைவுகள் இல்லாமல் இளநரையை கருமையாக்க முடியும்.
அவுரியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:
அவுரி இலைகளில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அதிகளவில் உள்ளது. இவை தலைமுடிக்கு நிரந்தர தீர்வாக உள்ளது. இளம் வயதிலேயே தலைமுடி நரைத்து விட்டதே என்ற அச்சம் வேண்டாம். அவுரி இலைப் பொடியை இதுபோன்ற முறைகளில் பயன்படுத்த முயற்சி செய்ய மறந்துவிடாதீர்கள்..
அவுரியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:
அவுரி இலைகளில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அதிகளவில் உள்ளது. இவை தலைமுடிக்கு நிரந்தர தீர்வாக உள்ளது. இளம் வயதிலேயே தலைமுடி நரைத்து விட்டதே என்ற அச்சம் வேண்டாம். அவுரி இலைப் பொடியை இதுபோன்ற முறைகளில் பயன்படுத்த முயற்சி செய்ய மறந்துவிடாதீர்கள்..
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation