herzindagi
image

சாப்பிட்ட பிறகு ஏற்படும் நெஞ்செரிச்சலை தடுக்க இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது

சாப்பிட்ட பிறகு உங்களுக்கு நெஞ்செரிச்சல் பிரச்சனை இருந்தால் அதை நினைத்து கவலைப்படுகிறீர்களா? இதை தவிர்ப்பதற்கு உணவில் இந்த மாற்றத்தைச் செய்யுங்கள். நெஞ்செரிச்சல் பிரச்சனையிலிருந்து கண்டிப்பாக விடுப்பட முடியும்.
Editorial
Updated:- 2025-09-09, 12:53 IST

நாம் சாப்பிடும் உணவு மிகவும் எண்ணெய் பசையுடனும், காரமாகவும் இருப்பதால் பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறோம். அதே சமயம், நாம் வாழ்ந்துக்கொண்டு இருக்கும் வாழ்க்கை முறை மிகவும் மோசமானதாக இருக்கிறது, இதனால் பல பிரச்சனைகள் எழத் தொடங்கியுள்ளன. இவற்றில் மிகவும் பொதுவானவை அமில ரிஃப்ளக்ஸ் போன்ற செரிமான பிரச்சனைகள். நெஞ்செரிச்சல் மற்றும் வீக்கம் இப்போது ஒரு பொதுவான விஷயமாகிவிட்டது. மக்களுக்கு பல வகையான அசௌகரியங்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. இவற்றை தடுக்க வழிகளை பார்க்கலாம்.

நெஞ்செரிச்சல் காரணமாக நாம் சிரமப்படுகிறோம், அதே வேலையில் இதற்காக தினமும் மருந்துகளை உட்கொள்வதன் மூலம் இந்த நாளை எளிதாக கடக்கிறோம். ஆனால் இவற்றை தடுப்பதற்கு செய்ய வேண்டியவை உணவுப் பழக்கத்தில் மாற்றம் செய்யனும். நாம் உண்ணும் உணவு வகைக்கு ஏற்ப நமது வயிறு அமிலத்தை உற்பத்தி செய்கிறது, மேலும் சரியான வகையான உணவுகளை சாப்பிடுவது அமில ரிஃப்ளக்ஸ் பிரச்சனையைக் குறைக்கிறது. இந்தப் பிரச்சனையிலிருந்து விடுபடுவதற்கான சில வழிகளை பார்க்கலாம்.

 

மேலும் படிக்க: இந்த அறிகுறிகளை வைத்து உடலில் நீரிழப்பு பற்றாக்குறை இருப்பதை தெரிந்துகொள்ளலாம்

 

நெஞ்செரிச்சலை தடுக்க காஃபினைத் தவிர்க்கவும்

 

உங்களுக்கு அதிக நெஞ்செரிச்சல் இருந்து, இதனால் தினமும் செரிமானப் பிரச்சினைகளை சந்திக்க நேரிட்டால், எந்த வடிவத்திலும் காஃபின் உள்ள உணவுகளைத் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதில் காபி மட்டுமல்ல, பல உணவுகள் மற்றும் பானங்களும் அடங்கும்.

coffee

 

பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும்

 

பதப்படுத்தப்பட்ட உணவுகள் நமது வாழ்க்கை முறையின் மிக மோசமான பகுதியாகும். சிப்ஸ், சாக்லேட்டுகள், சுத்திகரிக்கப்பட்ட மாவு மற்றும் பிற பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உள்ள நிறைவுற்ற கொழுப்பு, சோடியம் மற்றும் உப்பு அமில வீச்சை அதிகரிக்கிறது. அதனால்தான் இதுபோன்ற பொருட்களிலிருந்து ஒருவர் விலகி இருக்க வேண்டும்.

 

உடல் எடையை குறைப்பது நல்லது

 

எடை இழப்பது பற்றி சிந்திக்க வேண்டும், ஏனெனில் நீங்கள் அதிக எடையுடன் இருந்தால் செரிமான பிரச்சினைகள் இருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஏதாவது ஒரு வகையான உடற்பயிற்சி செய்வது முக்கியம்.

weight lose (1)

அதிக உணவு சாப்பிட வேண்டாம்

 

அமில வீச்சு இருந்தால், ஒரே நேரத்தில் அதிக உணவை சாப்பிடக்கூடாது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் உடலால் அதை சரியாக ஜீரணிக்க முடியாது, பின்னர் அமில வீச்சு ஏற்படுகிறது. அதனால் விரைவாக சாப்பிடுவதும் ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிடுவதும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

 

சாப்பிட்ட உடனே படுக்க வேண்டாம்

 

நீங்கள் உணவு சாப்பிட்டால், உடனடியாக படுத்து தூங்குவதை மறந்துவிடாதீர்கள். இரவு உணவை எப்போதும் தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு எடுத்துக்கொள்ள வேண்டும், இந்த விஷயத்தில் வயிறு உணவை ஜீரணிக்க எளிதாக இருக்கும்.

sleepdfry

 

ஆப்பிள் சீடர் வினிகர் உதவும்

 

உணவுடன் 1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை எடுத்துக் கொள்ள முயற்சிக்கவும். இது நெஞ்செரிச்சலை சிறிது குறைக்கும். இதனால் உங்களுக்கு அமில ரிஃப்ளக்ஸ் வராது. குறைந்தது 2 முக்கிய உணவுகளுடன் இதை சாப்பிடுங்கள்.

 

மேலும் படிக்க: 14 நாட்களுக்கு தொடர்ந்து வேப்பிலை சாப்பிட்டு வந்தால் உடலில் நடக்கும் இந்த அதிசய மாற்றத்தை தெரிந்துக்கொள்ளுங்கள்

 

இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால், நிச்சயமாக அதைப் பகிரவும். இதுபோன்ற பிற கதைகளைப் படிக்க ஹர்ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com