தெருக்களில் காணப்படும் அம்மான் பச்சரிசி செடி இருக்கும் அற்புதமான மருத்துவ பலன்கள்
Abinaya Narayanan
29-07-2025, 15:19 IST
www.herzindagi.com
செரிமான பிரச்சனையை தீர்க்கும்
அம்மான் பச்சரிசி செடி மலச்சிக்கலை போக்கி எளிதாக மலமிளக்கியை வெளியிடும் இயற்கை மருந்தாக செயல்படுகிறது. குடலில் ஏற்படும் புண்களை ஆற்றும் குணமும் இந்த செடிக்கு உண்டு.
Image Credit : freepik
தோல் சார்ந்த பிரச்சனையை போக்கும்
அம்மான் பச்சரிசி இலைகள் குளிர்ச்சியான தன்மை கொண்டதால் சருமத்தில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல், வறண்ட சரும பிரச்சனைக்கு தீர்வாக இருக்கிறது. இதில் இருக்கும் ஆக்ஸிஜனேற்ற தன்மை முதுமைத் தோற்றத்தை தாமதப்படுத்த உதவுகிறது.
Image Credit : freepik
மூட்டு வலியை போக்கும்
அம்மான் பச்சரிசியில் இருக்கும் வலி நிவாரண பண்புகள் மூட்டு வலி, முதுகு வலி போன்றவற்றை போக்க பயன்படுத்தப்படுகிறது.
Image Credit : freepik
தாய்பால் சுரக்கும்
அம்மான் பச்சரிசியின் பூக்களை தேவையான அளவு எடுத்து சுத்தம் செய்து, பசும்பால் விட்டு அரைத்து, பின் அதனை பசும்பாலிலேயே கலந்து காலையில் பருகி வந்தால் குழந்தைக்குத் தேவையான பால் சுரக்கும்.
Image Credit : freepik
வெள்ளைபடுதல் பிரச்சனையை போக்கும்
சில பெண்களுக்கு வெள்ளைபடுதல் ஒரு பிரச்சனையாக இருக்கும், அதற்கு அம்மான் பச்சரிசி இலையை அரைத்து மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் ஐந்து நாட்கள் குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் பிரச்சனை குறையும்.
Image Credit : freepik
அம்மான் பச்சரிசி கஷாயம்
அம்மான் பச்சரிசி இலைகளை நீரில் 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து, நிறம் மாறியதும் வெதுவெதுப்பாக குடிக்கலாம். இது செரிமானம், இருமல், ஆஸ்த்மா போன்ற பிரச்சனைகளை போக்கும்.