தெரிந்தோ தெரியாமலோ வெள்ளி மோதிரம் போட்டு இருக்கீங்களா..? அப்ப இத பாருங்க
Alagar Raj AP
05-09-2024, 12:36 IST
www.herzindagi.com
மற்ற உலோகங்களால் செய்யப்பட்ட ஆபரணங்களை விட வெள்ளி ஆபரணங்கள் விலை குறைவானது என்றாலும் அதில் சில நம்பமுடியாத நன்மைகள் உள்ளது. அப்படி வெள்ளி மோதிரங்கள் அணிவதால் ஆரோக்கியத்தில் எந்த மாதிரியான தாக்கம் ஏற்படுகிறது என்று பார்ப்போம்.
நோயெதிர்ப்பு சக்தி
வெள்ளியில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதனால் தொற்றுகள் நம்மை நெருங்காது என்று கூறப்படுகிறது.
இரத்த ஓட்டம் மேம்படும்
வெள்ளி உடலில் மின்காந்த கதிர்வீச்சை பிரதிபலிக்கும் ஒரு கடத்தும் புலத்தை உருவாக்குகின்றன. இதனால் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது.
மனநிலை மேம்படும்
வெள்ளியில் உள்ள குளிர்ச்சியான பண்புகள் மனதை அமைதிப்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதனால் மன அழுத்தம் குறைந்து மனம் நிம்மதி அடைய முடியும்.
வலி நிவாரணம்
வெள்ளியில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் மூட்டு வலி போன்ற பிற உடல் அசௌகரியத்தை குறைக்கும் என்று கூறப்படுகிறது.
நேர்மறை ஆற்றல்
வெள்ளியில் இருந்து வெளிப்படும் நேர்மறை ஆற்றல் உடல் ஆற்றலை அதிகரித்து மன தெளிவை தரும் என்று கூறப்படுகிறது.
பித்தத்தின் அறிகுறி
நீங்கள் அணியும் வெள்ளி மோதிரம் நாளடைவில் கருப்பாக மாறினால் உடலில் பித்தம் அதிகமாக இருக்கும் அல்லது உஷ்ணம் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கருப்பாகாமல் அப்படியே இருந்தால் உங்கள் உடல் நன்றாக இருக்கிறது என்று அர்த்தம்.