48 நாட்களில் கருத்தரிக்க கழற்சிகாய் மருந்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்
Sanmathi Arun
10-04-2023, 05:12 IST
www.herzindagi.com
கழற்சிகாய்
பெண்களுக்கு ஏற்படும் கருப்பை பிரச்சனைகளை சரி செய்து விரைவில் கருத்தரிக்க உதவும் கழற்சிகாயை பயன்படுத்தும் முறையை பற்றி இங்கு காணலாம்.
Image Credit : freepik
கழற்சிகாய் எவ்வாறு சாப்பிட வேண்டும்?
கழற்சிகாயை இடித்து உள்ளே உள்ள பருப்புகளை தனியாக எடுத்து நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு ஸ்பூன் கழற்சிகாய் பொடியுடன் கால் ஸ்பூன் மிளகு தூள், சிறிது தேன் கலந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த உருண்டையை தினசரி காலை, மாலை தவறாமல் சாப்பிட வேண்டும்.
Image Credit : freepik
சாப்பிடும் முறை - 2
ஒரு ஸ்பூன் கழற்சிகாய் பொடியுடன் கால் ஸ்பூன் மிளகு தூளை ஒரு டம்பளர் மோரில் சேர்த்தும் குடிக்கலாம்.
Image Credit : freepik
எத்தனை நாட்கள் சாப்பிட வேண்டும்?
கழற்சிகாயை தொடர்ந்து 48 நாட்கள் அல்லது 60 நாட்கள் தவறாமல் எடுத்து கொள்வதால் பல கருப்பை சிக்கல்கள் நீங்கி கருவுற உதவும். மாதவிடாய் சுழற்ச்சி சீராக இருந்தும் கருத்தரிப்பது தாமதம் ஆனால் 48 நாட்கள் எடுத்து கொள்ள வேண்டும். Pcos, Pcod, ஃபைப்ராய்டு நீர்க்கட்டிகள் போன்ற பிரச்சனை இருப்பவர்கள் 60 - 90 நாட்கள் தொடர்ந்து உட்க்கொண்டு பின்பு கருத்தரிக்க முயற்சிக்க வேண்டும்.
Image Credit : freepik
யாரெல்லாம் சாப்பிட வேண்டும்?
PCOS/PCOD இருப்பவர்கள்
ஹார்மோன் பிரச்சனை இருப்பவர்கள்
தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள்
மாதவிடாய் சீராக்க நினைப்பவர்கள்
கருத்தரிக்க முயர்சி செய்பவர்கள் மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்று இல்லை. மேற் கூறிய பிரச்சனை இருப்பவர்களும் சாப்பிடலாம்.
Image Credit : freepik
யாரெல்லாம் சாப்பிட கூடாது?
அதிகப்படியான உதிரபோக்கு இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும்.
PCOS/PCODக்கு மாத்திரை சாப்பிடுபவர்கள் மருத்துவ ஆலோசனையுடன் சாப்பிட வேண்டும்
அல்சர் பிரச்சனை இருப்பவர்கள் தவிர்பது நல்லது அல்லது சித்த மருத்துவர் ஆலோசனையுடன் சாப்பிட வேண்டும்.
Image Credit : freepik
கூடுதல் குறிப்புகள்
கழற்சிகாய் உட்கொள்ளும் போது 48 நாட்கள் தவறாமல் மாதுளை சாப்பிட வேண்டும்.
உலர் பழங்கள், நட்ஸ், விதை சுழற்ச்சி முறை போன்றவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
கழற்சிகாயுடன் இவற்றையும் பின்பற்றினால் கருத்தரிக்கும் வாய்ப்பு மிக அதிகம்.
Image Credit : freepik
முக்கிய குறிப்பு
சித்த மருத்துவர் ஆலோசனை பெற்று சாப்பிடுவதே சிறந்தது. அதிக உதிர போக்கு மற்றும் இடைப்பட்ட நாட்களில் உதிரபோக்கு எற்படுவர்கள் தவிர்க்க வேண்டும்
Image Credit : freepik
படித்ததற்கு நன்றி
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.