
வீட்டில் நல்ல காரியம் பேசும் போது பல்லி சத்தமிட்டால் எல்லாம் சரியாக நடக்கிறது என பெரியவர்கள் கூறுவதண்டு. அதுவே பல்லி தலையில் விழுந்தால் கவனமாக இருக்க அறிவுறுத்துவார்கள். உடலின் எந்த பாகத்தில் பல்லி விழுந்தாலும் அதற்கு தனி அர்த்தமுண்டு. ஆண்களுக்கும் பெண்களுக்குமே அது வேறுபடும். வரலட்சமி சரத்குமார் நடித்த கொன்றால் பாவம் திரைப்படத்தின் கதை ஒரு பல்லி ஆண், பெண் மீது விழுவதன் வேறுபாட்டை மையப்படுத்தி இருக்கும். உடலின் எந்த பகுதியில் பல்லி விழுந்தால் என்ன நடக்கும் ? எப்போது கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஒரு பெண்ணின் தலை மீது பல்லி விழுவது உயிரிழப்பு அச்சத்தை குறிக்கிறது. இடது கண் மீது விழுந்தால் நீங்கள் ஆசைப்படும் ஆண் உங்களை காதலிப்பதாக அர்த்தம். வலது கண்ணில் விழுந்தால் நீங்கள் மன அழுத்தத்தை எதிர்கொள்ளப் போவதாக புரிந்து கொள்ளுங்கள். வலது கன்னத்தில் பல்லி விழுந்தால் உங்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும். வலது காது மீது விழுந்தால் பொருளாதார ரீதியாக லாபம் காண்பீர்கள். மேல் உதட்டில் விழுந்தால் சில சிக்கல்களை எதிர்கொள்ள போகிறீர்கள் என அர்த்தம்.
கீழ் உதட்டில் விழுந்தால் புதிய பொருட்களை வாங்குவீர்கள். இரண்டு உதட்டிலும் சேர்ந்தபடி விழுந்தால் ஒரு பிரச்னை உடனடியாக வரப்போகிறது என புரிந்து கொண்டு அதை எதிர்கொள்ள தயாராகுங்கள். முதுகுப்பகுதியில் விழுந்தால் உயிரிழப்பு செய்தி கேட்க வாய்ப்புண்டு. நகத்தின் மீது விழுந்தால் கண்டிப்பாக சச்சரவு வரப் போகிறது. கைகள் மீது விழுந்தால் பொருளாதார பலன்களை பெறலாம். இடது கையின் மீது பல்லி விழுந்தால் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. விரல்களில் விழுந்தால் புதிதாக நகை வாங்க வாய்ப்புண்டு.
மேலும் படிங்க தலையணைக்கு கீழ் இந்த 7 பொருட்களை வைத்து தூங்கினால் வீட்டில் வளம் பெருகும், அதிர்ஷ்டம் அடிக்கும்
வலது கையில் பல்லி விழுந்தால் காதல் உறவில் இன்பத்தில் மிதப்பீர்கள். தோள்பட்டையில் மீது விழுந்தால் நகைகள் கிடைக்கும். தொடைப்பகுதியில் விழுந்தால் மகிழ்ச்சியான விஷயம் நடக்க போவதாக அர்த்தம். கால் மூட்டி பகுதியில் பல்லி விழுந்தால் உங்கள் மீது யாராவது பிரியம் காட்டுவார்கள். கணுக்காலில் விழுந்தால் வீண் வம்பு வீடு தேடி வரும். கெண்டைக்காலில் விழுந்தால் விருந்தாளிகள் படையெடுப்பார்கள். அதற்கு தயாராகுங்கள். வலது கால் மீது பல்லி விழுந்தால் தோல்வியை தழுவ வாய்ப்புண்டு. கால்விரல்களில் விழுந்தால் ஆண் மகனுக்கு தாயாக போகிறீர்கள் என பல்லி பஞ்சாங்கம் கூறுகின்றது.
ஆண்களுக்கு இந்த பல்லி பஞ்சாங்கம் முற்றிலும் மாறுபடுகிறது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com