சிறுவயதில் நாம் எதையாவது கண்டு தூக்கம் வராமல் பயந்தால் உடனடியாக பெற்றோர் தலையணைக்கு அடியில் எதாவது ஒரு பொருள் அல்லது அருகில் துடைப்பம் வைத்து படுக்க அறிவுறுத்துவார்கள். சில நிமிடங்களில் பயம் குறைந்து நாமும் நன்றாக தூங்கிவிடுவோம். கெட்ட விஷயங்களை நம்மிடம் இருந்து தள்ளிவைக்க எப்படி மிளகாய், துடைப்பம் ஆகியவை பயன்படுத்தப்பட்டதோ அதே போல வாழ்வில் மகிழ்ச்சி நிலவவும் வீட்டில் வளம் பெருகவும் சில பொருட்களை வாஸ்துவின் பிடி தலையணைக்கு கீழ் சில பொருட்களை வைத்து தூங்குவது நல்லதாகும். எந்த பொருட்களை தலையணைக்கு கீழ் வைத்தால் நமக்கு அதிர்ஷ்டம் உண்டாகும் ? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
மயில் இரகு
தலையணைக்கு அடியில் மயில் இறகை வைத்து படுப்பது அதிர்ஷ்டம், நேர்மறை ஆற்றல் மற்றும் வளத்தை கொண்டு வரும். மேலும் இது ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி மன அமைதியையும், நல்வாழ்வையும் கொடுக்கும்.
நாணயம்
தலையணைக்கு அடியில் நாணயங்களை வைத்து தூங்குவது வீட்டின் நிதிநிலை மற்றும் தனிப்பட்ட உடல்நலத்திற்கு நல்லதாகும். உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரக்கூடியது.
மேலும் படிங்கஅபரிமிதமான பண வரவுக்கு வாஸ்துபடி காமதேனுவை வீட்டில் வைக்க சரியான திசை...
ஏலக்காய் அல்லது பச்சை மிளகாய்
ஏலக்காய் மற்றும் பச்சை மிளகாயை தலையணைக்கு அடியில் வைத்து தூங்குவது தூக்கத்தின் கடவுளை அருகில் அழைத்து வந்து உங்களை நிதானமாக உணர வைக்கும். இதன் மூலம் நீங்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம்.
பகவத் கீதை
பகவத் கீதை உங்கள் வாழ்வில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க கூடியது. உங்கள் தலையணைக்கு அருகிலோ அல்லது அடியிலோ வைக்கவும். கைகளில் வைத்தே படிக்கவும். கட்டில் மீது பகவத் கீதையை வைத்து படிக்க கூடாது மற்றும் கால்களுக்கு இடையில் வைக்க கூடாது. புத்தகத்தின் அருகே வைத்து படிப்பதையும் தவிர்க்கவும்.
வாசனை பூக்கள்
தலையணைக்கு அடியில் வாசனை பூக்களை வைப்பது மனநலனுக்கு இனிமையான சூழலை அளிக்கும்.
கத்தி
உங்களுக்கு கெட்ட கனவுகள் வந்தால் தலையணைக்கு அடியில் கத்தியை போட்டு தூங்கினால் நீங்கள் நிம்மதியாக உணரலாம். கூர்மையான பகுதி மேல் பக்கமாக நோக்கி இருப்பதை உறுதி செய்யுங்கள்; கத்தியை ஒரு துணியில் சுற்றி தலைக்கு அடியில் வைக்கவும்.
வெந்தய விதைகள்
வாழ்க்கையில் வாஸ்து தோஷத்தை சரி செய்ய வெந்தய விதைகள் உதவும். உங்கள் ஆரோக்கியத்தையும், மனநலனையும் பாதிக்ககூடிய மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவும்.
இது போல துளசி இலை, கிராம்பு, சிறிய கண்ணாடி, மஞ்சள் தூள், இரும்புச் சாவி, சூடம் ஆகியற்றையும் தலையணைக்கு அடியில் வைத்து படுத்தால் பல நன்மைகள் உண்டாகும்.
வாஸ்து தொடர்பான கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation