
கடினமாக உழைத்து பெற்ற ஊதியத்தில் இருந்து சேமிக்கும் பணத்தை வைக்கும் இடமாக பீரோ இருக்கிறது. சமையல் அறை என்பது சமையல் செய்வதற்கும், அது தொடர்பான பொருட்களை வைப்பதற்கான அறை, படுக்கையறை என்பது நாம் தூங்குவதற்கான அறை... அது போல பணத்தை வைப்பதற்கான தனி இடம் தான் பீரோ. பணத்தை வைப்பதற்கு நாம் தனி இடம் கொடுப்பது லட்சுமிக்கு தனி இடம் கொடுக்கிறோம் என அர்த்தமாகும். எனவே வீட்டில் செல்வம் பெருகுவதற்கு வாஸ்துபடி எந்த திசையில் பீரோவை வைக்க வேண்டும் என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.
பொதுவாகப் பணத்தை வைக்க தனி இடம் கொடுப்பது அதற்கான மரியாதையை கொடுப்பதாக அர்த்தம். இதனால் வீட்டில் பண ஈர்ப்பு உண்டாகும். உதாரணமாக நாம் உறவினர் வீட்டிற்கு செல்கிறோம். அங்கு அவர்கள் நம்மை ஹாலில் படுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னால் நமக்கு அதில் பெரிய மகிழ்ச்சி இருக்காது. அதுவே நமக்கென தனி அறை கொடுத்தால் முகத்தில் சந்தோஷம் ஏற்படும்.

வீடு தேடி லட்சுமி வருகிறாள் என்றால் நீங்கள் சரியான இடத்தைக் கொடுக்கும் போது உங்களை அதிகளவில் தேடி வருவாள். குறிப்பாக வீட்டில் பீரோவை சரியான திசையில் வைக்கும் போது உங்களுக்கு நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். சரியான திசையில் வைக்காவிட்டால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும். இதனால் பண விரயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
தென் மேற்கு மூலையில் பீரோ வைப்பது வாஸ்துவில் நல்ல திசையாக பார்க்கப்படுகிறது. தென் மேற்கு என்பதை கன்னி மூலை அல்லது நிருதி மூலை என்று சொல்லுவார்கள். தென் மேற்கு மூலையில் தெற்கு திசையில் வடக்கு பார்த்து பீரோ வைப்பது குபேர திசையைக் குறிக்கிறது. மேற்கு பார்த்தபடி கிழக்கு திசையில் பீரோ வைப்பதும் நல்ல பலனைத் தரும்.
இப்போது வசிக்கும் வீட்டில் சரியான திசையில் பீரோ இல்லையென்றால் பீரோவை நல்ல நேரம் பார்த்து இடம் மாற்றவும்
கடன் பத்திரம், வழக்கு தொடர்பான விஷயங்கள், ஆரோக்கியம் தொடர்பான மருத்துவ அறிக்கைகள், பிரச்சினை சார்ந்த விஷயங்களை பணம் வைக்கும் பீரோவில் வைக்க வேண்டாம். அப்படி வைத்தால் அது கூடுதல் பிரச்சினைகளை வீட்டிற்கு ஈர்க்கும்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com