வீடு மட்டுமல்லை வீட்டை சுற்றியும் வாஸ்துபடி பொருட்களை வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது. வாஸ்து படி சில விதிகளை பின்பற்றினால் வாழ்க்கை செழிப்பாக இருக்கும் என நம்பப்படுகிறது. வீட்டிற்குள் வர முயற்சிக்கும் எதிர்மறை சக்திகளை தவிர்க்க நாம் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வீட்டில் ஏதேனும் வாஸ்து தோஷம் இருந்தால் நீங்கள் கடினமாக உழைத்தாலும் முழு பலன் கிடைக்காது. நாம் செழிப்புடன் இருப்பதற்கு வீட்டின் வாஸ்து மிக முக்கியம். குறிப்பாக வீட்டின் பிரதான நுழைவாயிலில் பொருட்களை சரியாக வைக்கவில்லை எனில் தேவையில்லாத பிரச்சனைகளை வாழ்க்கையில் சந்திக்க நேரிடும். வீட்டின் கதவை திறந்தவுடன் எதிர்மறையான விஷயங்களை கண்டால் அது உங்கள் வாழ்க்கையில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும்.
வீட்டின் முன் குப்பை குவியல்
வீட்டின் கதவை திறந்தவுடன் குப்பை குவியலைக் கண்டால் அது எதிர்மறையான அறிகுறியாகும். காலை வெளியே செல்லும் போதும் குப்பைக் குவியலை கண்டு எரிச்சல் அடைவதோடு மட்டுமின்றி எதிர்மறையான எண்ணங்கள் உருவாகும். இதனால் உங்கள் வேலையும் கெட்டுப் போகும்.
வீட்டின் முன்பாக முள் செடி
வீட்டின் முன்புறத்தில் முள் செடிகள் இருக்க கூடாது. பிரதான கதவுக்கு நேராக இருந்தால் அவை வீட்டில் உள்ளவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். வீட்டில் தேவையில்லாத பதற்றம் ஏற்பட்டு பிரச்சனைகளால் சூழப்படுவர். எனவே வீட்டின் முன் முள் செடிகள் இருந்தால் உடனடியாக அவற்றை அகற்றி விடுங்கள்.
வீட்டின் முன்பாக குறுக்கு வழி
வீட்டின் கதவை திறந்தவுடன் ஒரு குறுக்கு வழியைக் கண்டால் உங்கள் வாழ்க்கையில் சில சிக்கல்கள் ஏற்படும். குறுக்கு வழி உங்கள் மன அழுத்தத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டின் முன் குறுக்கு வழி உங்களால் எந்த வேலையிலும் முழு கவனம் செலுத்த முடியாது. எனவே அந்த பாதையை அடைக்க முயற்சி செய்யுங்கள். இதையடுத்து உங்கள் மனது சரியான திசையில் நகரும்.
வீட்டின் முன்பாக பெரிய மரம்
வீட்டின் முன் பெரிய மரம் இருந்தால் அது குடும்ப தலைவருக்கு நல்லதாக கருதப்படுவதில்லை. வீட்டின் பிரதான நுழைவாயிலுக்கு எதிரே எந்த மரத்தையும் நடாதீர்கள். நீங்கள் புதிய வீடு வாங்கும் போது இதை நினைவில் கொள்வது அவசியம். இது வீட்டில் உள்ளவர்களின் முன்னேற்றத்திற்கு தடையாக அமையும்.
வீட்டின் முன்பாக பெரிய தூண்
வீட்டின் முன் உள்ள பெரிய தூண் வீட்டிற்குள் வரும் சூரிய ஒளியைத் தடுப்பதாக இருந்தால் அது நல்லதாக கருதப்படாது. இது ஒரு வகையான வாஸ்து தோஷம் ஆகும். வீட்டில் உள்ள பெண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. காரணமின்றி வீட்டில் உள்ள பெண்களின் ஆரோக்கியம் மோசம் அடையலாம். இத்தகைய பெரிய தூண் இருக்கும் வீட்டிற்கு குடியேறுவதை தவிர்க்கவும்.
வீட்டின் முன்பாக வடிகால் அல்லது ஓடை
வீட்டின் பிரதான கதவைத் திறந்தவுடன் பெரிய வடிகால் அல்லது வாய்க்கால் தெரிந்தால் அது உங்கள் வீட்டில் வாஸ்து தோஷத்தை ஏற்படுத்தும். உங்கள் பணம் பயனற்ற இடங்களில் செலவிடப்படுகிறது. பாயும் வடிகால் நிதி இழப்பைக் குறிக்கிறது.
வீட்டின் முன்பாக லிப்ட்
உங்கள் வீடு அடுக்குமாடி குடியிருப்பாக இருந்தால் பிரதானக் கதவைத் திறந்தவுடன் லிப்ட் தெரிந்தால் அது வாஸ்து குறைபாடுடன் தொடர்புடையதாகும். இதனால் வீட்டில் உள்ள நபர்களுக்கு மனநோய் ஏற்படலாம். புதிய வீடு வாங்குவதாக இருந்தால் இப்படிப்பட்ட இடத்தில் வீடு வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation