
பசுவை நாம் லட்சுமி கடாட்சம் பொருந்திய அமைப்பாகவும், பொன், பொருள் சேர்க்கை தரக்கூடிய அதிர்ஷ்டமாக பார்க்கிறோமோ அதே போல தேவலோகத்தில் அனைத்து பசுக்களின் தாயாக காமதேனு பார்க்கப்படுகிறது. காமதேனு என்பது சகல ஐஸ்வர்யம், லட்சுமி கடாட்சம், பொன், பொருள் யோகம் மற்றும் அபரிமிதமான பண வரவை தரக்கூடிய காமதேனு விளங்குகிறது. நாம் இதை கல்வி நிறுவனங்கள், ஜவுளி மற்றும் பண வரவு அதிகம் உள்ள கடைகளில் பார்த்திருப்போம். இதற்கு காமதேனு தரக்கூடிய பலன்களே முக்கிய காரணமாகும். அந்தளவிற்கு அதிர்ஷ்டம் அடிக்கும். எனவே காமதேனு படத்தை வீட்டின் எந்த இடத்தில் எந்த திசை பார்த்து வைக்க வேண்டும் என இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

காமதேனு கன்றுடன் இருப்பது போன்ற அமைப்பை வாங்க முயற்சிக்கவும். அதிலும் குறிப்பாக கன்று காமதேனுவின் மடியில் பால் குடிப்பது போல் இருந்தால் கூடுதல் சிறப்பு. இப்படியான காமதேனு படம் இருந்தால் வீட்டிற்கு அள்ள அள்ள குறையாத செல்வமும் வளமும் கிடைக்கும். வீட்டில் உள்ள குழந்தைகள் நல்ல நிலையில் இருப்பார்கள். ராஜயோக வாழ்க்கை வாழ்வீர்கள். லட்சுமி கடாட்சம் பொருந்திய படமாக தேடி வாங்குங்கள்.
காமதேனு படத்தை வீடு மற்றும் அலுவலகத்தில் மாட்டிக் கொள்ளலாம். வீட்டில் மகிழ்ச்சியையும் அலுவலகத்தில் தொழில் முன்னேற்றத்தையும் தரும். நாம் வைக்கும் இடத்தை பொருத்து காமதேனு செயல்படும். வீட்டில் வைத்தால் கணவன் - மனைவி உறவு, ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் சண்டை இருக்காது. பிரச்னை இருக்கும் குடும்பத்தின் வீட்டில் இந்த படத்தை மாட்டினால் பிரச்னை குறையும். சுபகாரியங்கள் தடையின்றி நல்லபடி நடக்கும்.
காமதேனுவின் தலை வீட்டிற்குள் நோக்கியவாறு வைப்பது நல்லது. வீட்டில் வடக்கு திசையில் காமதேனு படத்தை மாட்டுங்கள். வட மத்திய பகுதியில் அமைக்கவும். வட கிழக்கு திசையிலும் மாட்டிக் கொள்ளலாம். இப்படி வைத்தால் நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிபெறும்.
குருவின் ஆதிக்கம் பெற்றது வடக்கு பகுதி. அங்கு நாம் காமதேனு படம் வைக்கும் போது அபரிமிதமான பொருளாதார வளர்ச்சி ஏற்படும். சமூகத்தில் நன்மதிப்பு கிடைக்கும்.
இதுபோன்ற ஆன்மிக கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com