Pimple home remedy: முகப்பருக்கள் வருவது பலருக்கு ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கிறது. அதை குறைக்க பலவிதமான கிரீம்களையும், மருந்துகளையும் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நம் வீட்டிலேயே எளிதாக கிடைக்கும் சில பொருட்களை கொண்டு முகப்பருக்களை போக்க முடியும். இவை சருமத்துக்கு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாமல், முகப்பருக்களுக்கு காரணமான பாக்டீரியாக்களை அழிக்கின்றன. அந்த வகையில் குறிப்பிட்ட சில பொருட்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மேலும் படிக்க: Health tips for women: நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்க்கும் பெண்களா நீங்கள்? அப்போ இந்த ஹெல்த் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க
தேன் ஒரு சிறந்த இயற்கையான ஈரப்பதம் கொடுக்கும் பொருள். இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருப்பதோடு, முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடுகிறது. தேனில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கத்தை குறைக்க உதவுகின்றன. இதற்காக, சுத்தமான தேனை முகப்பருக்கள் உள்ள இடங்களில் மெல்லிய படலமாக தடவவும். பின்னர், 15-20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் அதனை கழுவி விடலாம். இதை வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
கற்றாழை அதன் குளிர்ச்சியூட்டும் பண்புகளுக்காக பெரிதும் அறியப்படுகிறது. இது எரிச்சலடைந்த சருமத்தை பாதுகாத்து, முகப்பருக்களை விரைவாக குணப்படுத்த உதவுகிறது. கற்றாழை இலையிலிருந்து ஜெல்லை எடுக்கவும். இதனை நேரடியாக முகப்பருவின் மீது தடவவும். பின்னர், 20-30 நிமிடங்கள் கழித்து, தண்ணீரில் கழுவி மெதுவாக துடைக்கலாம்.
மேலும் படிக்க: இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் தூக்கம்; நிம்மதியான உறக்கத்திற்கு உதவும் சிம்பிள் டிப்ஸ்
முகப்பருக்களால் ஏற்படும் வீக்கத்தை குறைக்க ஐஸ் கட்டிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது அந்தப் பகுதியில் உள்ள வலியை உடனடியாக குறைத்து தற்காலிக நிவாரணத்தை அளிக்கும். ஒரு ஐஸ் கட்டியை சுத்தமான துணியில் சுற்றவும். அதை வலி உள்ள இடத்தில் 2-3 நிமிடங்கள் வைத்திருக்கவும். தேவைப்பட்டால், ஒரு நாளைக்கு சில முறை இதை மீண்டும் செய்யலாம்.
கிரீன் டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முகப்பருக்களை எதிர்த்து போராடி, வீக்கத்தை குறைக்க உதவுகின்றன. மேலும், இதில் உள்ள பாலிஃபீனால்கள் சீபம் உற்பத்தியை குறைத்து முகப்பருக்கள் வருவதை தடுக்கின்றன. ஒரு கோப்பை கிரீன் டீயை காய்ச்சி ஆறவிடவும். சிறிது காட்டனை அதில் நனைத்து, முகப்பருக்களின் மீது தடவவும். பின்னர், 10-15 நிமிடங்கள் கழித்து, தண்ணீரால் கழுவி விடலாம்.
ஆப்பிள் சிடர் வினிகர் இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டது. இது சருமத்தின் pH அளவை சமநிலைப்படுத்தி, முகப்பருக்கள் வருவதற்கான வாய்ப்பை குறைக்கிறது. ஆப்பிள் சிடர் வினிகரை தண்ணீருடன் 1:3 என்ற விகிதத்தில் கலக்க வேண்டும். பின்னர், காட்டனை பயன்படுத்தி, முகப்பருக்களின் மீது மெதுவாக தடவவும். 5-10 நிமிடங்கள் கழித்து, தண்ணீரில் கழுவலாம். எனினும், ஆப்பிள் சிடர் வினிகரை நேரடியாக பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஏனெனில், இது சருமத்தை எரிச்சலடைய செய்யலாம்.
இந்த எளிய, இயற்கையான வழிகளை பின்பற்றி, முகப்பரு இல்லாத ஆரோக்கியமான, பளபளப்பான சருமத்தை பெறுங்கள்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com