Ignore Negativity : தீயவற்றில் இருந்து விலகி இருப்பதற்கான சிறந்த வழிகள்

தீயவற்றில் இருந்து விலகி இருப்பதற்கு தினமும் இந்த மூன்று விஷயங்களை தவறாமல் செய்யுங்கள். இதன் பிறகு உங்களது எல்லா வேலைகளும் வெற்றி பெறும்.

Main nega

இந்து மதத்தில் வாஸ்து மற்றும் ஜோதிடத்தின்படி தீயவற்றிலிருந்து விலகி இருப்பதற்கு பல வகையான நடவடிக்கைகள் உள்ளன. இதைச் செய்வதன் மூலமாக ஒரு நபர் தொல்லைகளிலிருந்து விடுபட முடியும். வாஸ்து மற்றும் ஜோதிடத்தை முறையாகப் பின்பற்றுவதன் மூலமாக அந்நபர் பல பலன்களைப் பெறத் தொடங்குகிறார்.

 nega

உப்பு பயன்படுத்தி தரையை துடைக்கவும்

வீட்டிலிருந்து தீயவற்றை அகற்ற வேண்டுமானால் தண்ணீருடன் உப்பு சேர்த்து தினமும் தரையை துடைக்கவும். இதன் மூலமாக ஒரு நபர் சிக்கல்களிலிருந்து விடுபட்டு சுப பலன்களைப் பெறலாம். ஆனால் வியாழன் அன்று மட்டும் தண்ணீருடன் உப்பு சேர்த்து தரையை துடைக்க வேண்டாம். அப்படி செய்தால் நிதி இழப்பிற்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும் கண்ணாடி பாத்திரத்தில் உப்பை வைத்திருக்க வேண்டும். அது உங்களை ஒவ்வொரு துறையிலும் வெற்றியடைய உதவும்.

படங்களை சுத்தப்படுத்துங்கள்

வீட்டிலிருந்து தீயவற்றை அகற்றுவதற்கு, வீட்டில் உள்ள படங்களை சுத்தமான துணியால் தினமும் துடையுங்கள். இப்படி செய்வதனால் நீங்கள் தேவையற்ற பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டிய அவசியமிருக்காது. அதே நேரம் நீங்கள் வாழ்க்கையில் எதிர்கொண்டு வரும் அனைத்து பிரச்சினைகளும் விரைவில் தீரும்.

மேலும் படிங்கவிறுவிறுவென நடங்கப்பா! மருத்துவ ஆய்வில் முக்கிய தகவல்

செடிகளைப் பாதுகாத்தல்

வீட்டில் செடிகள் வளர்கிறீர்கள் என்றால் அதில் தினந்தோறும் தண்ணீரை மாற்றுங்கள். அதாவது முந்தைய நாள் அதில் ஊற்றிய தண்ணீரை வெளியேற்றி விட்டு புதிய தண்ணீரை ஊற்றுங்கள். இப்படி செய்வதால் தீயவை நீங்கி, வீட்டைச் சுற்றியுள்ள சூழல் இனிமையாக இருக்கும். கருத்து வேறுபாடுகள் மற்றும் மனக்கசப்பில் இருந்தும் விடுபடலாம்.

 nega

செடி தொட்டியில் மஞ்சள் சேர்க்கவும்

வீட்டில் செடி தொட்டி இருந்தால் தினமும் அதனுடன் மஞ்சள் சேர்க்கவும். இதன் மூலமாக உங்கள் வாழ்க்கையில் வரும் பிரச்சினைகள் நீங்கும். மேலும் செடி தொட்டிக்குள் கட்டெறும்புகள் செல்வதை தடுங்கள். தொட்டிக்குள் கட்டெறும்புகள் சென்று விட்டால் அந்த வீட்டில் ஒருவருக்கு நோய் பாதிப்பு ஏற்பட போகிறது என்று அர்த்தம். அதனால் தொட்டிக்குள் தினமும் மஞ்சள் போடுங்கள்.

இந்த விஷயங்களைச் செய்தால் தீயவற்றிலிருந்து விலகி இருக்கலாமென ஜோதிடர் அரவிந்த் திரிபாதி ஹெர் ஜிந்தகி தளத்திடம் தெரிவித்தார்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP