Kitchen vastu : இல்லத்தரசியின் ஆரோக்கியத்திற்கு சமையல் அறை வாஸ்து முக்கியம்! இதுவே சரியான திசை

வாஸ்து சாஸ்திரப்படி சமையலறை அமைப்பது நல்லது. ஏனெனில் இது குடும்பத் தலைவி, இல்லத்தரசியின் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. மேலும் வீட்டின் பொருளாதார நிலையை குறிக்கிறது.

kitchen vastu direction
kitchen vastu direction

நாம் தினமும் கஷ்டப்பட்டு வேலை பார்ப்பதற்கு எதற்காக என பொதுமக்களிடம் கேள்வி எழுப்பப்பட்டால் அதற்கு பலருடைய பதில் மூன்று வேளைக்கும் நன்றாக சாப்பிடணும் அல்லது பசிக்கு சாப்பிட்டு நன்றாக உறங்க வேண்டும் என்பதே. இதற்கு மிகவும் அடிப்படையானது வீட்டின் சமையல் அறை. உறவினர் யாராவது வீட்டிற்கு வந்து சமையல் அறையை பார்த்தால் நம்முடைய பொருளாதார சூழலை அறிந்து விடுவார்கள். இல்லத்தரசிகளின் கோட்டை என்று அழைக்கப்படும் சமையல் அறையை வாஸ்துபடி அமைப்பது மிகவும் முக்கியம். இது அவர்களின் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. வீட்டின் எந்த திசையில் சமையலறை இருக்க வேண்டும் ? சமையல் அறையில் இடம்பெற வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்...

kitchen sink direction as per vastu

சமையலறை வாஸ்து

  • சமையல் அறை அமைப்பதற்கான சிறந்த இடம் என்றால் அது அக்னி மூலை தான்.
  • வாயு மூலையிலும் சமையல் அறை அமைக்கலாம் எனினும் இந்த இரண்டு மூலைகளில் சிறந்தது அக்னி மூலை. இது ஸ்திரமான குடும்ப நிலையைத் தரும்.
  • அக்னி மூலை என்பது நெருப்புக்கு உரியது. இந்த இடத்தில் கிச்சன் அமைப்பதற்கு அறிவியல் ரீதியான காரணமும் உள்ளது.
  • இந்தியாவில் மேற்கு திசையில் இருந்து காற்று வீசுகிறது. அதனால் அக்னி மூலையில் சமையலறை வைக்கும் போது இங்கு உருவாகும் புகை மேற்கில் இருந்து வீசும் காற்றால் எளிதில் வெளியேறி விடும்.
  • குபேர மற்றும் ஈசான்ய மூலையில் சமையலறை இடம்பெறக் கூடாது.
  • சமையல் அறையில் தென் கிழக்கு மூலையில் அடுப்பு வைத்து சமைப்பது நல்லது.
  • வட கிழக்கு திசை சமையலறை வைப்பதற்கு உகந்த இடமே கிடையாது. இது அக்னி மூலை ஆகும். அக்னியால் தண்ணீர் எப்படி கொதிக்குமோ அது போல அங்கு சமையல் அறை வைத்தால் பொருளாதார பாதிப்புக்கு ஆளாவீர்கள்
  • அக்னி மூலையில் கை கழுவும் சிங்க் வைத்தால் தண்ணீர் போல் பணம் விரயம் ஆகும். இதை கவனத்தில் கொள்ளுங்கள்.
  • தென் கிழக்கு மூலையில் சமையலறை இருப்பது வாழ்வில் முன்னேற்றத்தை கொடுக்கும்.
  • தென் கிழக்கில் அடுப்பு வைத்து கிழக்கு பார்த்தபடி சமைக்கலாம். தெற்கு நோக்கி சமைக்க கூடாது.
  • வடக்கு நோக்கி சமைக்கும்படி மேடை அமைந்திருந்தால் வடமேற்கு மூலை பகுதியில் அடுப்பை வைத்து சமைக்கவும்.
  • மேற்கு நோக்கி சமைக்கும் படியாக மேடை அமைந்திருந்தால் வட மேற்கு பகுதியில் அடுப்பை வைத்து சமைக்கலாம்.
  • உப்பு லட்சுமியாக பார்க்கப்படுகிறது. எனவே கண்ணாடி குவளையில் உப்பை நிறைவாக வைத்திருங்கள்.

இது போன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள். வாஸ்து குறிப்புகள் மூலம் பயன்பெறுங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP