herzindagi
image

கண் இமை துடித்தால் என்ன அர்த்தம்? ஜோதிடம் கூறுவது என்ன?

என்னதான் கண் துடிப்பதற்கு அறிவியல் காரணங்கள் இருந்தாலும் மக்கள் பலரும் ஜோதிட காரணங்களை தான் நம்புவார்கள். அந்த வரிசையில் கண் துடிப்பதற்கு காரணம் மற்றும் ஜோதிடம் என்ன கூறுகிறது என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
Editorial
Updated:- 2024-12-03, 12:19 IST

நம் கண்கள் சில சமயங்களில் துடிப்பதை நாம் கவனித்திருப்போம். ஆனால் இது அடிக்கடி நிகழ்வதில்லை. பெரும்பாலானோர் எப்போதாவது இந்த கண்கள் துடிப்பதை உணர்ந்திருப்பார்கள். என்னதான் கண் துடிப்பதற்கு அறிவியல் காரணங்கள் இருந்தாலும் மக்கள் பலரும் ஜோதிட காரணங்களை தான் நம்புவார்கள். அந்த வரிசையில் கண் துடிப்பதற்கு காரணம் மற்றும் ஜோதிடம் என்ன கூறுகிறது என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

நம் முன்னோர் காலத்தில் இருந்து கண் இமை துடிப்பதற்கு பல நம்பிக்கை உள்ளது. கலாச்சார நம்பிக்கை அல்லது நம் முன்னோர்களின் கூற்றுப்படி மேல் கண் இமை துடித்தால் உங்கள் நெருங்கிய உறவினர் இறந்து விட்டார் என்று கூறப்படுகிறது. இதுவே வலது கண் துடித்தால் உங்களுக்கு வெற்றி, பாராட்டு அல்லது நல்ல செய்தி கிடைக்கப் போகிறது என்று கூறுவார்கள். அதேப் போல உங்களின் வலது கண் துடித்தால் நீங்கள் விரைவில் ஒரு புதிய நபரை சந்திக்க நேரிடும் என்றும் கூறப்படுகிறது.

23-63fc26b104af0

ஜோதிடம் கூறுவது என்ன?


ஜோதிடத்தின் படி ஆண்களுக்கு இடது கண் துடித்தால் அதிர்ஷ்டம் என்று கூறப்படுகிறது. அதேப் போல ஆண்களுக்கு வலது கண் துடித்தால் துரதிர்ஷ்டம் உண்டாகும் எனவும் கூறுகிறார்கள். இதுவே பெண்களுக்கு இடது கண் துடித்தால் பிரச்சனைகள் ஏற்படும் என்றும் வலது கண் துடித்தால் அதிக அளவு நன்மைகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது.

 மேலும் படிக்க: வீட்டில் ஆமை சிலை வைக்கலாமா? வாஸ்து கூறுவது என்ன?


அறிவியல் காரணம் என்ன?



உங்கள் கண் இமை துடிப்பது மற்றும் கண் இமை இழுப்பது பார்க்கின்சன் நோய், வலிப்பு மற்றும் மன அழுத்தம் போன்றவற்றால் ஏற்படும் நரம்பியல் பிரச்சனைகளாக மருத்துவ ரீதியாக கூறப்படுகிறது. ஒரு சில நேரங்களில் உங்கள் உடலில் மைக்ரோ மற்றும் மேக்ரோ நியூட்ரியன்ட்கள் குறைப்பாடாலும் ஊட்டச்சத்துக்கள் குறைபாடு காரணமாகவும் இது போல கண் இமை துடிக்கும் பிரச்சனைகள் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

eye-blinking

ஒரு சில நேரங்களில் கண் இமைகள் துடிப்பது உடலுக்கு பெரிய பிரச்சனை எதுவும் இல்லை என்றாலும் உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். இந்த கண் துடிப்பதற்கு ஜோதிடம் பல காரணங்கள் கூறினாலும் உண்மையில் உடல் சோர்வு, மங்களான வெளிச்சத்தில் படிப்பது அல்லது வேலை செய்வது, தூக்கமின்மை, மன அழுத்தம், அதிகப்படியான காபி குடிக்கும் பழக்கம், நரம்பியல் பிரச்சனைகள், அதிக நேரம் கணினியில் வேலை செய்வது போன்ற காரணங்கள் கண் இமை துடிப்பதற்கான முதன்மை காரணங்களாக அமைகிறது. இதனை குணப்படுத்த உங்கள் உணவில் ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருட்களை சேர்த்து சாப்பிடுவதை உறுதிப்படுத்துங்கள். அதே போல கண்ணிமை துடிக்கும் போது உங்கள் கண்களை உடனடியாக கைகளை வைத்து ரப் செய்யாதீர்கள். இது உங்கள் கண்களுக்கு தொந்தரவு அளிக்கும்.

Image source: google

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com