இரவில் நாம் தூங்கும் போது கனவு வருவது இயல்பு தான். கனவுகள் நம் உள்ளுணர்வுடன் தொடர்புடையது என்று ஜோதிடம் கூறுகிறது. குறிப்பாக, திருமணம் போன்ற முக்கியமான நிகழ்வுகள் உங்கள் கனவில் வந்தால், அது எதிர்காலத்தில் நடக்கும் மாற்றங்களை சுட்டிக்காட்டும். இது நல்ல அறிகுறியாகவோ அல்லது எச்சரிக்கையாகவோ இருக்கலாம். அந்த வரிசையில் திருமணம் நடப்பது போல கனவு கண்டால் அதற்கு அர்த்தம் என்ன என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
ஜோதிடத்தின்படி, திருமணம் குறித்து கனவு காண்பது உங்கள் வாழ்க்கையில் புதிய தொடர்புகள் அல்லது முன்னேற்றங்கள் வரப்போகின்றன என்பதைக் குறிக்கும். இது உண்மையான திருமணத்தை மட்டுமல்ல, உங்கள் தொழில் அல்லது தனிப்பட்ட வளர்ச்சியையும் சார்ந்திருக்கலாம்.
உங்கள் கனவில் மகிழ்ச்சியான திருமணக் காட்சிகள் இருந்தால், அது உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் வரும் என்பதைக் குறிக்கிறது. தெளிவான மற்றும் அமைதியான திருமண கனவுகள் வந்தால் வெற்றி மற்றும் முன்னேற்றத்தை சுட்டிக்காட்டுகின்றன. ஒரு வேலை திருமணம் போன்ற சடங்குகள் கனவில் தென்பட்டால், அது உங்கள் வாழ்க்கையில் நல்ல நிகழ்வுகள் நடக்கும் என்பதற்கான அடையாளம் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது.
உங்கள் கனவில் திருமணம் கலகலப்பாக இல்லாமல், சண்டைகள் அல்லது குழப்பங்களுடன் இருந்தால், அது உங்கள் உறவுகளில் பிரச்சினைகள் வரக்கூடும் என்பதைக் குறிக்கும். அதே போல திடீரென திருமணம் நின்றுபோவது போன்ற கனவுகள் கண்டால், உங்கள் வாழ்வில் திட்டங்கள் தடைபடும் அல்லது தாமதமாகும் என்பதைக் காட்டுகிறது. மேலும் கருப்பு நிற ஆடைகளில் திருமணம் கனவு கண்டால், அது உங்கள் குடும்பத்தில் துக்கம் அல்லது இழப்பை சுட்டிக்காட்டும்.
மேலும் படிக்க: இந்த இரண்டு ராசிகள் நண்பர்களாக இருக்க முடியாது; உங்க ராசி இருக்கானு பாருங்க
ஜோதிடத்தில், சுக்கிரன் (வீனஸ்) காதல் மற்றும் திருமணத்தை கட்டுப்படுத்துகிறது. கனவில் திருமணம் வருவது சுக்கிரனின் செல்வாக்கை சார்ந்ததாக இருக்கலாம். உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால், கனவு நல்ல நம்பிக்கையைத் தரும். இதுவே சுக்கிரன் பலவீனமாக இருந்தால், உறவுகளில் கவனம் தேவைப்படும்.
திருமணம் குறித்த கனவு வந்தால், பின்வருவனவற்றை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்:
கனவுகள் நம் மனதின் ஆழத்திலிருந்து வரும் செய்திகள் தான். திருமணம் குறித்த கனவுகள் எதிர்காலத்தைப் பற்றி சில குறிப்புகளைத் தரும். ஆனால், ஒவ்வொரு கனவையும் நேரடியாக விளக்காமல், உங்கள் வாழ்க்கை நிலைகளுடன் பொருத்திப் பார்க்கவும். நல்ல கனவுகள் நம்பிக்கையைத் தரும் மற்றும் கெட்ட கனவுகள் எச்சரிக்கையாக இருக்கும் என்று நினைவில் கொள்ளுங்கள்.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com