herzindagi
image

வைகுண்ட ஏகாதசி 2025 : எம்பெருமானின் அருளை பெற்றுத் தரும் வழிபாடு, விரத முறை

வைகுண்ட ஏகாதசி அன்று செய்ய வேண்டிய வழிபாடு, விரத முறை மற்றும் எம்பெருமானுக்கு துளசி இலை நெய்வேத்தியத்தின் சிறப்பு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். ஜனவரி 11ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி நாளில் பிரசித்தி பெற்ற பெருமாள் கோயில்களில் அதிகாலை நேரத்தில் சொர்க்கவாசல் திறக்கப்படும்.
Editorial
Updated:- 2025-01-09, 20:52 IST

எம்பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத நாட்கள் உண்டு. அதில் சிறப்புக்குரிய விரதம் ஏகாதசி திருநாள். மாதந்தோறும் ஏகாதசி நாளில் வழிபாடு நடத்தினாலும் மார்கழி மாதத்தில் வரக்கூடிய வைகுண்ட ஏகாதசி சிறப்பு வாய்ந்தது. குறிப்பாக மார்கழி மாதத்தில் வரக்கூடிய ஏகாதசி நாளில் சொர்க்கவாசல் திறப்பு அரங்கேறும். பரம பத வாசல் வழியாக பக்தர்களுக்கு எம்பெருமான் அருள்பாலிப்பார். இதை நாம் நேரில் கண்டால் பாவங்கள் நீங்கி புன்னியம் கிடைத்து வைகுண்டம் செல்லலாம். தெரியாமல் செய்த பாவங்களுக்காக மனம் உருகி எம்பெருமானிடம் நாம் செய்த தவறுகளை மன்னிக்கும்படி வேண்டினால் புன்னியம் கிடைக்கும்.

வைகுண்ட ஏகாதசி விரதம்

இந்த விரதம் கடைபிடிப்பது மிகவும் கடினமானது. வைகுண்ட ஏகாதசி விரதத்தை மூன்று நாட்களுக்கு கடைபிடிக்க வேண்டும். கடுமையான இந்த ஏகாதசி விரதத்தை கடைபிடித்தால் எம்பெருமானின் அருள் கிடைக்கும். ஆண்டின் பிற மாதங்களில் உள்ள ஏகாதசி விரதங்களை நாம் தவற விட்டாலும் மார்கழி மாதத்தில் வரக்கூடிய வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருந்து வழிபாடு செய்தால் நிச்சயமாக எம்பெருமானின் அருள் கிடைக்கும்.

வைகுண்ட ஏகாதசி நாளில் தமிழகத்தில் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளும் ரங்கநாதர் மிகவும் தொன்மையானவர். இரண்டு நாட்களுக்கு ஸ்ரீரங்கமே விசேஷமாக காட்சியளிக்கும். முதல் நாளில் எம்பெருமான் மோகினி அவதாரம் எடுத்து காட்சி தருவார். இரண்டாம் நாளில் வைகுண்ட வாசல் வழியாக நாராயணர் எழுந்தருளி நமக்கு அருள்பாலிப்பார்.

மேலும் படிங்க மார்கழி மாதத்தில் எதை செய்யணும் ? செய்யக் கூடாது என தெரிஞ்சுகோங்க

வைகுண்ட ஏகாதசி நாட்கள்

9-1-2025 காலை மோகினி அவதாரம்
10-1-2025 அதிகாலை பரமபத வாசலில் காட்சி

9-1-2025 தசமி மதியம் 12:03 மணி வரை
10-1-2025 ஏகாதசி காலை 10:02 மணி வரை
11-1-2025 துவாதசி காலை 8.13 மணி வரை

வைகுண்ட ஏகாதசி வழிபாட்டு முறை

வைகுண்ட ஏகாதசி விரதம் தசமியில் ஆரம்பித்து துவாதசியில் பூர்த்தி செய்ய வேண்டும். ஏகாதசி அன்று வீட்டின் அருகே உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபடுங்கள். 10ஆம் தேதி முழுவதுமே உபவாசம் இருங்கள். வீட்டில் உள்ள பெருமாள் படத்திற்கு துளசி இலைகளால் அர்ச்சனை செய்யுங்கள். மறுநாள் துவாதசி அன்று அகத்தி கீரை, நெல்லிக்காய் கொண்டு சமைத்து பாரணை செய்து விரதத்தை முடிக்கவும்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com