வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்லவும், நினைத்த காரியங்களை நிறைவேற்றவும் போரடிக்கொண்டு இருக்கோம். அதேபோல் நமது வாழ்க்கையில் வெற்றி பெற முன்னேறி செல்லும்போது பல தடைகள் வரும். இந்த தடைகளை நீக்க, நினைத்த காரியத்தை நிரைவேற தமிழ் கடவுளான முருகனை வழிப்பாடலாம். முருகன் மிகவும் எளிமையான கடவுள். நம் கேட்டதை இல்லையென்று சொல்லாமல் உடனடியான கொடுக்கக்கூடிய சக்திவாய்ந்த தமிழ் கடவுள். முருகன் கேட்டதை கொடுக்க சில மந்திரங்களை சொன்னால் போது, உடனடியாக கைக்கொத்து தூக்கிவிடுவார்.
முருகனை வழிபட முதலில் பக்தர்களுக்கு நினைவில் வரும் மந்திரத்தில் திருப்புகழ் பாடல் மற்றும் கந்த சஷ்டி கவசம். அதனுடன் சேர்த்து சில மந்திரங்களை பார்க்கலாம். அவற்றால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்துக்கொள்ளலாம்.
அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி - 51
"உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒலியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே"
விளக்கம் : உருவாக, உருவமில்லாததாக, உள்ளதாக, இல்லாததாக, நறுமணமாக, மலராக, மணியாக, உலகின் மூலப்பொருளாக, உயிருக்கு உயிராக, வீடுபேறை அடைகின்ற விழியாக விளங்கும், என் முருகா, வந்து அருள் புரிவாய்.
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் - 38
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.
விளக்கம்: நாட்கள் அடியேனை என்ன செய்யும்? வினைதான் என்ன செய்யும்?
அடியேனைத் தேடிவந்த கோள் தான் என்ன செய்யும்? கொடிய
இயமனால்தான் என்ன செய்யமுடியும்? குமரக்கடவுளின் இரண்டு
திருவடிகளும் சிலம்புகளும் சதங்கையும், தண்டைகளும் ஆறு
திருமுகங்களும் பன்னிருதோள்களும் கடப்ப மலர் மாலையும்
அடியேனுக்கு முன்வந்து தோன்றிடுமே.
முருகன் ஸ்லோகம்
"ஞான சக்திதர ஸ்கந்தா
வள்ளிகல்யாண சுந்தரா
தேவசேனா மண காந்த
கார்த்திகேயா நமோ ஸ்துதே
ஓம் சுப்ரமணியாய நமஹ"
மேலும் படிக்க: நிச்சயிக்கப்பட்ட பல திருமணங்களில் பிரச்சனைகள் வர காரணம் இந்த தோஷங்களாக இருக்கலாம்
இந்த முகருன் மந்திரங்களை சொல்லி வந்தால் வாழ்க்கையில் வரக்கூடிய அனைத்தி கஷ்டத்தை தீர்த்து நல்வாழ்க்கையை மேம்படுத்துவர். விட்டில் தினமும் முருகனை நினைத்து பூஜை செய்யுங்கள், ஆறுப்படை முருகனை வழிபடுங்கள், வேல் பூஜை செய்யுங்கள், சஷ்டி விரதம் இருப்பது வாழ்க்கையில் பெரும் நன்மையை தரும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation