சாமியே சரணம் ஐயப்பா.... இந்த பக்தி கோஷம் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் இந்தியா முழுவதும் பரவலாக ஒலிக்கப்படும். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து கார்த்திகை மாதம் கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் சபரிமலையை நோக்கி லட்சக்கணக்கான பக்தர்கள் படையெடுப்பார்கள.
தென்னிந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று சபரிமலை. கேரளாவின் பட்டானந்திட்டா மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இக்கோயிலில் ஐயப்ப சுவாமி வீற்றிருக்கிறார். குறிப்பாக, தென்னிந்தியாவின் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனுக்கு மாலை அணிந்து 41 நாள் கடுமையான மண்டல விரதம் இருந்து பெருவழிப் பாதையாக எரிமேலியில் இருந்து பாதயாத்திரையாக சென்று புனித பம்பை நதியில் நீராடி பகவான் ஐயப்பனை தரிசிப்பார்கள்.
மேலும் ஆண்டு முழுவதும் ஒவ்வொரு மாதமும் பகவான் ஸ்ரீ ஐயப்பன் கோவில் நடை திறந்து பூஜை வழிபாடுகள் நடக்கும். கேரளா அரசு மற்றும் சபரிமலை கோவில் தேவசம் போர்டு சார்பில் ஒவ்வொரு மாதமும் எப்போது சபரிமலை கோவில் நடை திறக்கும் என்பதை தெரிவிப்பார்கள். இந்த நிலையில் செப்டம்பர் மாதம் சபரிமலை கோவில் நடை திறப்பு எப்போது என்பதை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஐயப்பன் கலியுக வரதன் ஐயப்பன்
ஐயப்பன் கலியுக வரதன் என்று அழைக்கப்படுவார். கலிகால தோஷத்தை அகற்ற ஐயப்பனைத் தரிசித்தால் போது என்கிற உணர்வு மேலிடுகிறது. ஆண்டுதோறும் இருமுடி ஏந்தி, சபரிமலைக்குப் புனித யாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது. கடுமையான முறையில் அனைத்து விதமான விரதங்களையும் கடைப் பிடிக்கும் மாலையிட்ட ஐயப்ப பக்தன், சுவாமி ஐயப்பனின் பரிபூரண அனுக்கிரகம் பெற்றிருப்பதால், பக்தனையே ஐயப்பனின் அவதாரமாக மற்றவர்கள் மதிக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.
லட்சக்கணக்கான மக்கள் மாலை, இருமுடி அணிவித்து, ஐயப்ப சரண கோஷம் முழங்க பம்பை நதியில் புனித நீராடி, பதினெட்டு படிகள் ஏறி ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் திரள்கின்றனர். சபரிமலை கோவிலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 41 நாட்கள் மண்டல கால பூஜை ,மண்டல பூஜை என்றும் அழைக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்ற ஐயப்ப பக்தர்கள் 41 நாள் விரதத்தை தொடங்குகின்றனர்.
இந்த நிலையில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. ஒன்பது நாட்கள் பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இந்த நேரத்திலும் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை காண வருவார்கள். அண்மையில் கேரளா மாநிலம் வயநாட்டில் மிகப்பெரிய நிலச்சரிவு கேரள மக்கள் மிகப்பெரிய சிரமத்தை சந்தித்தனர்.
தொடர்ந்து இயல்பு நிலைக்கு திரும்பி வரும் கேரள மாநிலத்தில் அடுத்தடுத்து தொடர்ந்து மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என்பதால் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேரள மாநில அரசும் செய்து வருகிறது. தொடர்ந்து சபரிமலை கோவில் தேவசம்போர்டு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் பக்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதம் சபரிமலை நடை திறப்பு எப்போது?
- கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவில் திருநடையானது ஓணம் மற்றும் மலையாள கன்னி மாத பூஜைக்காக வருகின்ற செப்டம்பர் 13 ம் தேதி மாலை 5 மணிக்கு தந்திரி பிரம்மதத்தன் அவர்கள் தலைமையில் திறக்கப்படுகிறது.
- குறிப்பாக செப்டம்பர் மாதம் 13ம் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு 21 ம் தேதி வரை 9 நாட்கள் திறந்து இருக்கும். அன்றைய நாட்கள் மட்டும் பக்தர்கள் கோவிலுக்கு வர அனுமதிக்கப்படுவார்கள்.
- 14 ம் தேதி காலை 4 மணிக்கு கணபதி ஹோமமும் அதனை தொடர்ந்து நெய் அபிஷேகம் நடைபெறும்.
- 14 ம் தேதியிலிருந்து தொடர்ந்து காலை நெய் அபிஷேகமும், மாலை படி பூஜையும் நடைபெறும்
- செப்டம்பர் 15 ம் தேதி ஓணம் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
- செப்டம்பர் 13 ம் தேதி முதல் 21 ம் தேதி வரை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறந்து இருக்கும்.
- செப்டம்பர் 21 ம் தேதி மாலை படி பூஜையும், தொடர்ந்து அத்தாள பூஜைக்கு பிறகு இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடப்பட்டு திருநடை அடைக்கப்படும்.
சபரிமலைக்கு ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் https://sabarimalaonline.org/#/login என்ற இணையதள பக்கத்தில் முன்பதிவு செய்து Virtual- Q டிக்கட் எடுத்து அந்த நாட்களில் மட்டும் தரிசனம் செய்ய அனுமதிக்கபடுவார்கள்.
இதுபோன்ற ஆன்மிகம் சார்ந்த தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள் HerZindagi Tamil
image source: google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation