தமிழகத்தில் வாழும் இஸ்லாமியர்கள் 30 நாட்கள் நோன்பு கடைபிடிக்கும் புனித ரமலான் மாதம் மார்ச் 2ஆம் தேதி தொடங்குகிறது. ஒரு சில நாடுகளில் சந்திர நாட்காட்டி காரணமாக பிப்ரவரி 28ஆம் தேதியே ரமலான் மாதம் தொடங்கிவிட்டது. ரமலான் மாதத்தில் காலை சூரிய உதயத்தில் இருந்து மாலை சூரியன் மறைவு வரை இஸ்லாமியர்கள் உணவு உண்ணாமல் தண்ணீர் குடிக்காமல் விரதம் கடைபிடிப்பது வழக்கம். ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது இஸ்லாம் மதத்தின் ஐந்து முக்கிய கடமைகளில் ஒன்றாகும். சிறியவர் முதல் பெரியவர் வரை வயது வித்தியாசம் பாராமல் நோன்பு நோற்பது உண்டு. புனித ரமலான் மாதத்தின் வரலாறு, முக்கியத்துவம் இங்கு பகிரப்பட்டுள்ளது.
ரமலான் மாத நோன்பு வரலாறு
கி.பி.622ல் முகமது நபி மெக்காவில் இருந்து மதீனாவிற்கு இடம்பெயர்ந்ததை ஹிஜ்ரத் என்று சொல்கின்றனர். அப்போது இஸ்லாமியர்களின் ஆண்டு கணக்கு சந்திர நாட்காட்டியை பொறுத்து தொடங்கியது. அதன் பிறகு இஸ்லாமிய நாட்காட்டியின் படி 9வது மாதமான ரமலானில் நோன்பு நோற்பது இஸ்லாமியர்களின் மத நூலான குர்ஆனில் கடமையாக்கப்பட்டது. தொடர்ச்சியாக 30 நாட்களுக்கு இஸ்லாமியர்கள் கடுமையான விரதம் கடைபிடிக்கின்றனர். முகமது நபி மெக்காவில் இருந்த காலக்கட்டத்தில் நோன்பு நோற்கும் வழக்கம் இருந்ததாக தகவல்கள் இல்லை.
ரமலான் மாத முக்கியத்துவம்
இஸ்லாத்தில் மட்டுமே தொடர்ச்சியாக ஒரு மாதம் நோன்பு நோற்கும் வழக்கம் உலகளவில் உள்ளது. கிபி 622ல் முகமது நபி மெக்காவில் இருந்த போது சந்திர மாதத்தின் 3 நாட்களில் நோன்பு கடைபிடித்துள்ளார். மூஸா நபி தூர் மலையில் 30 நாட்களுக்கு நோன்பு இருந்துள்ளார். மதீனா மக்கள் இஸ்லாமிய நாட்காட்டியின் முதல் மாதமான முஃகர்ரம் மாதத்தின் 10வது நாளான ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்பதை கண்டு அவரும் அதைப் பின்பற்றியுள்ளார்.
ரமலான் நோன்பு
புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்று அல்லாவிடம் வேண்டினால் அது நிச்சயம் நடக்கும் என்பது நம்பிக்கை. தீய எண்ணங்களை விடுத்து மனத் தூய்மையுடன் கடைபிடிக்க வேண்டிய விரதம் இது. காலை சூரிய உதயத்திற்கு முன்பாக பால், தண்ணீர், பேரீச்சை போன்ற எளிமையான உணவுகளை இஸ்லாமியர்கள் எடுத்துக் கொள்கின்றனர். மாலையின் சூரியன் மறைவுக்கு பிறகு நோன்பு கஞ்சி குடித்து சமைத்த உணவுகளை சாப்பிடுவர். ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிப்பதாக தரவுகள் உறுதிசெய்கின்றன.
ரமலான் மாதத்தின் இறுதியில் ஈகைத் திருநாளான ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation