நாக தோஷம் நீங்க செய்ய வேண்டிய வழிபாடு! நேரம் & பூஜை செய்யும் முறை...

நாக சதுர்த்தி நாளில் நாகர்களை வழிபட்டு நாக தோஷத்தில் இருந்து விடுபடுங்கள். கருட பஞ்சமியில் கெளரியை வழிபட்டு இதர பயங்களில் இருந்து விலகிடுங்கள்.

naga chaturthi date
naga chaturthi date

பொதுவாகவே ஒரு மனிதனின் வாழ்க்கையில் எந்தெந்த காலங்களில் எதெல்லாம் சரியாக நடக்க வேண்டுமோ அவையெல்லாம் நடக்க வேண்டும். அப்படி நடக்காத பட்சத்தில் அந்த நபருக்கு ஒரு பிரச்னை உள்ளது என புரிந்து கொள்ளலாம். திருமணம் கைகூடல், குழந்தை வரன் இல்லாமை போன்ற பிரச்னையின் காரணியை தேடினால் அது அநேகமாக நாக தோஷமாக இருக்கும். நாக தோஷம் இருந்தால் அதிலிருந்து விடுபடுவதற்கு நிறைய வழிபாட்டு முறைகளை முன்னோர் சொல்லி தந்துள்ளனர். சிலர் காளஹஸ்திக்கு சென்று தோஷம் நீங்க வழிபடுவார்கள்.

garuda panchami puja

நாக தோஷத்தின் பின்னணி

நமது குடும்ப வரலாற்றில் யாரேனும் பாம்பை அடித்திருந்தால் அல்லது பாம்புக்கு தீங்கு செய்திருந்தால் வழி வழியாக அந்த சாபம் (தோஷம்) தொடரும். எனவே நாக தோஷம் விலக நாக சதுர்த்தி மற்றும் கருட பஞ்சமி நாட்களில் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

நாக சதுர்த்தி - 8ஆம் தேதி

கருட பஞ்சமி - 9ஆம் தேதி

நாக சதுர்த்தி வழிபாட்டு நேரம்

காலை 7.35 மணி முதல் 8.55 மணி வரை

காலை 10.35 மணி முதல் 11.30 மணி வரை

ராகு காலம்

மதியம் 1.30 மணி முதல் 3.00 மணி வரை

கருட பஞ்சமி நேரம்

காலை 9 மணி முதல் 10:20 மணி வரை

நாக சதுர்த்தி நாளில் ராகு காலத்தில் வழிபாடுவது விஷேமானது. மதிய நேரத்தில் கோவில் நடை சாத்தி இருந்தால் வீட்டிலேயே வழிபடவும். கோவிலில் உள்ள நாகர் சிலைகளுக்கு பால், மஞ்சள் கொண்டு அபிஷேகம் செய்யவும். நீங்கள் ஒரு லிட்டர் பால் ஊற்ற வேண்டும் என்பது அவசியமல்ல 10 ரூபாய்க்கு பால் பாக்கெட் மற்றும் கொஞ்சம் மஞ்சள் கொண்டு அபிஷேகம் செய்யலாம். நாகர்களிடம் துன்பத்தில் இருந்து விடுபட வேண்டி வழிபடவும்.

வீட்டில் வழிபடுவதாக இருந்தால் நாகத்தின் உருவத்தை வரைந்து வழிபடலாம் அல்லது நாக வெள்ளியை அபிஷேகம் செய்யலாம். பால் உள்ளிட்ட பொருட்களை கொண்டு நெய் வேத்தியம் செய்யவும். வழிபட்ட பிறகு பாலை மரத்தடியில் ஊற்றவும். இந்த வழிபாடு உங்களிடம் உள்ள அச்சத்தை விலகச் செய்யும்.

கருட பஞ்சமி வழிபாடு

கருட பஞ்சமி நாளில் கெளரி வழிபாட்டை மேற்கொள்வது நல்ல பலன்களை தரும். கெளரி படத்திற்கு சந்தனம், குங்குமம் வைக்கவும். கருடன் படத்திற்கு துளசி மாலை போடவும். கருடனின் வலதுபுறத்தில் சிவப்பு கயிற்றில் பத்து முடிச்சு போட்டு வைக்கவும். கொலுக்கட்டையோடு நெய் வேத்தியம் செய்வது நல்லது. வழிபாட்டிற்கு பிறகு சிவப்பு கயிற்றை கையில் கட்டிக் கொள்ளுங்கள். வாகனம் ஓட்டுவதில் பயம் இருந்தால் சாவியை தெய்வத்தின் பாதத்தில் வைத்து வழிபடவும். இதனால் திருஷ்டிகளும் நீங்கும்.

இதுபோன்ற ஆன்மிக கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP